காலி-மதுபாட்டில்கள்-திரும்ப-பெறும்-திட்டம்-தமிழகம்-முழுவதும்-நவம்பர்-மாதத்துக்குள்-விரிவாக்கம்:-டாஸ்மாக்
12 Aug 2025

சென்னை: தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பாட்​டில்​கள் திரும்​பப் பெறும் திட்​டம் நவம்​பர் மாதத்​துக்​குள் விரி​வாக்​கம் செய்யப்படும் என டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள வனப்​பகு​தி​கள் மற்​றும் சுற்றுலாத்தலங்களில் காலி மது​பாட்​டில்​கள் வீசப்​படு​வ​தால், வனவிலங்​கு​கள் பாதிக்​கப்​படு​வது தொடர்​பான வழக்​கில், இயற்கை சூழலுக்​கும், வனவிலங்​கு​களுக்​கும் ஏற்​படும் பாதிப்பை போக்க, காலி மது​பான பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை முறைபடுத்த சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதைதொடர்ந்து டாஸ்​மாக் நிர்​வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீல​கிரி​யில் உள்ள கடைகளில் காலி மது​பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை செயல்​படுத்​தி​யது. மேலும் இந்த திட்​டத்தை தமிழ்​நாடு முழு​வதும் செயல்​படுத்த நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யது. இந்த திட்​டத்​தின்​படி விற்​பனை செய்​யப்​படும் மது​பாட்​டில்​கள் மீது ரூ.10 கூடு​தலாக விற்க வேண்​டும். இதையடுத்து வாடிக்கையாளர்​கள் காலி பாட்​டில்​களை திரும்​பத் தரும்​பட்​சத்​தில் ரூ.10 அவர்​களிடம் திருப்பி கொடுக்க வேண்​டும்.

பிற செய்திகள்: