இந்திய-விமானங்கள்-தங்கள்-வான்வெளியில்-பறக்க-தடை:-பாகிஸ்தானுக்கு-2-மாதங்களில்-ரூ.1,240-கோடி-இழப்பு
12 Aug 2025

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த தடை விதித்தது அந்நாட்டு அரசு. இந்திய அரசும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜூன் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இதனால் பாகிஸ்தானுக்கு சுமார் 1,240 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 4.1 பில்லியன். இதை அந்த நாட்டின் செய்தி நிறுவனம் அரசு தரப்பு தகவல் உடன் உறுதி செய்து செய்தியாக வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்: