தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

world

27 கட்டுரைகள் world இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

Share Market: 'இவர்கள்' எல்லாம் இப்போது பங்குகளை விற்கலாம்!
உலகம்

Share Market: 'இவர்கள்' எல்லாம் இப்போது பங்குகளை விற்கலாம்!

"ஈரானுக்கும், எங்களுக்குப் பேச்சுவார்த்தை நடக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதனால், இன்னும் ஐந்து நாள்களுக்கு ஈரான் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ராணுவ தாக்குதல் கூடாது என்று ஆணையிட்டிருக்கிறேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இதனால், அமெரிக்கா, ஆசிய சந்தைகள் பாசிட்டிவாகவே உள்ளது. இந்திய சந்தையிலும் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க வேண்டும் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். அது ஏன் என்று பார்க்கலாம்.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!"போர் தொடங்கியதில் இருந்து சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் தான் உள்ளன. 'Sell on Rise' என்பது சந்தையின் இப்போதைய ஸ்ட்ரேட்டஜி. போரினால் சந்தை இறங்கியிருந்த போது, பங்குகளை வாங்கியவர்கள், இப்போது சந்தை ஏற்றம் காணும்போது அதை விற்கலாம். இந்த நேரத்தில் 'பிராஃபிட் புக்கிங்' செய்வது தான் சரியான அணுகுமுறை. இது ஒரு டிரேடிங் ஸ்டைல் ஆகும். இந்த ஸ்ட்ரேட்டஜியை சந்தை 22,900 - 23,450-க்குள் இருக்கும் போது பயன்படுத்தலாம். இது அப்போது தான் வர்க் அவுட் ஆகும். மீண்டும் வாங்க வேண்டுமென்றால் 22,000 - 22,300 வரும் போது வாங்க வேண்டும். அதன் பின் மேலே சொன்ன ரேஞ்ச் வரும்போது, விற்க வேண்டும். இந்த ரிப்பீட்டு தான் Sell on Rise ஸ்ட்ரேட்டஜி". Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parametersAnalyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

vikatan
30 மார்.
3 min read
'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி
உலகம்

'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி

"இது எனக்கு பாட்டி கொடுத்த தங்கக் கம்மல். எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். ஆனால் என்ன... போரால் துயரப்படும் மக்களுக்காக இதைக் கொடுக்கிறேன்" - ஒன்பது வயது சிறுமி ஆசிர் ஃபாத்திமா பிஞ்சுக்கரங்களால் அணிந்திருந்த காதணியைக் கழற்றித் தந்திருக்கிறார்.ஈரானில் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், உலகத்தையே உலுக்கி உள்ளது... மக்களையும் வெவ்வேறு விதங்களில் பாதித்து வருகிறது. உலகத்தையே பாதித்துள்ளது என்றால், அந்தப் போர் நடக்கும் நாடான ஈரானில் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். With sincere appreciation for the support and solidarity of the esteemed people of India in providing humanitarian assistance through the Embassy’s bank account, we wish to inform you that, in response to your requests and in order to facilitate the process of aid delivery, this… pic.twitter.com/bzKAkuGpnI— Iran in India (@Iran_in_India) March 23, 2026 சமீபத்தில், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நிதியுதவிக்காக ஒரு QR குறியீட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. இதை ஸ்கேன் செய்து ஈரான் மக்களுக்கு உதவ பண செலுத்தலாம் என்பதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.இதற்கு இந்தியாவில் பலரும் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர். பலரும் பணத்தை அனுப்பி அதன் ஸ்கிரீன்ஷாட்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படித்தான் ராம்பன் பகுதியைச் சேர்ந்த ஆசிர் ஃபாத்திமா தனது கம்மலைக் கழற்றி கொடுத்திருக்கிறார். இவர் மட்டுமல்ல.... அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி மிஷா ஷாகிர் தனது உண்டியலை அப்படியே கொண்டு வந்து கொடுத்துள்ளார்."இரண்டு வருஷமா ஈத் பண்டிகைக்காக நான் சேர்த்து வைத்த காசு இது. இப்போது அங்கே இருப்பவர்களுக்குத்தான் இது ரொம்பத் தேவை" என்று மழலை மொழியில் அவர் கூறியது அங்கிருந்த தன்னார்வலர்களை நெகிழ வைத்துள்ளது.இந்த உதவிக்கரம் வெறும் குழந்தைகளோடு நின்றுவிடவில்லை. புத்காம் பகுதியைச் சேர்ந்த ஜனா பேகம் (53) தனது மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த தங்க நகைகளைத் தானமாக வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர்"என் மகளின் திருமணத்தை சில மாதங்கள் தள்ளி வைக்கலாம், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலால் தவிக்கும் மக்களுக்கு உதவுவதே இப்போதைய முதற்கடமை" என்று உறுதியுடன் சொல்லியிருக்கிறார் அவர்.ஆரம்பத்தில் ஜாதிபால், ஹஸ்னாபாத் போன்ற பகுதிகளில் சிறிய அளவில் தொடங்கிய இந்த இயக்கம், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஒரு பெரும் அலையாக மாறியுள்ளது. எல்லைகளைத் தாண்டி மனிதநேயம் விரிகிறது... இணைகிறது!

vikatan
30 மார்.
3 min read
ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?
உலகம்

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

ஹார்முஸ்பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் 'கழுத்துப்பகுதி' என அழைக்கப்படுகிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய கடல் பகுதி, பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் ஒரே வழியாகும்.உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% மற்றும் எல்.என்.ஜி எரிவாயுவில் 25% இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியே கடக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த நீரிணை முதன்மையானது. எண்ணெய் தவிர உணவு, ரசாயனம் மற்றும் மின்னணு பொருட்களின் வர்த்தகத்திற்கும் இதுவே பிரதான வழி.ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்ஈரானும் - அமெரிக்காவும்ஹார்முஸ் நீரிணை முழுமையாக ஈரானுக்குச் சொந்தமானதல்ல. ஹார்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், இப்பகுதியில் ஈரான் தனது ராணுவ பலத்தை பேரளவில் வளர்த்துள்ளது. நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை ஈரான் இங்கு நிலைநிறுத்தியுள்ளது. 1980-களின் ஈரான்-ஈராக் போர் முதல், சமீபத்திய பிரிட்டிஷ் மற்றும் கிரீஸ் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு வரை, தனது அரசியல் எதிர்ப்பைக் காட்ட இப்பாதையை ஈரான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.இந்த நிலையில்தான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தின. ஈரானை கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகின்றன. குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தளங்கள் மீது அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் ஈரானுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றாகத் தெரிவித்தன.இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்?அமெரிக்காவின் நிபந்தனை!இந்தப் போரை நிறுத்த...இதற்கிடையில், உலகப் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் நடவடிக்கையை ஈரான் கையில் எடுத்தது. அதுதான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் முடிவு. இதனால் உலக நாடுகள் கச்சா எண்ணெய், எரிவாயு பற்றாக்குறை போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. அதனால், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 'இந்தப் போரை நிறுத்த வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும்...' என ஈரானுக்கு 15 நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை அனுப்பியிருக்கிறது.அதில் 'ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதில் தொடங்கி, ஹார்முஸ் நீரிணையை சுதந்திரமான கடல்வழிப் பாதையாக செயல்பட வைப்பதற்காக அதை மீண்டும் திறக்க வேண்டும். அமெரிக்கா - ஈரான் இருவரும் சேர்ந்து அதனைக் கட்டுப்படுத்தலாம்' என்பதுவரை அந்தப் பட்டியல் நீள்கிறது.ஆனால் ஈரான், "போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அவ்வாறு செய்யும் நோக்கமும் இல்லை" என ஹார்முஸ் கட்டுப்பாட்டுக்கான கடிவாளத்தை தன்னிடமே வைத்திருக்கிறது.ஈரான் போர்: கச்சா எண்ணெய்ஹார்முஸ் சுங்கச்சாவடி!இதற்கிடையில்தான் 'லாய்ட்ஸ்லிஸ்ட்' (Lloyds List) கப்பல் போக்குவரத்து இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஈரானின் புரட்சிகர காவல் படை ஹார்முஸ் ஜலசந்தியில் புதிதாக 'சுங்கச்சாவடி' (Toll Booth) முறையை அமல்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவித்தது.மேலும், அந்தச் செய்தியின் அடிப்படையில், ஈரான் ஏற்கெனவே ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு 'நடைமுறை சுங்கச்சாவடி' முறையை நடத்தி வருவதாகத் தெரிகிறது.ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்கள் அவற்றின் சரக்கு விவரங்கள் (manifests), ஊழியர் விவரங்கள் மற்றும் சேருமிடம் ஆகியவற்றை ஈரானின் புரட்சிகர காவல் படையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் ஹார்முஸ்கான் மாகாணக் கட்டளைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தடைகள் குறித்த சோதனைகள் மற்றும் சரக்குச் சரிபார்ப்புகள் நடத்தப்படுகின்றன.மார்ச் 13 முதல் சுமார் 26 கப்பல்கள் இந்த முறையைப் பின்பற்றிச் சென்றுள்ளன. அதில் சில கப்பல்களிடம் சீனாவின் 'யுவான்' (Yuan) கரன்சியாக கட்டணம் பெறப்பட்டிருக்கிறது. மார்ச் 15-க்குப் பிறகு வழக்கமான பாதையில் பெரும்பாலான கப்பல்களால் பயணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ராஜேஷ் சின்ஹாஇந்தியாவின் நிலைபாடு என்ன?இந்தப் புதிய சுங்கச்சாவடி முறை விவாதமான நிலையில், அந்த வழியே பயணத்தை மேற்கொண்ட இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், 'இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் உள்ளிட்ட ஐந்து கப்பல்கள் பாதுகாப்பாக இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன. இவை வார இறுதிக்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஹார்முஸ் நீரிணையில் எந்தச் சுங்கச்சாவடி நடைமுறையும் இல்லை' என மறுத்துள்ளது.இது குறித்துப் பேசிய அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா, "சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச கடல்வழிப் பாதை. இதில் பயணிக்கக் கட்டணம் ஏதும் வசூலிக்க முடியாது. எனவே, இத்தகைய செய்திகள் ஆதாரமற்றவை" என்று தெரிவித்தார்.இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பேசிய ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க அனுமதி அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், 'சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.மொஜ்தபா கமேனிபுதிய கட்டணத் திட்டம்!ஈரான்போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுகட்டவும், தன் நாட்டை மீட்டெடுக்கவும் இந்த நீர்வழிப் பாதையை ஈரான் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக சர்வதேச அரசியலை கூர்ந்து கவனித்து வரும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் அடிப்படையில், ஈரான் புரட்சிகர காவல் படைக்கு நெருக்கமான ஃபார்ஸ் (Fars) மற்றும் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனங்கள், ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மத்ரெஜா ரெஜாயி கூச்சியை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டன.அதில், "ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ஈரானின் இறையாண்மை, கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையை அதிகாரப்பூர்வமாக சட்டமாக்கவும், அதன் மூலம் கட்டணம் வசூலித்து வருவாயை உருவாக்கவும் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது. மற்ற போக்குவரத்து வழித்தடங்கள் வழியாகப் பொருட்கள் செல்லும்போது கட்டணம் செலுத்துவது போலவே, ஹார்முஸ் ஜலசந்தியும் ஒரு வழித்தடம்தான். இந்தப் பகுதியின் பாதுகாப்பை நாங்கள் வழங்குகிறோம், எனவே கப்பல்களும் எண்ணெய் டாங்கர்களும் கட்டணம் செலுத்துவது இயல்பானது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.அமெரிக்கா - ஈரான்'நியாயமான வசூல்' - ஈரான்!இதன் அடிப்படையில், ஜலசந்தியைக் கடக்கும் ஒவ்வொரு எண்ணெய் டாங்கர் கப்பலுக்கும் சுங்கவரி விதிக்க ஈரான் ஆலோசித்து வருகிறது. இதற்கான சட்ட மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் தயாரித்து வருகிறது. "எங்கள் கடல் பகுதியில் பாதுகாப்பு வழங்குவதற்கு ஈடாகக் கட்டணம் வசூலிப்பது நியாயமானது" என்பது ஈரானின் வாதம். மேலும், இந்த நடைமுறை, தன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஈரானுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.எனவே, ஹார்முஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை வெறும் தற்காப்பு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், வருவாய் ஈட்டுவதற்கான ஒரு நீண்டகால புவிசார் அரசியல் கருவியாக நிறுவனமயமாக்கவும் ஈரான் முயல்கிறது.ஒருவேளை சுங்கச்சாவடி அமைந்தால்..?ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலக நாடுகளின் 'பொருளாதாரக் கழுத்துப்பகுதி' போன்றது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% இந்தப் பாதை வழியாகத்தான் நடக்கிறது. ஒருவேளை ஈரான் இங்கே அதிகாரப்பூர்வமாகச் சுங்கச்சாவடி அமைத்துக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால், அது உலகளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.பெட்ரோல் விலைபொதுமக்களுக்கான சிக்கல்...கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், அந்தச் செலவு நுகர்வோர் மீது சுமத்தப்படும். இதனால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயரும். கத்தார் போன்ற நாடுகள் தங்களின் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) இந்தப் பாதை வழியாகத்தான் ஏற்றுமதி செய்கின்றன. இதனால் சமையல் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உலகெங்கும் அதிகரிக்கக்கூடும்.இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பகுதி ஹார்முஸ் வழியாகவே வருகிறது. ஈரானின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயரும். எரிபொருள் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, காய்கறிகள் முதல் மின்னணு பொருள்கள் வரை அனைத்தின் விலையும் ஏறும். இதனால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி உலகளவில் மந்தமடையும் அபாயம் உள்ளது.ஹார்முஸ்சட்ட ரீதியான சிக்கல்...சர்வதேசக் கடல் பகுதியில் ஒரு நாடு தன்னிச்சையாகக் கட்டுப்பாடு விதிப்பது, அந்தப் பகுதியை 'ஆபத்தான பகுதி' (War Risk Zone) என அறிவிக்க வழிவகுக்கும். இதனால் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணம் பல மடங்கு உயரும்; இது ஒட்டுமொத்த கடல்வழி வர்த்தகத்தையும் செலவுமிக்கதாக மாற்றும்.ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின்படி (UNCLOS), சர்வதேச ஜலசந்திகளில் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க உரிமை உண்டு (Transit Passage). ஈரான் கட்டணம் வசூலிப்பது இந்தச் சர்வதேசச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், ஐநா சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்தில் பெரிய சட்டப் போராட்டங்கள் வெடிக்கும்.ஆதிக்கச் சிக்கல்...அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரானின் இந்த ஆதிக்கத்தை ஏற்காது. கப்பல்களைப் பாதுகாக்கத் தங்களின் போர்க்கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்பும். இது ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நேரடிப் போர் மூளும் அபாயத்தை உருவாக்கும்.தற்போது சில கப்பல்களிடம் செய்வது போல ஈரான் இந்தக் கட்டணத்தைச் சீனாவின் 'யுவான்' கரன்சியில் வசூலிக்கத் தொடங்கினால், அது சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைச் சற்றே குறைத்து, சீனாவின் கரன்சிக்கு உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொடுக்கும்.ஈரான் போர்சுருக்கமாக சொல்வதானால், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சுங்கச்சாவடி அமைப்பது என்பது வெறும் பண வசூல் மட்டுமல்ல, அது உலகப் பொருளாதாரத்தின் சாவியைத் தன் கையில் எடுப்பதற்குச் சமம். இதனால் உலகப் பொருளாதாரம் வேறொரு பரிமாணத்தை நோக்கி நகரும்.இந்த நிகழ்வுகள் மூலம், உலக நிகழ்வுகளை வடிவமைப்பதில் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைப் போலவே பணத்தையும் பொருளாதார அழுத்தத்தையும் பயன்படுத்துவது அமெரிக்காவின் உக்தி. அதை இப்போது ஈரானும் கையில் எடுத்திருக்கிறது. இது எந்த வகையில் ஈரானுக்கு பயன்படும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்!ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

vikatan
30 மார்.
3 min read
RR: ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி! - யார் இவர்? என்ன விலை?
உலகம்

RR: ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி! - யார் இவர்? என்ன விலை?

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட் பேர்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் 15 சதவீதப் பங்குகளையும், லாக்லன் முர்டோக் 13 சதவீதப் பங்குகளையும் கொண்டிருந்தனர்.கல் சோமானிராஜஸ்தான் அணியை வாங்க ஆதித்யா பிர்லா குழுமம், டேவிட் பிளிட்சர், கல் சோமானி மற்றும் வால்மார்ட் வாரிசு ராப் வால்டன், டைம்ஸ் ஆஃப் இந்தியா, கேப்ரி குளோபல், ஆர்செலர் மிட்டல் போன்ற தொழிலதிபர்களும், முன்னணி நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சுமார் 13, 500 கோடிக்கு வாங்கி இருக்கிறார். வால்மார்ட், ஃபோர்டு நிறுவனங்களின் முக்கியப் பங்குதாரராக கல் சோமானி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vikatan
30 மார்.
3 min read
கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது?
உலகம்

கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது?

ஈரான் போர் (பிப்ரவரி 28) தொடங்கிய 48 மணிநேரத்திற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போன்கால் பேசியுள்ளனர். அந்தப் போன்காலில் ஈரான் குறித்த பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் - நெதன்யாகு'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detailஅந்தத் தகவல்கள்...ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி டெஹ்ரானில் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தெரிய வந்துள்ளது. முன்பு, பிப்ரவரி 28-ம் தேதி இரவு இந்தச் சந்திப்பு நடக்கவிருந்திருக்கிறது. ஆனால், பின்னர் அது காலை நேரமாக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதனால், இந்தச் சமயத்தில் தான் கமேனியைக் கொல்ல முடியும் என்று ட்ரம்பை சம்மதிக்க வைத்துள்ளார் நெதன்யாகு. வரலாறு படைப்போம்!ஏற்கெனவே ஈரானை தாக்க அமெரிக்க ராணுவத்திற்கு ஒப்புதல் அளித்திருந்திருக்கிறார் ட்ரம்ப். ஆனால், எப்போது, எப்படி என்பது மட்டும் முடிவு செய்யாமல் இருந்திருக்கிறது.ஆக, இந்தச் சமயத்தில் நேரம் கூடி வரவே, இரு நாடுகளும் தாக்குதல் நடத்த பிளான் செய்திருக்கிறது. 'இதை விட்டால் கமேனியைக் கொல்ல நல்ல நேரம் கிடைக்காது' என்று நெதன்யாகு அழுத்தமாக ட்ரம்பிடம் பதிய வைத்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை ட்ரம்ப் செய்தால், வரலாற்றை உருவாக்குவோம் என்றும் சம்மதிக்க வைத்துள்ளார். காமேனிகமேனி உயிரிழப்பிற்குப் பின், ஈரான் மக்களே வீதிக்கு வந்து போராடி, அந்த ஆட்சியை அகற்றுவார்கள் என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆக, நெதன்யாகு தான் ட்ரம்பை ஈரான் போரை தொடங்க வைத்ததற்கு முக்கிய காரணம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால், நெதன்யாகு ஆரம்பத்தில் இருந்து, ட்ரம்பை தான் இந்தப் போருக்கு அழைக்கவில்லை என்று கூறி வருகிறார். ட்ரம்புமே 'நான் தான்' ஈரான் போர் குறித்து முடிவு செய்தேன் என்று கூறுகிறார். இந்த நிலையில் தான், இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!

vikatan
30 மார்.
3 min read
Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?
உலகம்

Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டி இருக்கிறது. இப்போர் தொடங்கும்போது நான்கு வாரங்கள் இப்போர் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். திடீரென ஈரான் தனது நாட்டு எல்லைக்குள் ஓடும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதையடுத்து ஈரான் மூடி இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்கவில்லையெனில், ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று டொனால்டு ட்ரம்ப் மிரட்டி இருந்தார். ஆனால் திடீரென ஈரானுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தை நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாகவும், ஈரான் மின் உற்பத்தி மையங்கள் மீது நடத்த திட்டமிட்டு இருந்த தாக்குதலை 5 நாள்களுக்குத் தள்ளி வைத்து இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஞாயிறன்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஈரானியப் பிரதிநிதிகளுடன் தனது மத்திய கிழக்குத் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் தனது மருமகனும் நெருங்கிய உதவியாளருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக ட்ரம்ப் கூறினார். அதோடு இப்பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தாலும், தற்போது அவை மிகவும் தீவிரமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், குறுகிய காலத்திற்குள்ளேயே ஒரு தீர்வு எட்டப்படக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரின் இந்தப் பேட்டி சமூக வலைதளத்தில் பெரிய அளவில் வைரலானது. ஆனால் அமெரிக்காவுடன் அது போன்று பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வைக்க பாகிஸ்தான், ஓமன் போன்ற நாடுகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுடன் இவ்விவகாரத்தில் நேரடியாகத்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், மூன்றாவது நாடு மூலம் பேச மாட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இப்பேச்சுவார்த்தைக்கு இப்போது ஈரான் முறைப்படி ஒப்புதல் கொடுத்துள்ளது. இரானின் புதிய உச்சபட்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஓர் ஒப்பந்தத்தை எட்டவும் ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி 'அல் அரபியா' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

vikatan
30 மார்.
3 min read
"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
உலகம்

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "கடந்த இரண்டு நாள்களாக, அமெரிக்கா, ஈரானுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை நன்றாகவும், சுமுகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கில் நடந்துவரும் பிரச்னைகளை முழுவதும் முடிப்பதற்கானது ஆகும். ஈரான் போர்ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!கடந்த ஒரு வாரம் நடந்த முழுவதுமான, விளக்கமான உரையாடலுக்குப் பின், அமெரிக்காவின் போர்த் துறையிடம் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான எந்தவொரு ராணுவ தாக்குதலையும் அடுத்த ஐந்து நாள்களுக்குத் தள்ளிவைக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன். இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும்" என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்றால், விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரலாம். ட்ரம்ப் பதிவு

vikatan
30 மார்.
3 min read
"அணு ஆயுதக் கொள்கையில் பின்வாங்கப்போவதில்லை" - ட்ரம்பிற்கு வடகொரிய அதிபர் பதிலடி
உலகம்

"அணு ஆயுதக் கொள்கையில் பின்வாங்கப்போவதில்லை" - ட்ரம்பிற்கு வடகொரிய அதிபர் பதிலடி

2019-ம் ஆண்டு வியட்நாம் நாட்டின் ஹனோய் (Hanoi) நகரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டின் போது, ``வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும்'' என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்தார். இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.ட்ரம்ப்அதைத் தொடர்ந்து வடகொரியா டஜன் கணக்கான அணு ஆயுதங்களைத் தயாரித்து சோதனைகளையும் மேற்கொண்டது. சமீபத்தில் புதிய போர்க்கப்பல் மற்றும் அணுசக்தி ராக்கெட்டுகளைச் சோதித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது இளம் வயது மகள் கிம் ஜூ ஏ-வை பொதுவெளியில் முன்னிறுத்தி, இந்த அணுசக்தித் திட்டம் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் என்பதை உலகிற்குத் தெரிவித்தார்.மறுபுறம், ரஷ்யாவுடனான உறவை வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்படுத்தி வருகிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக பீரங்கிக் குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளது.இதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து உணவு, எரிபொருள் மற்றும் அதிநவீன ராணுவத் தொழில்நுட்பங்களை வடகொரியா பெற்று வருகிறது. இது அமெரிக்காவின் செல்வாக்கிற்கு எதிராக ஒரு வலுவான அமெரிக்க எதிர்ப்பு உருவாகி வருவதைக் காட்டுகிறது என உலக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியாவின் உச்ச மக்கள் பேரவையில் உரையாற்றினார். அப்போது, ஈரானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய கிம் ஜாங் உன், ``அமெரிக்க நிர்வாகம், அரசு ஆதரவு பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்புச் செயல்களில் ஈடுபடுகிறது.கிம் ஜாங் உன்அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா கொடுத்த அழுத்தங்களையும், அவர்களின் பேச்சுக்களையும் வடகொரியா நிராகரித்தது மிகச் சரியானது என்பது தற்போதைய உலகச் சூழலில் தெளிவாகியிருக்கிறது.அணு ஆயுதம் இல்லாத நாடுகள் அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு எளிதில் இலக்காகின்றன என்ற எனது நீண்டகால நம்பிக்கையை, ஈரான் மீதான தாக்குதல் உறுதிப்படுத்தியுள்ளது.அமெரிக்கா தனது விரோத கொள்கையைக் கைவிட்டு, வடகொரியாவை ஒரு அணுசக்தி நாடாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இனி பேச்சுவார்த்தைக்கு இடமுண்டு. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை சாத்தியமாகலாம், ஆனால் அணு ஆயுதங்களைக் கைவிடுவது என்ற பேச்சுக்கே இனி இடமில்லை" என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.2019-ல் முறிந்துபோன பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலத்தைப் போல 'அணு ஆயுத ஒழிப்பு' குறித்து இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.வடகொரியா: அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!

vikatan
30 மார்.
3 min read
``இந்த நட்பு நாடுகள் மட்டும் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கலாம்" - ஈரான் பட்டியலில் இந்தியா?
உலகம்

``இந்த நட்பு நாடுகள் மட்டும் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கலாம்" - ஈரான் பட்டியலில் இந்தியா?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது. இதனால் ஏற்கனவே எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாலும், பல நாடுகளில் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாலும், உலகளாவில் எரிசக்தி நெருக்கடி உருவாகும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 15 அம்ச அமைதித் திட்டத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஈரான் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தது.ஈரான் தாக்குதல்நேற்று நியூயார்க்கில் உள்ள ஈரானியத் தூதரகம், ஹார்முஸ் நீரிணை வழியாக பிற நாடுகளைச் சேர்ந்த அல்லது அவற்றுடன் தொடர்புடைய கப்பல்கள் உட்பட, 'பகைமை அற்ற கப்பல்கள்' அதாவது, அவை ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புச் செயல்களில் ஈடுபடாமலும், அத்தகைய செயல்களுக்கு ஆதரவளிக்காமலும் இருப்பதுடன், அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் காவல் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் கப்பல்கள், தகுந்த ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகக் கடந்து செல்லும் வசதியைப் பெறலாம்," என்று அறிவித்தது.அதைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ``நடந்து வரும் ஈரான்-அமெரிக்கப் போருக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள வளைகுடாவின் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் ஜலசந்தியை, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சீனா மற்றும் ரஷ்யா போன்ற 'நட்பு நாடுகள்' பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது." எனக் குறிப்பிட்டார்.இந்த நிலையில், கடுமையான போருக்கு மத்தியில் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்டெல்லியில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டுக் கூட்டத்தில் பேசிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா, ``இந்தியக் கொடியுடன் கூடிய இரண்டு எல்பிஜி கப்பல்களான பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகியவை ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்தியக் கப்பல்களும் மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.இதற்கிடையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ``உலகளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக அமைப்புகள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. ஹார்முஸ் நீரிணை நீண்ட காலமாக மூடப்பட்டிருப்பது, உலகளாவிய பயிர் சாகுபடிப் பருவத்தின் ஒரு மிக முக்கியமான தருணத்தில் எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் போக்குவரத்தை முடக்கி வருகிறது. பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருவதுடன், ஆழ்ந்த பாதுகாப்பற்ற சூழலிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் போரின் விளைவுகளைக் குறைப்பதில் ஐ.நா. ஈடுபட்டு வருகிறது. அந்த விளைவுகளைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த வழி மிகவும் தெளிவானது. போரை - உடனடியாக - முடிவுக்குக் கொண்டுவருவதே ஆகும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.``அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா... அந்த நோக்கமே இல்லை" - ஈரான் திட்டவட்டம்

vikatan
30 மார்.
3 min read