தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

india

49 கட்டுரைகள் india இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி: தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சாபம் பலித்ததாக விமர்சனம்
இந்தியா

ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி: தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சாபம் பலித்ததாக விமர்சனம்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) கட்​சி​யின் தலை​வர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்கு வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக அவர் கடந்த மாதம் சட்​டையை கிழித்​துக்​கொண்டு அழுது தனது விரக்​தியை வெளிப்​படுத்​தி​னார். மேலும், ஆர்​ஜேடி கட்சி 25 இடங்​களுக்கு மேல் தேறாது என்ற சாபத்​தை​யும் வழங்​கி​னார். இவர் வயிறு எரிந்து விட்ட சாபத்​தைப் போலவே ஆர்​ஜேடி 25 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது.

feedburner
21 நவ.
3 min read
‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்
இந்தியா

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

லக்னோ: டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தீவிரவாதிகள் மீது மெஹபூபா முப்திக்கு எப்போதும் அனுதாபம் என உத்தர பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் மொஹ்சின் ராசா விமர்சித்துள்ளார். “தேசத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் அவர்களின் குடும்பம் முதல் ஆளாக வந்து நிற்கிறது. ஏனெனில், அவர்களுக்கும் தீவிரவாதிகளும் இடையிலான உறவு மிகவும் பழையது.

feedburner
21 நவ.
3 min read
உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது
இந்தியா

உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது

பிரயாக்ராஜ்: உ.பி.​யின் பிர​யாக்​ராஜ் மாவட்​டம், பாரா அனல் மின் நிலை​யத்​தில் பணி​யாற்றி வந்​தவர் ரோகித் (35). இவர் லாலாப்​பூர் என்ற கிராமத்​தில் தனது மனைவி சுஷ்மா திவேதி (32) உடன் வாடகை வீட்​டில் வசித்து வந்​தார். இந்​நிலை​யில் சுஷ்மா கடந்த வெள்​ளிக்​கிழமை பிற்​பகல் கழுத்​தில் காயத்​துடன் ரத்த வெள்​ளத்​தில் வீட்​டில் இறந்து கிடந்​தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீ​ஸார், வீட்​டின் தரை​யில், ‘‘நான் மனநிலை சரி​யில்​லா​தவள், எனது கணவர் அப்​பா​வி’’ என ரத்​தத்​தால் எழு​தி​யிருந்​ததை பார்த்​தனர்.

feedburner
21 நவ.
3 min read
காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடி விபத்து: வேலைக்கு போக வேண்டாம் என மகள் தடுத்தும் மீறிச் சென்று உயிரிழந்த டெய்லர்
இந்தியா

காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடி விபத்து: வேலைக்கு போக வேண்டாம் என மகள் தடுத்தும் மீறிச் சென்று உயிரிழந்த டெய்லர்

புதுடெல்லி: காஷ்மீரில் தனது மகள் வேலைக்கு போக வேண்​டாம் என்று தடுத்​தும் மீறிச் சென்று காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்​தில் தையல்​காரர் உயி​ரிழந்​துள்​ளார். ஹரி​யானா மாநிலம் பரி​தா​பாத்​தில் தீவிர​வாத மருத்​து​வர்​களிடம் இருந்து பறி​முதல் செய்யப்பட்ட அம்​மோனி​யம் நைட்​ரேட் உள்ளிட்ட வெடி பொருட்​களை ஆய்​வுக்​காக காஷ்மீர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நவ்​காம் காவல் நிலை​யத்​துக்கு கொண்டு சென்றனர்.

feedburner
21 நவ.
3 min read
பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்
இந்தியா

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

புதுடெல்லி: பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலி​யுறுத்​தி​யுள்​ளார். ஆந்​திரப் பிரதேச மாநிலம் அமராவ​தி​யில் நடை​பெற்ற ‘75-ஆவது ஆண்​டில் இந்​தியா மற்​றும் இந்​திய அரசமைப்​புச் சட்​டம்’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் பேசி​ய​தாவது:

feedburner
21 நவ.
3 min read
ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை
இந்தியா

ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்​களூரு​வைச் சேர்ந்த 57 வயதான பெண், தனி​யார் நிறு​வனத்​தில் நிதிப்​பிரி​வில் உயர் பொறுப்​பில் உள்​ளார். இவரை கடந்த ஆண்டு செப்​டம்​பர் 15-ம் தேதி வாட்​ஸ்​அப் மூலம் மர்ம நபர் ஒரு​வர் தொடர்பு கொண்​டார். மும்​பை​யில் உள்ள கூரியர் நிறு​வனத்​தில் இருந்து பேசுவ​தாக கூறி, ‘‘உங்​களுக்கு வெளி​நாட்​டில் இருந்து பார்​சல் வந்​திருக்​கிறது. அதில் 4 பாஸ்​போர்ட்​கள், 3 கிரெடிட் கார்​டு​கள், போதை பொருட்​கள் உட்ப‌ட தடைசெய்​யப்​பட்ட பொருட்​கள் இருக்​கின்​றன. நீங்​கள் உடனடி​யாக மும்​பைக்கு வரா​விட்​டால், உங்​கள் மீது போலீ​ஸில் புகார் அளிக்​கப்​படும்'' என எச்​சரித்​தார்.

feedburner
21 நவ.
3 min read
மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு
இந்தியா

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம் செய்து கொண்டேன். அப்போதே குடிபோதையில் என்னை வைத்து சூதாட ஆரம்பித்துவிட்டார். எதிர்த்து கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர்.

feedburner
21 நவ.
3 min read
பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை
இந்தியா

பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இந்​நிலை​யில், இப்​போதைய அமைச்​சர​வை​யின் கடைசி கூட்​டம் முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அமோக வெற்றி பெற்​றதற்​காக நிதிஷ் குமாருக்கு அமைச்​சர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர். பின்​னர் இப்​போதைய சட்​டப்​பேர​வையை கலைப்​பது என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, முதல்​வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்​தித்​தார். அப்​போது சட்​டப்​பேர​வையை கலைப்​ப​தற்​கான பரிந்​துரை கடிதத்தை வழங்​கி​னார். இதன்​படி, வரும் 19-ம் தேதி சட்​டப்​பேரவை முறைப்​படி கலைக்​கப்​படும்.

feedburner
21 நவ.
3 min read
மக்கள் இதயத்தில் பிரதமர் மோடி வாழ்கிறார்: மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ்
இந்தியா

மக்கள் இதயத்தில் பிரதமர் மோடி வாழ்கிறார்: மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ்

மும்பை: பிஹாரில் எதிர்க்கட்சிகள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிட்டாலும் வாக்காளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை உறுதியாக ஆதரித்துள்ளனர் என்றும், பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதுபற்றி பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “பிஹாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் தேர்தலில் போட்டியிட்டன, ஆனால் பொதுமக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார். ஒருவரின் குடும்பத்திலோ அல்லது கட்சியிலோ என்ன நடக்கிறது என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். நாங்கள் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துகிறோம்.

feedburner
21 நவ.
3 min read