அமெரிக்காவுடன்-வர்த்தக-ஒப்பந்தம்-தாமதமாவது-ஏன்?---விவசாயிகளை-பாதிக்கும்-அம்சங்களை-ஏற்க-இந்தியா-மறுப்பு
12 Aug 2025

புதுடெல்லி: அசைவ பால் மற்​றும் மரபணு மாற்ற தானிய விவ​காரங்​களால் இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளி​யிட்​டார். இதன்​காரண​மாக உலகம் முழு​வதும் பொருளா​தார மந்தநிலை ஏற்​பட்​டது. அமெரிக்கா உட்பட பல்​வேறு நாடு​களின் பங்கு சந்​தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்​பது தொடர்​பாக பல்​வேறு நாடு​கள் அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தையை தொடங்கின. இந்​திய தரப்​பில் மூத்த பொருளா​தார ஆலோ​சகர் ராஜேஷ் அகர்​வாலும் அமெரிக்க தரப்​பில் பிரென்​ட​னும் கடந்த 5 மாதங்​களாக பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

பிற செய்திகள்: