தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

world

27 கட்டுரைகள் world இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

``அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா... அந்த நோக்கமே இல்லை" - ஈரான் திட்டவட்டம்
உலகம்

``அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா... அந்த நோக்கமே இல்லை" - ஈரான் திட்டவட்டம்

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால் உலகளவில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சில நாடுகள் அவசர நிலையை அறிவிக்கும் முடிவுக்கு சென்றிருக்கின்றன. இந்தியப் பிரதமர் மோடியும், இன்னொரு லாக்டவுன் நிலைக்கு தயாராக வேண்டும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பத்திரிகைச் செயலாளர், ``ஈரானிடம் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது." எனக் குறிப்பிட்டிருந்தார்.ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இது தொடர்பாக பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ``மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்கா யோசனைகளை அனுப்பி வருகிறது. ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவ்வாறு செய்யும் நோக்கமும் இல்லை" எனக் கூறியுள்ளார்.ட்ரம்பின் திட்டம் என்ன?இஸ்ரேலின் சேனல் 12-ன் படி, போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா கேட்டிருக்கிறது. அதாவது, 'ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதாக உறுதியளிக்க வேண்டும். அணுசக்தி நிலையங்களைக் கலைப்பதாக உறுதியளிக்க வேண்டும். மேலும் ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைக்க வேண்டும். இந்த முகமைதான் இனிவரும் காலங்களில் இந்த விவகாரத்தைக் கண்காணிக்க வேண்டும்.டொனால்டு ட்ரம்ப் கூடுதலாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹூதிகள் போன்ற பிராந்தியத்தின் மறைமுக ஆதரவு அமைப்புகளுக்கு நிதியளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்.மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு சுதந்திரமான கடல்வழிப் பாதையாக செயல்பட வைப்பதற்காக, அதை மீண்டும் திறக்க வேண்டும். இதற்கு ஈடாக ஈரான் மீதான அனைத்து சர்வதேசத் தடைகளும் நீக்கப்படும்' உள்ளிட்ட முடிவுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்.'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி

vikatan
30 மார்.
3 min read
'போர் செலவு இருக்கிறதே' - ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ரூ,18.8 கோடி வசூலிக்கும் ஈரான்
உலகம்

'போர் செலவு இருக்கிறதே' - ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ரூ,18.8 கோடி வசூலிக்கும் ஈரான்

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி முக்கிய அரசியல் சென்றுகொண்டிருக்கிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் தங்கள் மீது போர் தொடங்கியதுமே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதன் மூலம், உலக நாடுகளுக்கு செல்லக் கூடிய எரிசக்திகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது ஈரான். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல மிரட்டல்களை விடுத்து வருகிறார். ஆனால், எதற்கும் ஈரான் அசைவதாக இல்லை. இந்த நிலையில், நேற்று, ஈரான் தரப்பு, 'எதிரி கப்பல்களைத் தவிர, அனைத்து கப்பல்களையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிக்க தயார்... பாதுகாப்பும் கொடுக்கிறோம்' என்று கூறியிருந்தது. ஈரான்Fastag: 72 மணி நேரத்திற்குள் 'இந்த' தொகையை கட்டவில்லையா? இரண்டு மடங்கு அபராதம் - புதிய செக்2 மில்லியன் டாலர்ஆனால், தற்போது, ஈரானின் அரசு தொலைகாட்சி ஈரானிய சர்வதேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது..."ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல சில கப்பல்களிடம் இருந்து 2 மில்லியன் டாலர்களை வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.18.8 கோடி". செலவு இருக்கிறதே இது குறித்து ஈரானிய தலைவரான அலாவுத்தீன் போரூஜெர்டி கூறுகையில், 'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல 2 மில்லியன் டாலர் வசூலிப்பது ஈரானின் வலிமையைக் காட்டும். மேலும், போர் என்கிற போது செலவுகள் ஆகும். அதற்காக நாங்கள் இதை செய்ய வேண்டியதாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார். தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!

vikatan
30 மார்.
3 min read
ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?
உலகம்

ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

ஈரான் போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று 15 அமைதி பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தார். போர் நிறுத்தத்திற்கு இதுவரை கொஞ்சம் முரண்டு பிடித்து வந்த ஈரான் தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் 'The Wall Street Journal' வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஈரான் முன்வைக்கும் 5 நிபந்தனைகள்...> ஈரான், அமெரிக்கா இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். > அமெரிக்கா எதிர்காலத்தில் ஈரான் மீது எந்த ராணுவ தாக்குதலையும் நடத்தாது என்கிற உறுதி வேண்டும். ஈரோன் போர்``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார்" - ட்ரம்ப்> இப்போதைய தாக்குதலில் ஈரானில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகளுக்கு அமெரிக்கா நஷ்ட ஈடு வழங்க வேண்டும். > ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாடு வேண்டும். > ஈரான் ஏவுகணைத் திட்டம் குறித்து அமெரிக்கா எந்தப் பேச்சுவார்த்தையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது". இவற்றுக்கு ஒப்புக்கொண்டாலே அடுத்த பேச்சுவார்த்தை என்று ஈரான் தெரிவித்துள்ளதாம். இதற்கு அமெரிக்காவின் பதில் என்னவாக இருக்கப் போகிறதோ?சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?

vikatan
30 மார்.
3 min read
ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் 'எலான் மஸ்க்'கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?
உலகம்

ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் 'எலான் மஸ்க்'கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?

ஈரான் போர் தொடங்கி இன்றோடு ஐந்தாவது வாரம் ஆரம்பமாகிறது.ஈரான்‌ போர் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடினார்.மோடி பதிவுஇந்த உரையாடல் குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ட்ரம்பிடம் இருந்து போன் கால் வந்திருந்தது. இருவரும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசினோம்.இந்தியா போர் நிறுத்தத்தையும், அமைதியையும் ஆதரிக்கிறது.எலான் மஸ்க்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதும், அனைத்து நாடுகளும் அந்தப் பாதையைப் பயன்படுத்த முடிவதையும் உறுதி செய்ய வேண்டும்.அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து உதவ தயார் என்று ஒப்புக்கொண்டிருக்கிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.எலான் மஸ்க்..?தற்போது நியூயார்க் டைம்ஸ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, 'ட்ரம்ப் - மோடி போன்காலின் போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்கும் லைனில் இருந்திருக்கிறார்.ஆனால், அவர் பேசினாரா... என்ன பேசினார் என்று தெரியவில்லை.வெள்ளை மாளிகையில் உள்ள பெயர்‌ வெளியிடப்படாத இரண்டு அதிகாரிகள் இந்தத் தகவலை கூறியிருக்கின்றனர்.ட்ரம்ப் - எலான் மஸ்க் இடையே கடந்த ஆண்டு மனக்கசப்பு ஏற்பட்டது. இப்போது, அதெல்லாம் சரியாகி இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம்‌ உறுதி செய்கிறது.எங்கேயும் ஃபாலோ செய்யும் Meta & Youtube; '6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு' - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

vikatan
30 மார்.
3 min read
Gold Rate: நேற்று ஆட்டம் காட்டியது; இன்று குறைந்தது! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
உலகம்

Gold Rate: நேற்று ஆட்டம் காட்டியது; இன்று குறைந்தது! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.340-உம், பவுனுக்கு ரூ.2,720-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.நேற்று சந்தையில் தங்கம் விலை மூன்று முறை மாற்றம் கண்டது. மதியம் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 குறைந்து விற்பனை ஆனது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஈரான் உடனான பேச்சுவார்த்தை அறிவிப்பிற்குப் பின், தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 உயர்ந்தது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,000 ஆகும்.தங்கம்இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,04,000 ஆகும்.வெள்ளிஇன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.240 -க்கு விற்பனை ஆகி வருகிறது."5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

vikatan
30 மார்.
3 min read
"நாங்கள் மதிக்கும் ஈரான் தலைவரிடம் பேசி வருகிறோம்" - ட்ரம்ப் சொல்லும் நபர் யார்? அவர் சொல்வது என்ன?
உலகம்

"நாங்கள் மதிக்கும் ஈரான் தலைவரிடம் பேசி வருகிறோம்" - ட்ரம்ப் சொல்லும் நபர் யார்? அவர் சொல்வது என்ன?

"இரண்டு நாள்களாக ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்கா அடுத்த 5 நாள்களுக்கு ஈரானைத் தாக்காது" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். ஆனால், நாங்கள் அமெரிக்கா உடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் மறுக்கிறது. முகமது-பாகர் காலிபாஃப் | Mohammad Bagher Ghalibafஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!அமெரிக்கா பேசிக்கொண்டிருக்கும் அந்த நபர் யார்?இந்தச் சமயத்தில்தான், நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப், ''நாங்கள் மிகவும் மதிக்கக்கூடிய தலைவராகிய ஒருவரிடம் பேசி வருகிறோம்" என்று ஈரான் பேச்சுவார்த்தை குறித்து கூறியிருந்தார். அந்த நபர் ஈரானின் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் என்று அமெரிக்காவில் இருந்து வெளியான தகவல்கள் கூறுகின்றன.அவர் என்ன சொல்கிறார்?ஆனால், இந்தத் தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார் முகமது-பாகர் காலிபாஃப். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்கா உடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளை ஏமாற்றவே இந்தப் போலி செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்போதுதான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சிக்கியுள்ள கடுமையான சூழல்களில் இருந்து அவர்களால் தப்பிக்க முடியும்".ரூ.94-க்கு அருகில்: இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்' சரிவு; இனி ரிசர்வ் வங்கி கையில் தான் எல்லாமே!

vikatan
30 மார்.
3 min read
ரூ.94-க்கு அருகில்: இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்' சரிவு; இனி ரிசர்வ் வங்கி கையில் தான் எல்லாமே!
உலகம்

ரூ.94-க்கு அருகில்: இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்' சரிவு; இனி ரிசர்வ் வங்கி கையில் தான் எல்லாமே!

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலேயே இருந்து வருகிறது. இன்று காலை சந்தை தொடங்கும்போதே, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.93.83 என வர்த்தகம் ஆனது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும்.என்ன காரணம்? இந்திய ரூபாயின் சரிவிற்கு மிக முக்கிய காரணம், கச்சா எண்ணெய் விலை ஏற்றமே. இந்தியா எரிசக்திகளுக்குப் பிற நாடுகளை நம்பி இருக்கிறது. அங்கே இருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டுமென்றால், இந்தியாவிற்கு அமெரிக்க டாலர் வேண்டும். அமெரிக்க டாலரை வாங்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது. ஈரான் போர்வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'மாறும்' வருமான வரிக் கணக்குத் தாக்கல் தேதிகள்: நோட் பண்ணுங்கமேலும், எரிசக்தி போன்றவைகளுக்கு இந்தியா பிற நாடுகளை நம்பியிருப்பதால், ஈரான் போரின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கும் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய முதலீடுகளை விற்கின்றனர். இதுவும் இந்திய ரூபாய் சரிவிற்குக் காரணம். இது தொடர்ந்து கொண்டிருந்தால், இந்திய பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கும். அதனால், இந்திய ரிசர்வ் வங்கி இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். எப்படி? இந்திய ரிசர்வ் வங்கி தங்களிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களைக் கொஞ்சம் விற்கும். சந்தையில் டாலர்களின் புழக்கம் அதிகரிக்கும் போது, அதன் டிமாண்ட் குறையும்... இதனால், விலையும் குறையும். இந்திய ரூபாய் வலுபெறும். இந்திய ரிசர்வ் வங்கியின் இத்தகைய நடவடிக்கையைத் தான் சந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 'போர் செலவு இருக்கிறதே' - ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ரூ,18.8 கோடி வசூலிக்கும் ஈரான்

vikatan
30 மார்.
3 min read
நெதன்யாகு மீது கடும் கோபத்தில் ஜே.டி.வான்ஸ்: பின்னணியில் ஈரான் போர் - என்ன நடந்தது?
உலகம்

நெதன்யாகு மீது கடும் கோபத்தில் ஜே.டி.வான்ஸ்: பின்னணியில் ஈரான் போர் - என்ன நடந்தது?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இரண்டு தகவல்கள் பரவலாக இருந்து வருகின்றன.ஒன்று, ஈரானின் உச்ச தலைவரை அகற்றிவிட்டால், ஈரான் மக்களே அங்கே ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், போர்‌ எளிதில் முடிந்துவிடும் - இதைக் கூறி தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பே ஈரான் மீதான 'உடனடி' போருக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.இன்னொன்று, ஈரான் மீதான இந்தப் போரில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு உடன்பாடில்லை.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகுஇதை உறுதி செய்வது போல, Axios செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஜே.டி.வான்ஸ், நெதன்யாகு தொலைபேசியில் உரையாடி இருக்கின்றனர்.நெதன்யாகு மீது ஜே.டி.வான்ஸ் மிகவும் கோபப்பட்டு இருக்கிறார்."போருக்கு முன்னர், ஈரானில் எளிதாக ஆட்சி மாற்றம் நடந்துவிடும் என்று கூறினீர்கள்" என்று கோபப்பட்டு இருக்கிறார்.முதலில், ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு வான்ஸை தான் முன்னிருத்தியிருக்கிறது இஸ்ரேல். இந்தச் சம்பவத்திற்கு பிறகு, வான்ஸைக் கண்டுகொள்வதில்லையாம்.ஆனால், ஈரான் வான்ஸுடன் பேசத்தான் தயாராக இருக்கற்து என்று தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்க அதிகாரிகளும், வான்ஸ் தான் பேச்சுவார்த்தைக்கு சிறந்த நபர் என்று கூறுகிறார்கள்.

vikatan
30 மார்.
3 min read
எங்கேயும் ஃபாலோ செய்யும் Meta & Youtube; '6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு' - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
உலகம்

எங்கேயும் ஃபாலோ செய்யும் Meta & Youtube; '6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு' - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

"6 வயதில் யூடியூப்பிற்கு அடிமை... 9 வயதில் இன்ஸ்டாகிராமிற்கு அடிமை. 10 வயதில், மன அழுத்தம் வந்துவிட்டது. இதனால், என்னை நானே தாக்கிக் கொள்வேன். 13 வயதில் எனக்கு Social Phobia (சமூக பயம்), Body Dysmorphic Disorder (உடல் உருவக் குறைபாடு) ஆகியவை எனக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது அத்தனைக்கும் என்னுடைய சமூக வலைதள அடிக்‌ஷனே காரணம்" என்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றத்தின் படிகளை ஏறியிருந்தார் 20 வயதான பெண்மணி ஒருவர். இது மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ஆகும். ஆறு வாரக் கால விசாரணைக்குப் பிறகு, நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றம்அந்தத் தீர்ப்பு... "இளம் பயனாளர்களை அடிக்‌ஷனில் தள்ளுவதற்கேற்ப தான் மெட்டா மற்றும் யூடியூப் தங்கள் பிராடக்டுகளை வடிவமைத்திருக்கின்றன. முக்கியமாக, இவற்றின் பயன்பாட்டால் என்னென்ன நடக்கும் என்பதற்கான எச்சரிக்கைகளை இந்த நிறுவனங்கள் வழங்கவில்லை... வழங்க தவறி இருக்கின்றன. இதனால், மனுதாரருக்கு 6 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடாக தர வேண்டும். இதில் 70 சதவிகிதத்தை மெட்டா வழங்க வேண்டும்... மீதி 30 சதவிகிதத்தை யூடியூப் வழங்க வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் காலமான இன்றையக் காலக்கட்டத்தில், இந்த வழக்கும், தீர்ப்பும் மிக முக்கியமானது. சமூக வலைதளங்கள் இளம் தலைமுறையினரை எப்படி பாதித்துள்ளது என்பதை கொண்டு தொடுக்கப்பட்ட முதல் வழக்கு இதுவே. 'எங்கேயோ அமெரிக்காவில் நடந்த வழக்கு... வந்த தீர்ப்பு' என்று சொல்லியோ, 'நம்ம ஊர்ல இப்படி வழக்குப்போட்டா, நமக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கிடைக்கும்?' என்று கேலி செய்துவிட்டோ கடந்துவிட வேண்டிய விஷயம் இல்லை இது. இன்று இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர், இந்த அடிக்‌ஷனுக்கு சின்ன அளவிலோ, பெரிய அளவிலோ ஆளாகியிருக்கின்றோம். எழுந்ததும் மொபைல் போன்எத்தனை பேர் காலையில் எழுந்ததும் இன்ஸ்டாகிராமிலும், ஃபேஸ்புக்கிலும் கண் விழிக்கிறோம். இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராம், யூடியூப் நோண்டாமல் தூங்குபவர்களின் எண்ணிக்கை மிக மிக மிக...... குறைவு. ஆனால், இவற்றை அலர்ட்டாக பார்க்காமல், 'எந்திரிச்ச உடனே என்னோட முதல் வேலை இன்ஸ்டாகிராம் பாக்கறது தான்', 'இன்ஸ்டாகிராம், யூடியூப் நைட் பாத்துட்டு தூங்கவே 2 மணி ஆயிடுச்சு' என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம். மேலே சொன்ன வழக்கு சமூக வலைதளம் எப்படி இளைஞர்களைப் பாதிக்கிறது என்பதற்கானது... குழந்தைகள், பெரியவர்களின் சமூக வலைதள பயன்பாடு இன்னும் மிக பயம் தரக்கூடியதாக இருக்கிறது. 'என்னோட குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகல... ஆனா, போனை நல்லா பார்க்கும்', 'ரைம்ஸ் போட்டு கொடுக்கலைனா, என் குழந்தை சாப்பிடவே சாப்பிடாது', 'குழந்தைய அமைதியா உக்காற வைக்கணும்னா, கையில மொபைல் போன் கொடுத்தா போதும்' என்று யூத் பெற்றோர்கள் பெருமையாகச் சொல்கிறார்கள்.பெரியவர்கள் மொபைல் போன் பயன்பாடுபெரியவர்களின் சமூக வலைதளப் பயன்பாட்டின் பயம் இன்னும் மோசமாக இருக்கிறது. இன்ப்ளூயன்சர்கள் எது சொன்னாலும், அது சரி என்று நினைத்துக்கொண்டு, அதை அப்படியே செய்கின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 'உணவு கம் மருந்து' வீடியோக்கள். நோய்கள் வராமல் இருக்க 'இந்த ஜூஸை குடியுங்கள், 'அந்த ஜூஸை குடியுங்கள்' என்று ஏகப்பட்ட அறிவுரைகள். இவர்களும் அதைச் செய்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அடர்த்தியான ஜூஸ்களைக் குடிக்கும் போது, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்படையக் கூடிய வாய்ப்புகள் கூட உண்டு. இதனால், எல்லா வயதினருக்குமே சமூக வலைதளங்கள் ஓர் 'அபாய' சிக்னல்களே. லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற தீர்ப்பில் முக்கியமாக கூறப்பட்டிருப்பது, 'சமூக வலைதளங்கள் மக்களை அடிக்‌ஷனாக்குவது போல' என்பதாகும். ஆம்... சமூக வலைதளத்தின் அல்காரிதம் நம்மை ஃபாலோ செய்வதுபோல பக்காவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் என ஏதேனும் ஒன்றில், ஏதாவது ஒன்றை தேடினாலே, மற்ற சமூக வலைதளங்களிலும் அதை காட்டும். உணவு சம்பந்தமாக பார்க்கும் ஒருவருக்கு, அவர்களது ஃபீடில், ஸ்க்ராலில் தொடர்ந்து உணவு குறித்தே காட்டி அவர்களை அந்தச் சமூக வலைதளத்தை விட்டு நீங்காமல் பத்திரமாக பார்த்துகொள்கின்றன அவை. மொபைல் போன் அடிக்‌ஷன்மேலும், இந்த ஆப்களை முதன் முதலாக இன்ஸ்டால் செய்யும் போது, நமது வயதைக் கொடுத்திருப்போம். அதற்கேற்ற வயதுக்கேற்ப ரீல்கள், ஷார்ட்ஸ்கள், போஸ்ட்கள் திரும்ப திரும்ப வந்து நமக்கு பொழுதுப்போக்காக மாறி, நம்மை கட்டி வைத்துவிடுகின்றன. இன்னும் ஒரு படி மேலே போய், இன்டர்நெட் 'ஆன்' ஆன மொபைல் போன் அல்லது லேப்டாப் அருகில் இருக்கும் போது, ஏதேனும் ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் போதும். அதை 'கீவேர்டாக' எடுத்து, அதையும் நமது ஃபீடுகளில் காட்டுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், பாடி சோடாவின் கொண்டையைப் போல, சமூக வலைதளங்கள் அனைத்து இடங்களுக்கும் நம் கூடவே வந்துகொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களின் மீது இத்தனை தவறுகள் உள்ளது தான். ஆனால், முழு குற்றத்தையும் அவற்றின் மீது போட்டுவிட்டு எஸ்கேப் ஆவது சரியானது அல்ல. ஆள்காட்டி விரலால் எதிரில் இருப்பவரைக் காட்டுவதற்கு முன், நம்மை சுட்டிக்காட்டும் மூன்று விரல்களை முதலில் பாருங்கள் என்று கூறுவார்கள் தானே... அந்த மூன்று விரல்களை இப்போது பார்ப்போம். > எந்த ஒரு பிசினஸும், நுகர்வோர் திரும்ப திரும்ப நம்மிடம் தான் வர வேண்டும் என்று அனைத்தையும் செய்யும். அது அவர்களுடைய ஸ்ட்ரேட்டஜி. ஆனால், நுகர்வோர் ஆகிய நாம் தான் நமக்கு எது தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். சமூக வலைதள பயன்பாடு> எந்தக் கன்டென்ட்டை எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பது நமது தேர்வாக இருக்க வேண்டும். > என்னுடைய வாழ்க்கையில் சமூக வலைதளங்களுக்கு 'இவ்வளவு' தான் லிமிட் என்பதை நாம் செட் செய்ய வேண்டும். இவ்வளவு நாள் சமூக வலைதளங்களில் மூழ்கி இருந்தவர்களை, இப்போதே விழித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறுவது சரியாக இருக்காது. ஆனால், சின்ன சின்ன முன்னெடுப்புகள் மூலம் சமூக வலைதளப் பக்கத்தின் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். அவை...> இரவு 10 மணிக்கு மேல் ஒரு நொடி கூட சமூக வலைதளம் பக்கம் செல்லக்கூடாது. > ஒவ்வொரு ஆப்பிற்கும் தனித்தனி டைமிங் செட் செய்யுங்கள். அதாவது ஒரு நாளைக்கு இன்ஸ்டாகிராம் அரை மணிநேரம் தான் பயன்படுத்துவேன்... யூடியூப்பை 45 நிமிடம் தான் பயன்படுத்துவேன் என்பதுபோல. இதற்கான ஆப்ஷன்கள், 'Digital Wellbeing' என்று நமது மொபைல் போன்களிலேயே இருக்கிறது. அதில் செட் செய்துவிட்டால், குறிப்பிட்ட நிமிடத்திற்கு மேல், அந்த ஆப்பைப் பயன்படுத்த முடியாததுபோல ஆப்கள் ஃப்ரீஸ் ஆகிவிடும். டைமர்> வாரத்திற்கு ஒரு நாள் 'டிஜிட்டல் ஃபாஸ்டிங்' - ஒரு நாள் முழுவதும் இன்டர்நெட் பயன்படுத்தாமல் இருங்கள்.> உணவு உண்ணும் போது, யாராவது பேசிக்கொண்டிருக்கும் போது மொபைல் போன் நோண்டுவதை நிறுத்துங்கள். அந்த நொடியில் நீங்கள் முழுமையாக முயற்சி செய்யுங்கள். > மொபைல் போன் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை கொஞ்சம் கொஞ்சமாக செய்ய தொடங்குங்கள்... அல்லது ஏதேனும் புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, புத்தகம் படிப்பது, சமைப்பது, ஓவியம் வரைவது...> வீட்டிற்கு வெளியே காலடி எடுத்து வைத்ததும், மொபைல் போனில் மூழ்கி தலைகுனிந்துக்கொண்டே செல்லாதீர்கள். நிமிர்ந்து உலகத்தைப் பாருங்கள். உங்களைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பாருங்கள். நாள்கள் போக போக, இது மிக சுவாரஸ்யமானதாக மாறும். > குழந்தைகளின் அடிக்‌ஷனுக்கு... சில ரீல்ஸ்களில் வெளிநாட்டு அம்மாக்கள் தங்கள் குழந்தைகள் தூங்கும்போது, அவர்களது கண்ணில் மையை அப்பிவிட்டு மொபைல் போன் பார்த்ததால் தான் என்று குழந்தைகளை வழிக்கு கொண்டு வருவார்கள். அந்த டெக்னிக்குகளை யூத் அம்மாக்கள் ஃபாலோ செய்யலாம். குழந்தைகள் அடிக்‌ஷன்> நாம் யாரும் பேசாததால் தான், நம்மை போன்று நம் அம்மா, அப்பாக்களும் மொபைல் போனில் மூழ்குகின்றனர். இதை தடுக்க, அவர்களிடம் நாம் நேரம் செலவிடலாம். சமூக வலைதளக் கருத்துகள் சில நேரங்களில் தவறாக கூட இருக்கும் என்பதை விளக்கி புரியவைக்கலாம். மாற்றம் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும்... மாற்றம் ஒன்றே மாறாதது. Better Late than Never!

vikatan
30 மார்.
3 min read