அமெரிக்காவின்-அழுத்தத்தை-மீறி-ரஷ்யாவிடம்-கச்சா-எண்ணெய்-வாங்குகிறது-இந்தியா:-4-சரக்கு-கப்பல்கள்-குஜராத்-வந்தன
12 Aug 2025

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் அழுத்​தத்தை மீறி ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இந்​தியா தொடர்ந்து வாங்கி வரு​கிறது. 4 சரக்கு கப்​பல்​களில் ரஷ்ய கச்சா எண்​ணெய் குஜ​ராத் வந்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. ரஷ்​யா, உக்​ரைன் இடையே மூன்​றரை ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போர் காரண​மாக ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வா​யுவை இறக்​குமதி செய்​வதை ஐரோப்​பிய நாடு​கள் முழு​மை​யாக நிறுத்​தி​விட்​டன. இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விடம் இருந்து மிகக் குறைந்த விலை​யில் கச்சா எண்​ணெயை இந்​தியா இறக்​குமதி செய்து வரு​கிறது. தற்​போது இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் தேவை​யில் 40 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்து வரு​கிறது.

பிற செய்திகள்: