தமிழ் டைம்ஸ் logo
"சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் ஒரு அன்பான தந்தை இருக்கிறார்"- ரஜினி குறித்து நெகிழும் மகள்கள்
விளையாட்டு

"சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் ஒரு அன்பான தந்தை இருக்கிறார்"- ரஜினி குறித்து நெகிழும் மகள்கள்

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகமான ‘ஜெயிலர் 2’-வை நெல்சன் இயக்கியிருக்கிறார்.ரஜினிகாந்த், ஐஸ்வர்யாமுதல் பாகத்தில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகிடையே படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் 'FDFS'-யை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்தை வாழ்த்தி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " நீங்கள் எப்போதும் சூப்பர் டூப்பர் ஸ்டாராகத் தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். Jailer 2: 'ரசிகர்களின் அன்புடன் அவருடைய படம் பார்ப்பதுதான் 'Double Energy!' - லதா ரஜினி நெகிழ்ச்சி லட்சக்கணக்கான மக்களுக்கு மீண்டும் மீண்டும் இந்த மகிழ்ச்சியையும் அன்பையும் வழங்கத் தேவையான பலத்தை அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணமும் உங்களுக்காக நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.அதேபோல சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டிருக்ககும் பதிவில், " உலகிற்கு அவர் தலைவர்... தன் நடை, உடை, பாவனை மற்றும் ஈடு இணையற்ற திரைப் ஆளுமையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ஆள்பவர். ஆனால் சௌந்தர்யாவிற்கு, அவர் வெறும் 'அப்பா' மட்டுமே... ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த்இந்த அழகான தந்தை-மகள் பந்தத்தைப் பார்க்கும்போது தலைவர் மீதுள்ள மதிப்பு இன்னும் கூடுகிறது. அந்தப் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் ஒரு அன்பான தந்தை இருக்கிறார்; அவருடைய மிகச்சிறந்த கதாபாத்திரம் திரையில் நடித்தது அல்ல, தன் மகளின் வாழ்க்கையில் வாழ்வதுதான்! உலகிற்கே சூப்பர் ஸ்டார், ஆனால் தன் மகளுக்கு அவர்தான் முதல் ஹீரோ! அவர் எத்தனையோ சாதனைகளை முறியடிக்கலாம், எத்தனையோ இதயங்களை ஆளலாம், ஆனால் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான இந்த அன்பை விட விலையுயர்ந்தது எதுவுமில்லை" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

vikatan
அக். 16, 05:30 AM
Jailer 2: "அதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!" - நடிகை அபெக்ஷா போர்வல்
விளையாட்டு

Jailer 2: "அதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!" - நடிகை அபெக்ஷா போர்வல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சியில் வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை அபெக்ஷா போர்வல். ஜெயிலர் 2நேற்றைய தினம் இப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், வெரைட்டி இந்தியா ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.அந்தப் பேட்டியில் அவர், "திரையில் சூப்பர் ஸ்டாராகக் கோலோச்சும் ரஜினி சார், நேரில் எவ்வளவு எளிமையான மனிதர் என்பதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடந்துகொள்ளும் விதமும், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. இத்தனை ஆண்டு கால அனுபவமும், உலகளவில் இவ்வளவு பெரிய புகழும் இருந்தபோதிலும், ஸ்பாட்டிற்கு வந்துவிட்டால் முழு அர்ப்பணிப்போடு பணிபுரிவார். Apeksha Porwal - Jailer 2என்னிடம் ரொம்பவே அன்பாகப் பேசி, எனக்கு ஊக்கமளித்தார். திரையில் அவருடைய அந்த அசாத்தியமான மாஸ் மேஜிக்கை நேரிலேயே பார்த்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். 'ஜெயிலர் 2' படத்தில் அவருடன் நடித்ததை என் திரைப் பயணத்தின் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதுகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

vikatan
அக். 16, 05:30 AM
"என் அனுமதி இல்லாமல் என் கதையை எப்படி எடுப்பார்கள்!" - வழக்கு தொடர்ந்த இயக்குநர் கோபி நயினார்
விளையாட்டு

"என் அனுமதி இல்லாமல் என் கதையை எப்படி எடுப்பார்கள்!" - வழக்கு தொடர்ந்த இயக்குநர் கோபி நயினார்

இயக்குநர் கோபி நயினார், ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து 'கருப்பர் நகரம்' படத்தை இயக்கி வந்தார். இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தடைப்பட்டுத் தடைப்பட்டு நடந்தது. திடீரென்று இப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ், கோபி நயினாரிடம் அனுமதி பெறாமல் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். அதுமட்டுமன்றி, திரைக்கதையாசிரியராகவும் இயக்குநராகவும் வேறொருவரைக் குறிப்பிட்டிருக்கிறார் தயாரிப்பாளர். இதனைத் தொடர்ந்து இயக்குநர் கோபி நயினார், தன்னுடைய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி வருவதாகத் தெரிவித்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 27-ம் தேதிக்குள் தயாரிப்பாளர்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறிப் படத்தை வெளியிடவும் தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக இயக்குநர் கோபி நயினாரிடம் பேசினோம்.நம்மிடையே பேசியவர், "'கருப்பர் நகரம்' திரைப்படத்தை முதலில் கங்காதரன் என்பவர் தயாரித்தார். ஆனால், அவர் விலகிய பிறகு ஆர்.ஆர் ஃபிலிம்ஸ் ரமேஷ் என்பவர் படத்தைத் தயாரிப்பதாக வந்தார். ரமேஷ் வருவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் தரப்பில் கிட்டத்தட்ட ₹3 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டது. தயாரிப்பாளர் ரமேஷ் இப்படத்தைக் கையில் எடுத்த பிறகு, தேவையானதையும் அவர் செய்துகொடுக்கவில்லை. இப்படம் ஒரு கால்பந்தாட்ட வீரரின் கதை என்பதால் படப்பிடிப்பிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிப்புத் தரப்பு செய்து தரவில்லை.இந்தப் படத்திற்காகத் தயாரிப்பாளர் ரமேஷ் ஃபைனான்ஸ் பெற்ற பிறகும், இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தாமல் அந்தப் பணத்தை வைத்து வேறு படங்களை எடுக்கத் தொடங்கினர். 'கருப்பர் நகரம்' படப்பிடிப்புத் தடைப்பட்டது. நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பைத் தொடர்வதற்கு நானும் காத்திருந்தேன். பிறகு நான் 'காலனி' என்ற வேறு ஒரு படத்தை இயக்கக் கமிட்டானேன். ஆனால், 'கருப்பர் நகரம்' படத்தை முடிக்காமல் வேறு படம் இயக்கக் கூடாது எனத் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் 'காலனி' படப்பிடிப்பிற்கு என்னை முடக்கவும் முயன்றனர். பிறகு பேச்சுவார்த்தை நடத்தி 'காலனி' படப்பிடிப்பிற்குக் கிளம்பினேன். இயக்குநர் கோபி நயினார்பிறகு எனக்குத் தெரியாமல், என்னிடமிருந்து எந்தவித என்.ஓ.சி சான்றிதழும் பெறாமலும் தயாரிப்பாளர் ரமேஷ் வேறு நபர்களை வைத்துப் படப்பிடிப்பை நடத்தினார். இதுமட்டுமல்ல, படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயரைக் கதையாசிரியர் எனப் போட்டிருக்கிறார்கள். என்னுடைய அனுமதி இல்லாமல் திரைக்கதையாசிரியர், இயக்குநர் என வேறு நபர்களின் பெயர்களைப் போட்டிருக்கிறார்கள். என்னுடைய அனுமதி இல்லாமல், என்னுடைய கதையை அவர்கள் எப்படி எடுப்பார்கள்? இதை நான் எப்படி கேள்வி கேட்காமல் இருப்பது?" எனக் காட்டமானார்.

vikatan
அக். 16, 05:30 AM
Jailer-2: "என் அப்பா திரையில் மீண்டும் ஒரு முறை அதிர வைத்திருக்கிறார்"- சௌந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி
விளையாட்டு

Jailer-2: "என் அப்பா திரையில் மீண்டும் ஒரு முறை அதிர வைத்திருக்கிறார்"- சௌந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகமான ‘ஜெயிலர் 2’-வை நெல்சன் இயக்கியிருக்கிறார்.ஜெயிலர் 2 முதல் பாகத்தில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகிடையே படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பையும் பெற்றிருக்கிறது. "சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் ஒரு அன்பான தந்தை இருக்கிறார்"- ரஜினி குறித்து நெகிழும் மகள்கள் இந்நிலையில் படம் பார்த்தப் பிறகு சௌந்தர்யா, ரஜினிகாந்தை வாழ்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், " 'தலைவர்' என்பது ஒரு உணர்வு. அது எனக்கு மட்டுமல்ல. அவரை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தான். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணர மட்டுமே முடியும். 'ஜெயிலர்-2' ஒரு பிரமாண்டமான பிளாக்பஸ்டர் திரைப்படம். என் 'டைகர்' முத்துவேல் பாண்டியன், என் அப்பா திரையில் மீண்டும் ஒரு முறை அதிர வைத்திருக்கிறார். ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த்51 வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார். '51 வருட ரஜினிசம்' இந்தத் திரைப்படத்தை இயக்கிய நெல்சன், இசையமைத்திருந்த அனிருத் என ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது. மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

vikatan
அக். 16, 05:30 AM
“போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுவோரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” - பஞ்சாப் அரசைச் சாடும் அமித் ஷா
இந்தியா

“போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுவோரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” - பஞ்சாப் அரசைச் சாடும் அமித் ஷா

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் ஆவார்.பஞ்சாப்பில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் அந்த மாநில அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.“தற்போது பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் புழக்கம், கேங்க்ஸ்டர் வன்முறைகள் மற்றும் குற்றங்களின் அச்சுறுத்தல்களால் கடுமையாகத் தவித்துக்கொண்டிருக்கிறது. பஞ்சாப் மக்களின் பாதுகாப்பிற்கு இறுதியாக யார் பொறுப்பேற்பார்கள்? என்பதுதான் பகவந்த் மான் அரசின் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வியாகும்.போதை பொருள்மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பு: “ஒடுக்குமுறை மத அடிப்படையிலானதல்ல” - மு.வீரபாண்டியன்தற்கொலை... கொலை... திர்பாவில் நெருக்கடி தாங்க முடியாமல் ஒரு தந்தை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதும், மான்சாவில் போதைப்பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்த பர்விந்தர் சிங் ஜோட்டா பகல் நேரத்திலேயே படுகொலை செய்யப்பட்டதும் பஞ்சாபின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்த தீவிரக் கேள்விகளை எழுப்பியுள்ளன.பர்விந்தரின் தந்தை, ‘ஆம் ஆத்மி’ அரசு மற்றும் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்கவுள்ளது.பாதுகாப்பே கேள்விக்குறி பஞ்சாப்பில் போதைப்பொருள் வர்த்தகம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. மேலும் போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுபவர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.பகவந்த் மான் அவர்களே, பஞ்சாப் மக்களுக்கு வெற்று வாக்குறுதிகள் தேவையில்லை. பதில்கள்தாம் தேவை. அறிவிப்புகள் வேண்டாம், பலன்களே வேண்டும்.போதைப்பொருள் நெட்வொர்க்குகள் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் பாய வேண்டும். குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் அரசியல் பின்னணி குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.ਪੰਜਾਬ ਅੱਜ ਨਸ਼ੇ, ਗੈਂਗਸਟਰਵਾਦ ਅਤੇ ਸੰਗਠਿਤ ਅਪਰਾਧ ਦੇ ਵਧਦੇ ਖ਼ਤਰੇ ਨਾਲ ਜੂਝ ਰਿਹਾ ਹੈ। ਭਗਵੰਤ ਮਾਨ ਸਰਕਾਰ ਦੇ ਸਾਹਮਣੇ ਸਭ ਤੋਂ ਵੱਡਾ ਸਵਾਲ ਹੈ ਕਿ ਆਖ਼ਰ ਪੰਜਾਬ ਦੀ ਜਨਤਾ ਦੀ ਸੁਰੱਖਿਆ ਦੀ ਜ਼ਿੰਮੇਵਾਰੀ ਕੌਣ ਨਿਭਾਏਗਾ? ਦਿੜਬਾ ਵਿੱਚ ਇੱਕ ਪਿਤਾ ਦਾ ਦਬਾਅ ਵਿੱਚ ਜ਼ਹਿਰ ਖਾ ਲੈਣਾ ਅਤੇ ਮਾਨਸਾ ਵਿੱਚ ਨਸ਼ੇ ਖ਼ਿਲਾਫ਼ ਆਵਾਜ਼ ਚੁੱਕਣ ਵਾਲੇ ਪਰਵਿੰਦਰ ਸਿੰਘ ਝੋਟਾ ਦੀ ਦਿਨ-ਦਹਾੜੇ ਹੱਤਿਆ ਨੇ ਪੰਜਾਬ ਦੀ ਕਾਨੂੰਨ-ਵਿਵਸਥਾ 'ਤੇ ਗੰਭੀਰ ਸਵਾਲ ਖੜ੍ਹੇ ਕਰ ਦਿੱਤੇ ਹਨ। ਪਰਵਿੰਦਰ ਦੇ ਪਿਤਾ ਨੇ 'ਆਪ' ਸਰਕਾਰ ਅਤੇ ਉਨ੍ਹਾਂ ਦੇ ਵਿਧਾਇਕ 'ਤੇ ਗੰਭੀਰ ਦੋਸ਼ ਲਗਾਏ ਹਨ। ਗ੍ਰਹਿ ਮੰਤਰਾਲਾ ਵੀ ਇਨ੍ਹਾਂ ਦੋਵਾਂ ਘਟਨਾਵਾਂ 'ਤੇ ਪੰਜਾਬ ਸਰਕਾਰ ਤੋਂ ਜਵਾਬ ਮੰਗੇਗਾ। ਪੰਜਾਬ ਵਿੱਚ ਨਸ਼ੇ ਦਾ ਕਾਰੋਬਾਰ ਦਿਨੋਂ-ਦਿਨ ਵਧ ਰਿਹਾ ਹੈ, ਸੰਗਠਿਤ ਅਪਰਾਧ ਦਾ ਖ਼ਤਰਾ ਵਧ ਰਿਹਾ ਹੈ ਅਤੇ ਨਸ਼ੇ ਖ਼ਿਲਾਫ਼ ਆਵਾਜ਼ ਚੁੱਕਣ ਵਾਲਿਆਂ ਦੀ ਸੁਰੱਖਿਆ 'ਤੇ ਸਵਾਲ ਖੜ੍ਹੇ ਹੋ ਰਹੇ ਹਨ। ਭਗਵੰਤ ਮਾਨ ਜੀ, ਪੰਜਾਬ ਦੀ ਜਨਤਾ ਨੂੰ ਪ੍ਰਚਾਰ ਨਹੀਂ, ਜਵਾਬ, ਐਲਾਨ ਨਹੀਂ, ਨਤੀਜੇ, ਨਸ਼ੇ ਦੇ ਨੈੱਟਵਰਕ 'ਤੇ ਨਿਰਣਾਇਕ ਪ੍ਰਹਾਰ ਅਤੇ ਅਪਰਾਧੀਆਂ ਨੂੰ ਮਿਲਣ ਵਾਲੀ ਕਿਸੇ ਵੀ ਰਾਜਨੀਤਿਕ ਸਰਪ੍ਰਸਤੀ ਦੀ ਨਿਰਪੱਖ ਜਾਂਚ ਚਾਹੀਦੀ ਹੈ। ਮੈਂ ਅੱਜ ਪੰਜਾਬ ਦੀ ਜਨਤਾ ਦੇ ਸਾਹਮਣੇ ਆਪਣਾ ਸੰਕਲਪ ਦੁਹਰਾਉਂਦਾ ਹਾਂ ਕਿ ਪੰਜਾਬ ਵਿੱਚ ਸਾਡੀ ਸਰਕਾਰ ਬਣਨ 'ਤੇ ਅਸੀਂ ਨਸ਼ਾਮੁਕਤ, ਗੈਂਗਸਟਰਮੁਕਤ ਅਤੇ ਸੁਰੱਖਿਅਤ ਪੰਜਾਬ ਬਣਾਉਣ ਲਈ ਪੂਰੀ ਤਾਕਤ ਨਾਲ ਕੰਮ ਕਰਾਂਗੇ। ਸਾਡਾ ਟੀਚਾ ਸਪੱਸ਼ਟ ਹੈ - ਨਸ਼ੇ ਦੇ ਕਾਰੋਬਾਰ 'ਤੇ ਪ੍ਰਹਾਰ, ਨੌਜਵਾਨਾਂ ਦੇ ਭਵਿੱਖ ਦੀ ਰੱਖਿਆ, ਅਪਰਾਧੀਆਂ 'ਤੇ ਸਖ਼ਤ ਕਾਰਵਾਈ ਅਤੇ ਕਾਨੂੰਨ ਦਾ ਅਜਿਹਾ ਰਾਜ, ਜਿਸ ਵਿੱਚ ਕੋਈ ਵੀ ਨਾਗਰਿਕ ਡਰ ਦੇ ਸਾਏ ਵਿੱਚ ਜਿਊਣ ਲਈ ਮਜਬੂਰ ਨਾ ਹੋਵੇ।— Amit Shah (@AmitShah) October 16, 2026 எங்களுடைய ஆட்சி... பஞ்சாப் மக்களிடம் ஒன்றை இன்று மீண்டும் நினைவூட்டுகிறேன். பஞ்சாப்பில் எங்களது ஆட்சி அமையும்போது, போதைப்பொருள் அற்ற, கேங்க்ஸ்டர்கள் அற்ற மற்றும் பாதுகாப்பான பஞ்சாப்பை உருவாக்க முழுமையாக உழைப்போம்.எங்களின் இலக்கு மிகத் தெளிவானது. போதைப்பொருள் வர்த்தகத்தின் மீதான அதிரடித் தாக்குதல், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் எந்தவொரு குடிமகனும் அச்சத்தின் நிழலில் வாழ நிர்ப்பந்திக்கப்படாத சட்டத்தின் ஆட்சி!” என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அமித் ஷா.Gold: பண்டிகை சீசன் நெருங்குது! தங்க முதலீட்டிற்கு செபி போடும் பிரேக்; எந்த SIPகளுக்குத் தடை?

vikatan
அக். 16, 05:30 AM
"ஸ்டாலின், விஜய் ரெண்டு பேருமே பாராட்டினாங்க" - பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்த பொன்னி பேட்டி
இந்தியா

"ஸ்டாலின், விஜய் ரெண்டு பேருமே பாராட்டினாங்க" - பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்த பொன்னி பேட்டி

கோவையின் புதிய அடையாளமாக மாறியிருக்கும் பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.16) திறந்து வைத்தார். ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த நூலகத்தை சென்னை கட்டடக்கலை நிபுணர் பொன்னி என்பவர் வடிவமைத்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் பொன்னி ஆஸ்கர் திருச்சியில் உள்ள என்.ஐ.டி. கல்லுாரியில் படித்தவர். தெலங்கானாவில் அம்மாநில தலைமைச் செயலகத்தை வடிவமைத்திருக்கிறார். பெரியார் அறிவுலகம்இந்நிலையில் பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்த பொன்னியிடம் வாழ்த்தைக் கூறிவிட்டு பேசத்தொடங்கினோம். இந்தத் திட்டத்தை வடிவமைக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசிய பொன்னி, "மாநில அரசு அறிவுலகம் வடிவமைக்க போட்டி ஒன்றை நடத்தியது. 20 வடிவமைப்பாளர்கள் அதில் பங்கேற்றோம். எனது கணவரும் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தார். பல பிரபல கட்டடக் கலைஞர்களுடன் போட்டியிட்டதில் எனது வடிவமைப்புத் தேர்ந்தெடுக்கப்பட்டது. பெரியார் நூலகம்: 'Cheap CM-இன் Sticker ஆட்சியில்.!'- முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்ஒரு புத்தகம் திறந்திருப்பதுபோல் கட்டடத்தை வடிவமைத்திருக்கிறோம். இதுமட்டுமின்றி, ரூ.1,200 கோடி மதிப்பில் 12 லட்சம் சதுர அடியில் அமைந்த தெலங்கானா தலைமைச் செயலகத் திட்டத்திற்கான போட்டியிலும் நானும் பங்கேற்றிருக்கிறேன்.30 கட்டடக் கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த 12 மாதப் போட்டியின் முடிவில் எனது வடிவமைப்பு தேர்வானது.அதை வெறும் 26 மாதங்களிலேயே கட்டி முடித்தோம். அமெரிக்காவில் படித்துப் பணியாற்றிய அனுபவம் இது போன்ற மிகப்பெரிய கட்டடங்களை உருவாக்க எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. பொன்னி-பெரியார் நூலகத்தை வடிவமைத்தவர்ஆந்திர அரசு திட்டங்கள், சாஃப்ட்வேர் பூங்காக்கள் மற்றும் தெலங்கானாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான 5 பள்ளிகள் எனப் பல அரசுத் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது ஒரு ஆட்சியும், திறக்கப்பட்டபோது வேறு ஆட்சியும் இருக்கிறது. ஆனால் திரு. மு.க. ஸ்டாலின் மற்றும் தற்போதைய முதல்வர் இருவருமே எனது வேலையை மிகவும் பாராட்டி ஆதரவு அளித்தனர்.மருத்துவர்களுக்கு நோயாளி யாராக இருந்தாலும் சிகிச்சை அளிப்பதே கடமை என்பது போல், நாங்களும் அரசியல் கடந்து நாட்டிற்குச் சேவை செய்பவர்கள். எனது கட்டடக்கலைத் திறனை வெளிப்படுத்த அரசாங்கம் ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தது. நாட்டிற்குச் சேவை செய்வதே எனது முதன்மை நோக்கம்" என்றார் நெகிழ்ச்சியாக...Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

vikatan
அக். 16, 05:30 AM
Vijay: முதலமைச்சர் விஜய்யின் கேரளப் பயணம் திடீர் ரத்து; காரணம் என்ன?
இந்தியா

Vijay: முதலமைச்சர் விஜய்யின் கேரளப் பயணம் திடீர் ரத்து; காரணம் என்ன?

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வரை விஜய் ரோடு ஷோ வந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் த.வெ.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விஜய், கேரளம் மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில் நடைபெறும் நவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தார்.இதனிடையே மதிய நேரத்தில் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மோசமான வானிலை நிலவியதால், முதலமைச்சர் விஜய்யின் கேரளப் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பெரியார் அறிவுலகத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றபோது, மீண்டும் ரோடு ஷோ சென்றார். விஜய்அப்போது மழை பெய்த நிலையிலும் பொதுமக்கள் மற்றும் த.வெ.க-வினர் கலைந்து செல்லாமல் இருந்தனர். வாகனத்தில் குடை பிடித்தபடி சென்ற விஜய், சாலையில் இரண்டு புறமும் காத்திருந்தவர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.ஊத்தங்கரை எம்.எல்.ஏ நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு!

vikatan
அக். 16, 05:30 AM
CJP-யின் தேசியக் கொடி போராட்டம்; மீண்டும் கைது செய்யப்பட்ட அபிஜித் தீப்கே; என்ன நடந்தது?
இந்தியா

CJP-யின் தேசியக் கொடி போராட்டம்; மீண்டும் கைது செய்யப்பட்ட அபிஜித் தீப்கே; என்ன நடந்தது?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியாக் கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் எனக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போராட வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். குறிப்பாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே விமானத்தின் உள்ளே வைத்தே கைது செய்யப்பட்டார்.ஜந்தர் மந்தர் இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் இனி போராட அனுமதி கிடையாது என மத்திய உள்துறை அனுமதியுடன் டெல்லி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனை மீறி கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்டோர் நேற்று (அக்.14) தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து இந்தியக் கொடியைக் காண்பித்தனர்.உடனடியாக அங்கே இருந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, ஐந்து நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 'முதல்வர் விஜய்-ன் ஆந்திர பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?'- துரைமுருகன் கேள்விஇந்நிலையில் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி மற்றும் மும்பையில் 'லேரா தோ திரங்கா' (மூவர்ணக் கொடியை ஏந்துவோம்) என்ற போராட்டத்தை சிஜேபி இன்று நடத்த இருந்தது.அறிவிக்கப்பட்டப்படி தேசியக் கொடி போராட்டத்தில் பங்கேற்க வீட்டில் இருந்து புறப்பட்ட சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கேவை காவல்துறையினர் தடுத்து அழைத்துச் சென்றிருக்கின்றனர். அபிஜித் தீப்கேஇன்று காலை அபிஜித் தீப்கே செய்தியாளர்களைச் சந்தித்தப்போது , "இந்தப் போராட்டத்திற்கு முன்னதாக, டெல்லி காவல்துறை தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும். உளவுத்துறை அதிகாரிகள் தன்னைக் கண்காணித்து வருகின்றனர். எண்களற்ற வாகனங்கள் தன் பின்னால் வருகிறது. நாட்டில் தேசியக் கொடியை ஏந்துவதற்காக சிறை செல்ல நேரிட்டாலும் அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'டெல்லி காவல்துறை என்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்,சிறை செல்லவும் நான்.!'- அபிஜித் தீப்கே Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

vikatan
அக். 16, 05:30 AM
"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" - இடும்பாவனம் கார்த்திக் காட்டம்
இந்தியா

"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" - இடும்பாவனம் கார்த்திக் காட்டம்

இடைத்தேர்தல் தோல்வியால் நாம் தமிழர் கட்சி சோர்ந்துவிடவில்லை, நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம் என்கிறார் அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். தொடர்ந்து அவரிடம் பேசுகையில்...தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?இந்த இடைத்தேர்தல் முடிவு என்பது ஏற்புடையதல்ல. மக்கள் மீது வருத்தம் இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது, இந்த முடிவைக் கொடுத்திருக்கக் கூடாது என்று பார்க்கிறோம். அதே சமயத்தில் இடைத்தேர்தலே ஒரு ஜனநாயகப் படுகொலை என்றுதான் பார்க்கிறோம்; வழக்கமாக இடைத்தேர்தல் நடக்கும்போது அங்கு காசு கொடுத்து, பரிசுப் பொருள் கொடுத்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்வார்கள். ஆனால் இந்த முறை ஜனநாயகத்தைப் படுகொலை செய்து, இடைத்தேர்தலை உருவாக்கி, இங்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள்; எப்படிப் பார்த்தாலும் இது ஏற்புடையது அல்ல, இது ஒரு கேலிக்கூத்து.இரண்டு தொகுதியிலும் உங்கள் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருப்பது, கட்சிக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?சீமான் நாம் தமிழர் கட்சிக்குள் பெரிய தாக்கத்தை இந்தத் தேர்தல் உருவாக்கவில்லை.மக்கள் நம் உழைப்புக்கான அங்கீகாரத்தைத் தரவில்லை; மக்கள் நம்மைப் புரிந்துகொள்ளவில்லை என்கிற வருத்தம் எப்போதும் இருக்கிறது. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு நாம் சோர்ந்துவிட்டோம் அல்லது ஓய்ந்துவிட்டோம் என்று இல்லை. மக்களை இன்னும் அரசியல்படுத்த வேண்டும், இன்னும் தெளிவூட்ட வேண்டும், இன்னும் இந்தத் திரைக்கவர்ச்சியிலிருந்து வெளிவர வைக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வு இருக்கிறது; அதனால் நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம்.நாம் தமிழர் கட்சியை மக்கள் ஏன் அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள்?கருத்தியல் அரசியலை விடக் கவர்ச்சி அரசியலுக்கு இருப்பு அதிகம். த.வெ.கவின் கொள்கை, தேர்தல் அறிக்கையை பகுப்பாய்வு செய்து மக்கள் வாக்களிக்கவில்லை. தனக்குப் பிடித்த, தன்னால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகனுக்கு வாக்கு செலுத்தியிருக்கிறார்கள். அந்தத் திரைப்பிம்பம் மட்டும்தான் விஜய்க்கான ஒரே மூலதனம்; அதுமட்டும்தான் அவருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது.சீமானைச் சுற்றியிருப்பவர்கள் சாதி வெறியர்களாகவும் மதவெறியர்களாகவும்தான் இருக்கிறார்கள் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் விமர்சித்திருக்கிறாரே?அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது அப்பட்டமான வன்மம், காழ்ப்புணர்ச்சி, பொறாமை; அதைத் தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் நாம் தமிழர் கட்சியில் சாதியவாதத்தோடு, மதவாதத்தோடு யார் செயல்பட்டது?.., அவர் ஆதரிக்கக்கூடிய, கூட்டணி வைத்துள்ள த.வெ.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பொதுமேடையில் "நான் சாதிவெறியன், நான் சாதிவெறியில் பெருமைப்படுகிறேன்" என்று பேசியிருக்கிறார்.விசிக மாநாடு - திருமாவளவன்அவரை ஒன்று சட்டமன்ற உறுப்பினராக்கியிருக்கிறார்கள். அதேபோல நிர்மல் குமார் பா.ஜ.கவின் நிலைப்பாடுகளை மிக வலிமையாகப் பேசியவர், பா.ஜ.கவின் குரலாக ஒலித்தவர், ஆர்.எஸ்.எஸ்-இன் காக்கி உடை போட்டுக்கொண்டு சாகா முகாமில் பங்கேற்றவர்; அவரைக் கொண்டுவந்து த.வெ.கவின் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக அமர்த்தி, அவருக்கு அமைச்சர் பொறுப்பையும் வழங்கிவிட்டார் விஜய். இதற்கு அண்ணன் திருமாவளவன் என்ன சொல்லப் போகிறார்?நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்களிடம் ஞானம் இல்லை, முதிர்ச்சி இல்லை, பக்குவம் இல்லை" என்று சொல்கிறீர்கள்; உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டில் ஓடிப்போனீர்களே, ஏன் ஓடிப்போனீர்கள்?.., அங்கு கட்டுக்கோப்பு, ஒழுங்கு, நேர்த்தி துளியாவது இருந்ததா? கட்சித் தலைவரையே மதிக்காத கட்சிக்காரன் அமைப்பாகத் திரள்வானா?..,நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநாட்டில் ஒரே ஒரு சின்ன சலசலப்பு, தேவையில்லாத கூச்சல் இருந்ததா? ..,வி.சி.க கூட்டத்தில் மேடையில் ஏறித் தகராறு செய்கிறானே கட்சிக்காரன், அதை நாம் தமிழர் கட்சிக்காரன் செய்திருக்கிறானா? நாம் தமிழர் கட்சி தி.மு.கவோடு நெருக்கமாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் நிறைய பேர் எழுதுகிறார்கள். உங்கள் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியே போன சிலரும்கூட விமர்சனமாக முன்வைக்கிறார்களே?நாம் தமிழரிலிருந்து போன ஆட்கள் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கத்தான் செய்வார்கள், அதை விட்டுவிடலாம். நாம் தமிழர் கட்சி எந்த இடத்தில் தி.மு.கவோடு நெருக்கமாக இருந்தது. பிரச்னைகள் சார்ந்து ஒரு நிலைப்பாடு எடுப்பது பற்றிய பார்வை த.வெ.க காரனுக்குக் கிடையாது. ஒரு பிரச்னையில் யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் பக்கம்தான் நிற்க முடியும். உதாரணமாகச் சொன்னால், ராகுல் காந்தியை நாடாளுமன்றத்திலிருந்து தகுதிநீக்கம் செய்தபோது, அது ஜனநாயகப் படுகொலை என்று அண்ணன் சீமான் அறிக்கை விட்டார். ஏனென்றால் அந்தப் பிரச்சினையில் ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர். எடப்பாடி பழனிச்சாமியை ஆ.ராசா கடுமையாகப் பேசியபோது அதைக் கண்டித்தோம். அப்படித்தான் தி.மு.க பக்கமும் பேசியிருக்கிறோம். சட்டமன்றத்தில் வெளிநடப்பு என்பது காலங்காலமாக இருக்கக்கூடிய ஒரு நடைமுறை, அது எதிர்ப்பின் வெளிப்பாடு.ஸ்டாலின் - சீமான் சந்திப்பு 110 விதிகளை வாசிக்கும்போது விவாதிக்க முடியாது என்றால் வெளிநடப்பு செய்து வெளியே போய் ஊடகங்களைச் சந்தித்துத் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்; எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஜனநாயக வழிமுறைதான் வெளிநடப்பு. ஆனால் வெளிநடப்பை, ஓடிப்போகிறார்கள்" என்று முதல்வர் கொச்சைப்படுத்துவது தவறு. அதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். சட்டமன்றத்தில் சைகை செய்து மாண்பைக் குலைக்கிறீர்கள். அதைத்தான் நாங்கள் கண்டித்தோம். அதற்கு உடனே தி.மு.க ஆதரவு என முத்திரை குத்துகிறார்கள். தி.மு.க தலைவர்களோடு நெருக்கமாக இருக்கிறீர்கள், பணம் சார்ந்து கூட குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?இது உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதை. நாம் தமிழர் கட்சிக்குப் பணம்தான் பிரதானம் என்றால் 2026 வரைக்கும் காத்திருக்கத் தேவையில்லையே ?..,8 சதவிகித வாக்குக்கு இன்றைக்குத் தேர்தலில் எவ்வளவு மதிப்பு, மிகக் குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய். ஒரு லெட்டர் பேடு இயக்கம் என்றால் கூடப் பிரச்சாரம் செய்ய 10 கோடி ரூபாய் தருகிறார்கள். அப்படியிருக்கும்போது 8 சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி அ.தி.மு.கவோடோ பா.ஜ.கவோடோ கூட்டணிக்குச் சென்றிருந்தால் எவ்வளவு கொடுத்திருப்பார்கள், அதைச் செய்யாமல் தான் நிற்கிறோம். தமிழ்நாட்டில் எந்தக் கட்சி இவ்வளவு தோல்விகளைக் கண்ட பிறகும் கூட்டணியைப் பற்றி யோசிக்காமல் இருக்கிறது?தற்போது, உங்கள் கட்சியிலேயே அதுபோன்ற குரல்கள் எழுவதாக தகவல்கள் வருகின்றனவே?அப்படியெல்லாம் இல்லை; நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாம் தமிழர் கட்சி ஒரு கொள்கை, கோட்பாட்டை வைக்கிறது. தமிழ் நலனுக்காக இயங்கக்கூடிய ஒரு மாற்று அரசியல் சக்தி வருகிறார்கள் என்றால் ஏற்பது குறித்துப் பரிசீலிக்கலாம் இப்போது அண்ணன் வேல்முருகன் நாம் தமிழர் கட்சியின் தலைமையேற்று வருகிறார் என்றால் தலைமேற்கொண்டு வரவேற்கிறோம்; ஆனால் நாங்கள் யார் தலைமையின் கீழும் போவதற்கு வாய்ப்பில்லை.இடும்பாவனம் கார்த்திக் நாங்கள் இன்னொரு தலைமையை ஏற்றுக்கொண்டு கரைந்துபோவதற்கு வாய்ப்பில்லை; ஒருவேளை கூட்டணி என்றால் கூட அது நல்ல ஆற்றலாக இருந்து நாம் தமிழர் கட்சித் தலைமையில் வந்தால் பார்க்கலாம். மற்றபடி நாங்கள் தி.மு.க தலைமையையோ, அ.தி.மு.க தலைமையையோ, பா.ஜ.க தலைமையையோ ஏற்றுப்போவதற்கு வாய்ப்பில்லை. நாம் தமிழர் கட்சியில் மாவட்ட அளவில் ஆட்களை வளர்க்கவில்லை என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?தயவுசெய்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டங்கள், போராட்டங்களை ஊடகங்கள் செய்தியாக மாற்றுங்கள், மக்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். 16 ஆண்டுகளாக ஊடக வெளிச்சம் நாம் தமிழருக்குக் சரியாகக் கிடைக்கவில்லை. தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.கவுக்கு கொடுக்கும் வெளிச்சத்தை எங்களுக்கும் கொடுங்கள். எங்கள் கட்சியில், கடைக்கோடி தொண்டன் வரை தத்துவார்த்தப் பக்குவம், முதிர்ச்சி இருக்கிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக செய்திகள் வெளியானது. இன்னும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா?இது குறித்து அதிகாரப்பூர்வமாக தலைமை அறிவிக்கும்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

vikatan
அக். 16, 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

``மின்சாரக் கொள்முதல் முதல் சாலை டெண்டர் வரை... இது டம்மி அரசு" - தவெக அரசைச் சாடும் எடப்பாடி
இந்தியா

``மின்சாரக் கொள்முதல் முதல் சாலை டெண்டர் வரை... இது டம்மி அரசு" - தவெக அரசைச் சாடும் எடப்பாடி

vikatan
Oct 143 நிமிடம் படிக்க
வள்ளலார் சபை நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் - ஆட்சியர், எஸ்.பி-க்கு நீதிமன்றம் `கெடு’ விதித்த பின்னணி
இந்தியா

வள்ளலார் சபை நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் - ஆட்சியர், எஸ்.பி-க்கு நீதிமன்றம் `கெடு’ விதித்த பின்னணி

vikatan
Oct 123 நிமிடம் படிக்க
'ரொம்ப விசுவாசமா இருக்காரே...' - அமைச்சர் ஆனந்தின் சட்டையை பார்த்து வியந்த பிரதமர் மோடி?
இந்தியா

'ரொம்ப விசுவாசமா இருக்காரே...' - அமைச்சர் ஆனந்தின் சட்டையை பார்த்து வியந்த பிரதமர் மோடி?

vikatan
Oct 123 நிமிடம் படிக்க
அமெரிக்கா: கோயிலில் திரண்டிருந்த இந்தியர்கள்; துப்பாக்கி வேலை செய்யாததால் தடுக்கப்பட்ட விபரீதம்
இந்தியா

அமெரிக்கா: கோயிலில் திரண்டிருந்த இந்தியர்கள்; துப்பாக்கி வேலை செய்யாததால் தடுக்கப்பட்ட விபரீதம்

அமெரிக்காவில் சிகாகோவிற்கு அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்.வழக்கம் போல, கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11), அந்தக் கோயிலின் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் ஆகிக்கொண்டிருந்தன. பக்தர்களும் கோயிலில் இருந்திருக்கின்றனர்.மதிய நேரத்தில், அந்தக் கோயிலுக்குள் 19 வயதான அலெக்ஸாண்ட்ரோஸ் பாப்போராகிஸ் சென்றிருக்கிறார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.இந்தியர்களைப் பிடிக்காமல், கோயிலில் குழுமியிருந்த இந்தியர்களைச் சுட்டுக்கொல்வதே பாப்போராகிஸின் திட்டமாக இருந்திருக்கிறது.சம்பவம் நடந்த கோயில்இந்தியாவிலேயே பணவீக்கத்தில் 'தமிழ்நாடு' முதலிடம்; ஏன் தமிழ்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயருகிறது?ஆனால், அங்கே அவரது ஏஆர்-15 (AR-15) ரகத் துப்பாக்கி ஜாம் ஆகி இயங்காமல் போயிருக்கிறது. இதனால், யாருக்கும் தெரியாமல் கோயிலில் இருந்து தப்பித்திருக்கிறார் அலெக்ஸாண்ட்ரோஸ் பாப்போராகிஸ்.சம்பவம் நடந்த நேரத்தில், அது நவராத்திரியின் முதல் நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடியிருந்ததாகத் தெரியவருகிறது.திட்டம் நடைபெறாமல் திரும்பச் சென்ற பாப்போராகிஸ் தன்னுடைய சக ஊழியரிடம் அவருடைய துப்பாக்கி செயல்படாமல் போனது குறித்துச் சொல்லியிருக்கிறார். அந்தச் சக ஊழியர் போலீசாருக்குக் கொடுத்த தகவலில்தான் மொத்தச் சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாப்போராகிஸின் வீட்டைச் சோதனை செய்து பார்த்ததில் இன்னும் சில ஆயுதங்களும், இந்தியர்களுக்கு எதிராக அவர் போட்டு வைத்த திட்டங்களும் தெரியவந்திருக்கிறது.அமெரிக்காவில் இருந்து வரும் இந்திய எதிர்ப்பு, தெற்காசிய எதிர்ப்பு, இது சம்பந்தமான இணையப் பதிவுகள்தான் இந்த மாதிரியான சம்பவங்களுக்குக் காரணம் என்று NDTV-க்குக் கொடுத்த பேட்டியில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகமும் இந்த வெறுப்புத் தீயைப் பரப்புகிறது என்று கூறியிருக்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி.இந்திய அரசின் அறிக்கைGold: பண்டிகை சீசன் நெருங்குது! தங்க முதலீட்டிற்கு செபி போடும் பிரேக்; எந்த SIPகளுக்குத் தடை?அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு இந்திய அரசும், “இந்தச் சம்பவம், அமெரிக்காவில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் இந்திய எதிர்ப்பு உணர்வுகள் குறித்த கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.விழிப்புணர்வை அதிகரிப்பது, வெறுப்பினால் தூண்டப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் இந்தியச் சமூகத்தினரின் பாதுகாப்பையும் நிம்மதியையும் உறுதி செய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை தற்போதைய அவசியத் தேவையாகும்” என்று கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது.

vikatan
Oct 16, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

Modi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

Modi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று (அக்டோபர் 11) நவராத்திரியின் முதல் நாள்.இதை முன்னிட்டு, ‘கற்பூர நாயகி’ என்னும் தமிழ் பக்திப் பாடலை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நவராத்திரியின் சுபவேளையில், அமைதியின் அதிபதியான ஸ்ரீ சைலபுத்திரி தேவியின் பாதங்களில் கோடானுகோடி வணக்கங்கள். அன்னையின் திவ்ய அருள் அனைவரின் இதயத்திலும் பொறுமையையும் தன்னம்பிக்கையையும் சுடரச் செய்யட்டும். नवरात्रि के शुभारंभ पर शांति की अधिष्ठात्री मां शैलपुत्री के चरणों में कोटिश: नमन। उनकी दिव्य कृपा से सभी के मन में धैर्य और आत्मविश्वास का दीप प्रज्वलित हो। देशवासियों पर सदैव मां का आशीर्वाद बना रहे, यही कामना है।https://t.co/z4ktFiTagZ— Narendra Modi (@narendramodi) October 11, 2026 பிரதமர் மோடி வருகை; விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய்!தேவியின் ஆசிகள் நாட்டின் மக்கள் மீது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று நவராத்திரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி.இன்று போரூர் மெட்ரோ ரயில் நிலையத் திறப்பிற்காகச் சென்னை வந்திருக்கிறார் மோடி.இந்த நேரத்தில் தமிழ் பக்திப் பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் மோடி பகிர்ந்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
Musk Vs Ambani: இந்தியாவின் டிஜிட்டல் சிம்மாசனத்திற்கு நடக்கும் யுத்தம் - இணையப் போரின் பின்னணி!
இந்தியா

Musk Vs Ambani: இந்தியாவின் டிஜிட்டல் சிம்மாசனத்திற்கு நடக்கும் யுத்தம் - இணையப் போரின் பின்னணி!

ஒருபுறம் இந்தியாவின் தொலைத்தொடர்பு சாம்ராஜ்யத்தை தன் கைக்குள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் அதிபதி முகேஷ் அம்பானி. மறுபுறம் விண்ணில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, பூமியின் எந்த மூலையையும் இணையத்தால் இணைக்கத் துடிக்கும் அமெரிக்க விண்வெளி நாயகன் எலான் மஸ்க். பூமியில் நடக்கும் இணையப் போட்டியைத் தாண்டி, விண்வெளியில் இருந்து பூமிக்கு இணையம் வழங்கும் சாட்டிலைட் பிராட்பேண்ட் சந்தையைக் கைப்பற்றுவதே இவர்களுக்கிடையேயான மோதலின் மையம். Starlink - Jioமோதலின் ஆரம்பம்அலைக்கற்றை ஏலமா அல்லது ஒதுக்கீடா?இணைய சேவை வழங்க அலைக்கற்றை (Spectrum) எனப்படும் ரேடியோ அலைவரிசை அவசியம். இந்த அலைவரிசையை அரசு நிறுவனங்களுக்கு எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதில் தான் முதல் யுத்தம் வெடித்தது. அம்பானியின் வாதம் (ஏல முறை - Auction)முகேஷ் அம்பானி, “இந்தியாவில் நாங்கள் பல லட்சம் கோடிகளை முதலீடு செய்து மொபைல் டவர்கள், ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் அமைத்து, அரசாங்கத்திடம் வெளிப்படையான பொது ஏலத்தில் பல ஆயிரம் கோடிகளைக் கொட்டி அலைக்கற்றையை வாங்கினோம். வெளிநாட்டு நிறுவனமான மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) உள்ளே வரும்போதும் அதேபோல வெளிப்படையான ஏலத்தின் மூலமே அலைக்கற்றையை வாங்க வேண்டும். இல்லையென்றால் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அது அநீதி” என்று போர்க்கொடி தூக்கினார். எலான் மஸ்க்கின் வாதம் (நிர்வாக ஒதுக்கீடு - Administrative Allocation)மஸ்க், “சாட்டிலைட் இன்டர்நெட் என்பது செல்போன் டவர் சேவை போன்றதல்ல; சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் (ITU) விதிமுறைகளின்படி உலகம் முழுவதுமே செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் விடப்படுவதில்லை. அதை நிர்வாக ரீதியாக அரசுக் கட்டணம் பெற்றுக்கொண்டு பகிர்ந்தளிக்க வேண்டும். இந்தியாவில் ஏலம் கோருவது சர்வதேச விதிகளுக்கே எதிரானது” என வாதிட்டார். மத்திய அரசு, சர்வதேச நடைமுறைகளின்படி சாட்டிலைட் அலைக்கற்றையை நிர்வாக ஒதுக்கீடு வழியாகவே வழங்கி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நிர்ணயிக்கும் கட்டணத்தை வசூலிக்க முடிவெடுத்தது. இதனால் கொள்கை முடிவில் மஸ்க்கிற்குச் சாதகமான நிலை உருவானது. Mukesh Ambaniபின்னணியில் உள்ள வணிகமும் அரசியலும்1. தரவு ஆதிக்கமும் சந்தைப் பாதுகாப்பும்இந்தியாவில் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள ஜியோ, கிராமப்புறங்களிலும் தொலைதூரப் பகுதிகளிலும் அடுத்தகட்ட பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை ஈர்க்கத் திட்டமிடுகிறது. ஆனால் ஸ்டார்லிங்க் டவர்களே இல்லாத மலைக்கிராமங்கள், கப்பல்கள், பாலைவனங்கள் மற்றும் வனப்பகுதிகளுக்கு நேரடியாக வானிலிருந்து அதிவேக இணையத்தை வழங்கிவிடும் திறன் கொண்டது. இதனால் எதிர்கால சந்தை கைநழுவிவிடுமோ என்ற அச்சம் உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. 2. தேசியப் பாதுகாப்பு விவகாரம் (National Security) ஸ்டார்லிங்க் இந்தியாவில் நுழைவதில் காலதாமதம் ஏற்படக் காரணம் வணிகப் போட்டி மட்டுமல்ல; பாதுகாப்பு விதிமுறைகளும் தான். இந்திய அரசின் விதிகளின்படி, இந்தியப் பயனர்களின் தரவுகள் (Data) இந்திய எல்லைக்குள் உள்ள சர்வர்களிலேயே சேமிக்கப்பட வேண்டும்.அவசரக் காலங்களில் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக இணையப் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் முடக்கவும் இந்தியப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அணுகல் வழங்க வேண்டும். விண்வெளியில் உள்ள லேசர் இணைப்புகள் வழியே இந்திய டேட்டா வெளிநாட்டுப் பாதைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளுக்கு ஒப்புதல் பெறுவதில் இழுபறி நீடித்தது. எலான் மஸ்க்3. புவிசார் அரசியல் (Geopolitics)எலான் மஸ்க் தனது 'எக்ஸ்' (X) தளத்தில், இந்திய முடிவுகளில் உள்நாட்டுத் தொழிலதிபர்களின் ஆதிக்கம் இருப்பதாகக் கடுமையான பதிவுகளை வெளியிட்டார். இந்திய அரசியல் எதிர்க்கட்சிகளும், "அரசாங்கம் குறிப்பிட்ட பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா?" என்ற கேள்வியை எழுப்பி இதை அரசியல் விவாதமாக மாற்றின. உலகளவில் அதிகார வர்க்கத்தின் தடையின்றி இயங்க நினைக்கும் ஒரு சர்வதேச டெக் நிறுவனத்துக்கும், நாட்டின் இறையாண்மை மற்றும் உள்நாட்டுத் தொழில்துறையைக் காக்க நினைக்கும் அரசுக்கும் இடையேயான மோதலாகவும் இது பார்க்கப்படுகிறது. இணையம் மூலம் உலகை ஆள நினைப்பவர்களின் சண்டையா? ஆம், அதன் நவீனப் பரிமாணம் இது. தொழிற்புரட்சிக் காலத்தில் நிலக்கரியும் கச்சா எண்ணெயும் உலகை ஆண்டன; இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டேட்டா (Data) தான் புதிய கச்சா எண்ணெய். யார் அதிவேகமாக, எந்தவொரு நிலப்பரப்புத் தடையுமின்றி உலகளாவிய மக்களிடம் இணையத்தை எடுத்துச் செல்கிறார்களோ, அவர்களிடமே நிதி, தகவல், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித சிந்தனையின் இயங்குதளம் குவியும். மஸ்க்கின் நோக்கம் ஸ்டார்லிங்க் மூலம் உலகளாவிய விண்வெளி இணைய ஏகபோகத்தை உருவாக்குவது; அம்பானியின் நோக்கம் இந்தியாவின் டிஜிட்டல் சுயாட்சியைத் தனது கட்டுப்பாட்டில் நிலைநிறுத்துவது. starlink - satellite internetஇந்தப் போராட்டம் எலான் மஸ்க் அல்லது முகேஷ் அம்பானி ஆகிய இரு தனிநபர்களுக்கு இடையிலான கௌரவப் போர் மட்டுமல்ல; தொழில்நுட்பத்தின் புதிய எல்லைக்கும் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் இடையேயான சோதனை. இறுதியில் இரு நிறுவனங்களும் நேரடியாக மோதிக்கொள்வதோடு மட்டுமின்றி, இந்திய உள்நாட்டு விநியோகக் கூட்டணிகளில் கைகோக்கும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகின்றன. இப்போட்டியில் சரியான கட்டுப்பாடுகளுடன் நியாயமான கட்டணக் கட்டமைப்பு உருவானால், இதன் உண்மையான பலன் இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களுக்கும் உயர்தர இணையம் மலிவான விலையில் சென்றடைவதுதான்.

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
பிரதமர் மோடி வருகை; விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய்!
இந்தியா

பிரதமர் மோடி வருகை; விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய்!

இன்று (அக்டோபர் 11) சென்னை வந்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி.இன்று காலை 10.58 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் மோடி.விமான நிலையத்திற்கு வந்து மோடியை நேரில் சென்று வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மோடியின் முதல் தமிழ்நாடு விசிட் இது.மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.ரோட் ஷோடெல்லியில் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்; இந்தியாவின் பதில் என்ன?மோடியின் இன்றைய விசிட்டின் முக்கிய நோக்கமே போரூர் மெட்ரோ ரெயில் நிலையத் திறப்பு விழாதான்.இதனால், விமான நிலையத்திலிருந்து நேரடியாக போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குச் சென்றார் மோடி.விமான நிலையம் டு போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் மோடி ரோட் ஷோ நடைபெற்றது.மோடியின் காரைப் பின்தொடர்ந்து விஜய் காரும் போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
'தவெக கோஷம்... சங்கடத்தில் நெளிந்த காங். சீனியர்கள்!' - ராகுல் காந்தியின் நிகழ்ச்சி சொதப்பிய பின்னணி
இந்தியா

'தவெக கோஷம்... சங்கடத்தில் நெளிந்த காங். சீனியர்கள்!' - ராகுல் காந்தியின் நிகழ்ச்சி சொதப்பிய பின்னணி

'மாணவர்களின் குரல்' என்ற பெயரில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தியிருந்தார். காங்கிரஸின் தேசியத் தலைமையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்கள் அரங்கில் கூடியிருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சீனியர்களையே சங்கடத்தில் நெளிய வைத்திருந்தது.ராகுல் காந்தி'மாணவர்களின் குரல்' என்ற பெயரில் எல்லா மாநிலங்களுக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்ற நோக்கில் ராகுலுக்காக காங்கிரஸ் வடிவமைத்திருக்கும் நிகழ்ச்சிதான் இது. ராஜஸ்தான், உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து நேற்று தமிழகத்திலும் இந்த நிகழ்ச்சி நடந்திருந்தது. சென்னை தீவுத்திடலில் இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் காங்கிரஸ் சார்பில் செய்யப்பட்டிருந்தது. தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையைச் சுற்றியிருக்கும் கல்லூரிகளின் மாணவ மாணவிகளுக்கு அழைப்பு விடுத்து நிகழ்ச்சி கூட்டி வந்திருந்தனர். கிட்டத்தட்ட 5000 மாணவ மாணவிகள் நிகழ்வரங்கில் கூடியிருந்தனர். மாணவிகள்மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி என்பதால் மேடையில் ராகுல் மட்டுமே இருக்கும்படி திட்டமிடப்பட்டிருந்தது. ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, கே.எஸ்.அழகிரி உட்பட காங்கிரஸின் சீனியர்களும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கும் மேடையிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் உட்கார இடம் ஒதுக்கப்பட்டிருந்தனர்.செல்வப்பெருந்தகையைத் தவிர காங்கிரஸின் சீனியர்கள் எல்லாருமே நிகழ்வில் ஆஜராகியிருந்தனர். கோவிந்த் வசந்தா, தெருக்குரல் அறிவின் இசை நிகழ்ச்சிகள் என விழா உற்சாகமாகவே சென்று கொண்டிருந்தது. மாணவர்களும் டான்ஸ் ஆடி கூச்சல் போட்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். 'தமிழக மாணவர்களின் எனர்ஜியைக் கண்டு ராகுல் வியக்கப் போகிறார்' எனக் கதர் சட்டைக்காரர்கள் குஷியாக இருந்தனர். ஆனால், அத்தனை நேரமும் குஷியாக இருந்த மாணவர்கள் ராகுல் மேடையேறியவுடன் 'தவெக...தவெக...' எனக் கத்திவிட்டு அரங்கிலிருந்து வெளியேறதைக் கண்டு காங்கிரஸ் சீனியர்களின் முகத்தில் ஈ ஆடிவிட்டது. ராகுல் பேசும்போதே கொத்து கொத்தாக மாணவர்கள் வெளியேறியதைக் கண்டு ப.சிதம்பரம் உட்பட சீனியர்கள் அத்தனை பேரும் சங்கடத்தில் நெளிந்தனர். 'நாம் சொல்வதைக் கேட்காமல் இவர்களாக எதோ செய்து சொதப்பி விட்டார்களே....' என முணுமுணுத்தும் கொண்டனர்.நிகழ்ச்சி ஏன் சொதப்பியது எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம், 'இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க டெல்லி தலைமையால் நடத்தப்படுகிறது. அவர்கள்தான் இதை முழுமையாக டிசைன் செய்தார்கள். மாணிக்கம் தாகூரின் உத்தரவின் பேரில் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை மட்டுமே நாங்கள் அழைத்து வந்தோம். ஆனால், நிகழ்ச்சியன்று இங்கே செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளில் எங்களுக்கே உடன்பாடு இல்லை. View this post on Instagram ராகுல் 6 மணிக்கே மேடையேறிவிடுவார் எனக் கூறி மாணவர்களை 3 மணிக்கே அரங்குக்கு அழைத்து வர சொல்லிவிட்டார்கள். ஆனால், அரங்கில் மாணவர்கள் உட்கார சேர் கூட போடப்படவில்லை. மாணவர்களை தரையில் உட்கார சொன்னார்கள். தரையில் ஒரு விரிப்பு கூட விரிக்கவில்லை. தமிழகத்தில் இப்படிச் செய்வது தவறாகிவிடும்...எதாவது ஏற்பாடு செய்யுங்கள் எனத் தேசிய நிர்வாகிகளிடம் கூறினோம். அவர்கள் இந்தியா முழுவதும் இப்படித்தான் திட்டமிட்டிருக்கிறோம். டெல்லி: "எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல" - போலீஸ் ஜீப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட CPM MPஎங்களின் ஸ்டைல் உங்களுக்குப் புரியாது எனத் தட்டிக்கழித்து விட்டார்கள். வெட்கையில் சிரமப்பட்டுதான் மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். நிகழ்வின் வடிவமைப்பிலும் பிரச்னை இருந்தது. ராகுலை மாணவர்கள் மத்தியில் ஹீரோவாக முன்னிறுத்துவதே நிகழ்வின் நோக்கம். ஆனால், நிகழ்ச்சியில் ராகுலின் வீடியோக்களை ஒளிபரப்பி பின்னணியில் மாஸாக விஜய்யின் 'வாத்தி கம்மிங்...', 'மாஸ்டர் தி பிளாஸ்டர்...' பாடல்களை ஒலிக்கவிட்டார்கள். மற்ற மாநிலங்களில் இதைச் செய்தால் கூட பரவாயில்லை. இங்கே விஜய்யின் பாடல்கள் ஒலித்தவுடனேயே மாணவர்கள் 'TVK...TVK...' எனக் கத்த தொடங்கிவிட்டனர். தெருக்குரல் அறிவும் வந்து 'வாத்தி கம்மிங்' பாடலை லைவ்வாகப் பாடினார். அப்போதும் 'TVK...TVK' கோஷம்தான். மாணவர்களில் கணிசமானோர் நிகழ்ச்சிக்கு விஜய்யும் வரப்போகிறார் என்றும் நினைத்துவிட்டனர். View this post on Instagram ஆட்டம் பாட்டமெல்லாம் முடிந்து 7 மணிக்குத்தான் ராகுல் மேடையேறினார். அவர் மேடையேறி மைக் பிடிக்கும் போதும் 'TVK...TVK..' எனக் கோஷமிட்டனர். விஜய் வரவில்லை என்பதால் அதற்கு மேல் பொறுமையில்லாமல், உட்கார சௌகரியமான இடமுமில்லாததால் ராகுல் பேசும்போதே மாணவர்கள் கலையவும் தொடங்கினர். மாணவர்கள் கும்பலாக வெளியேற நினைத்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸூம் அவர்களை வெளியேற அனுமதித்தது. "டெல்லியைப் பார்த்தீர்களா.... மோடியின் கேம் ஓவர்!" - சென்னையில் ராகுல் காந்தி ஆவேசம்ராகுல் பேசும் போதே மைதானம் காலியாவதைக் கண்டு சீனியர்கள் முகம் கலவரமடைந்துவிட்டது. அவர்கள்தான் உடனே நிர்வாகிகளை அனுப்பி காவல்துறை அதிகாரிகளிடம் பேசி மாணவர்கள் வெளியேறும் வழிகளை அடைக்க வைத்தனர். அதிலும் பிரயோஜனம் இல்லை. அதற்குள்ளாகவே 70% மாணவர்கள் வெளியேறிவிட்டனர். இதற்கு மேலும் இழுத்தால் மைதானம் மொத்தமாகக் காலியாகிவிடும் என்பதால்தான் ராகுலும் சுருக்கமாகப் பேச்சை முடித்துக் கொண்டார். முழுக்க முழுக்க டெல்லி கையிலெடுத்து செய்யும் பிராஜெக்ட் இது. டெல்லியிலிருந்து ஊடகவியலாளர்களையும் இன்ப்ளூயன்சர்களையும் செலவு செய்து அழைத்து வந்திருந்தனர். அவர்கள்தான் நிகழ்ச்சி வெற்றி...வெற்றி... எனப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், களத்தில் எந்தத் தாக்கமும் இல்லை. டெல்லி தலைமை தமிழக மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கான்சர்ட்டை ஏற்பாடு செய்து கொடுத்ததைப் போலத்தான் இருந்தது. காங்கிரஸ் சீனியர்கள்கான்செர்ட் முடிந்தவுடன் மாணவர்கள் கலைந்துவிட்டார்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டியுடன் முழுமையாக ஆலோசித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்'' என்கின்றனர்.நம்மிடம் பேசிய இன்னும் சில நிர்வாகிகள், ''ராஜஸ்தான், ம.பி, உ.பி, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா எனப் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். பாஜகவை மாணவர்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதுதான் ராகுலின் நோக்கம். அப்படியிருக்க அந்தப் பேட்டர்னை உடைத்து தமிழகத்துக்கு வந்தது முன் யோசனையற்ற முடிவு. இங்கே பாஜக இல்லவே இல்லை. இதில்தான் தேசியத் தலைமை வேறொரு கணக்கை இட்டிருக்கிறது. வட இந்தியாவில் விஜய்தான் பிரதமர் என ஒரு பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. தவெக வேண்டுமென்றே இதைச் செய்வதாக தேசியத் தலைமை நினைக்கிறது. தவெகவின் அந்தப் பிரசாரத்துக்கு செக் வைக்கும் வகையில்தான் தமிழகத்தில் மாணவர்களின் கூட்டத்தைக் கூட்டி ராகுலுக்கு மாஸ் ஏற்றலாம் எனத் தலைமை நினைத்தது. ஆனால், அது மிகத் தவறான முடிவு. விஜய் இப்போது மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவோடு நிற்கிறார். கொஞ்சம் அமைதி காத்து சரியான அரசியல் சூழல் வாய்க்கையில் மாணவர்களைத் திரட்டியிருந்தால் நினைத்தது நடந்திருக்கும். டெல்லி தலைமை அவசரப்பட்டுவிட்டது'' என்றனர்."உங்கள் கூலிப்படையினரை வேண்டுமானாலும் அழையுங்கள்" - அமித் ஷாவிற்கு 'தேதி' சொல்லும் ராகுல் காந்தி

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: விசாரணை யை கையில் எடுத்த துகாராம் - போராட்டத்தை கை விட்ட மாணவர்கள்
இந்தியா

அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: விசாரணை யை கையில் எடுத்த துகாராம் - போராட்டத்தை கை விட்ட மாணவர்கள்

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் வெளியான அரசு வேலைக்கான தேர்வு முடிவுகள் வெளியான போது அத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக செய்தி வெளியானது. இதையடுத்து அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதங்களில் நடக்க இருந்த தேர்வுகளும் இதே பிரச்னையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அரசு வேலைக்கு தயாராகிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மகாராஷ்டிரா அரசு தேர்வாணைய தலைவர் பீமன்வரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புனேயில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.ரோஹித் பவாரும் கலந்து கொண்டார். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் சிவேந்திர ராஜே போசலே தலைமையிலான மாநில அரசுக் குழு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து பேசியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்அதில் அரசு தேர்வில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு குறித்து விசாரிக்க அமைக்கப்படும் குழுவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் துகாராம் முண்டே இடம் பெறுவார் என்று தெரிவித்தார். முண்டே போன்ற அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைப்பது உட்பட அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனால் தேர்வுக்குழு தலைவர் பீமன்வரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவரை நீக்கும் வரை போராட்டம் ஓயாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் போஸ்லே இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு பீமன்வரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக் அமைச்சர் போஸ்லே தெரிவித்தார். இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது 10 நாள் போராட்டத்தை கைவிட்டனர். விசாரணை குழுவில் கமிஷனர் துக்காராம் தவிர, முன்னாள் நீதிபதி திலீப் போசலே தலைவராகவும், ஐபிஎஸ் அதிகாரி லக்ஷ்மி கௌதம், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கணேஷ் பாட்டீல் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பி டி நாயக் ஆகியோரும் குழுவில் இருப்பார்கள். பீமன்வர் விடுப்பில் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" - துருவ் ராட்டி
இந்தியா

டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" - துருவ் ராட்டி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனச் சி.ஜே.பி-யினர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் சி.ஜே.பி-யினரையும் மாணவர்களையும் கைது செய்து வருகின்றனர். துருவ் ராட்டி | Dhruv Ratheeஇந்தப் போராட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகக் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் துருவ் ரதி, நேற்று நள்ளிரவுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். இது குறித்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.அந்தக் காணொளியில் அவர், "எனது வீட்டில் நேற்று காலை 7 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்தபோது, சீருடை அணியாத சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் என் அறைக்குள் வந்தார்கள். அவர்கள் யார் என்று கேட்பதற்குள் என்னைத் தரதரவென இழுத்துச் சென்றார்கள். என்னைச் செருப்புகூட அணிய அனுமதிக்காமல் கீழே அழைத்துச் சென்று ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். என்னை எந்தச் சட்ட அடிப்படையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பதையும் அவர்கள் சொல்லவில்லை. எனது வழக்கறிஞரைத் தொடர்புகொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது. View this post on Instagram என் பெற்றோரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது சட்டப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டதோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதோ அல்ல. இது அப்பட்டமான கடத்தல். நேற்று நள்ளிரவில் நான் விடுவிக்கப்பட்டாலும், என் வீட்டைச் சுற்றி இன்னும் சிலர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். என்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பது போல் இருக்கிறது. ஜனநாயக வழியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுபவர்களையும், எதிர்ப்புக் குரல்களையும் ஒடுக்குவதற்காகவே அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இது ஜனநாயக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்" எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.டெல்லி போராட்டம்: "மக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" - ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு
இந்தியா

"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" - ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு

வருகிற நவம்பர் மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாகக் கூறியிருக்கிறார்.என்னதான்... தற்காலிகப் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை என இருந்தாலும், ஹார்முஸ் நீர்ச்சந்தி இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை.மசூத் பெசெஷ்கியான் பதிவுஉக்ரைன் என்னவாகுமோ? ரஷ்யா உடன் 'டீல்' - ரூட்டை மாற்றும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது? இந்த நேரத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தனது எக்ஸ் பக்கத்தில்...“நாமே நம்மை ஒடுக்கிக்கொள்ளாமலும், நாமே நம்மை அழித்துக்கொள்ளாமல் இருக்கும் வரை, எதிரியால் நம்மை அழிக்கவோ அல்லது பணியவைக்கவோ முடியாது.ஈரானிய இளைஞர்கள் அனைவரின் திறமைகளும் ஆற்றல்களும் வெளிப்படுவதற்கும் மிளிர்வதற்கும் ஏற்ற சூழலை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்
இந்தியா

கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. பல்லவி. இவர் பெரும்பாலும் தான் போகும் இடமெல்லாம் தன்னுடைய கைக்குழந்தையை எடுத்துச் செல்வார். இது பல முறை செய்திகளில் இடம்பெற்றிருக்கிறது.“கைக்குழந்தையைச் செல்லும் இடமெல்லாம் எடுத்துப்போவது நல்லதல்ல. இவர் மகப்பேறு விடுப்பு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்” என்று தொடர்ந்து விமர்சனங்களும் எழுந்து வருகிறது. ஆனால், இதுவரை இந்த விமர்சனங்களைப் பல்லவி கண்டுகொண்டதே இல்லை.கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவிModi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!பிரதமர், முதல்வர் நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 11) இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஐ.ஐ.டி. மெட்ராஸ்ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர்.இந்த நிகழ்ச்சிக்கும் பல்லவி தன்னுடைய கைக்குழந்தையுடன் தான் வந்திருந்தார்.கார்த்தி சிதம்பரம் பதிவு இது குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...“வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கான குழந்தைகள் பராமரிப்பு மையம், மகப்பேறு விடுப்பு, மற்றும் தந்தையருக்கான விடுப்பு போன்ற குடும்பச் சாதகக் கொள்கைகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.பொது நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து குழந்தைகளை அழைத்து வருவது நடைமுறைத் தேவையை விட அரசியல் விளம்பரத்திற்காகவும் கவனத்தை ஈர்ப்பதற்காகவுமே செய்யப்படுவது போல் தோன்றுகிறது.விஜய் இது குறித்து அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்குவார் என்று நம்புகிறேன்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.பல்லவியின் இந்தச் செயலுக்கு முதல்முறையாக கூட்டணிக் கட்சித் தலைவரிடமிருந்தே எதிர்ப்பு வந்துள்ளது. இதை தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் விஜய் கவனிப்பாரா?While I fully support family-friendly policies such as workplace creches, maternity leave, and paternity leave, repeatedly taking an infant to public events appears more like political showmanship and attention-seeking than practical necessity. I hope @TVKVijayHQ will advise her suitably on this.— Karti P Chidambaram (@KartiPC) October 11, 2026

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
அரசு நிகழ்ச்சி மேடையில் நயினார் நாகேந்திரன்: "மோசமான முன்னுதாரணம்"- நிர்மல் குமார் காட்டம்
இந்தியா

அரசு நிகழ்ச்சி மேடையில் நயினார் நாகேந்திரன்: "மோசமான முன்னுதாரணம்"- நிர்மல் குமார் காட்டம்

நேற்று சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸில் இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியின் மேடையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அமர்ந்திருந்தார்.மாணிக்கம் தாகூர் கேள்வி இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “மத்திய அரசின் நிகழ்ச்சியில் பிரதமருடன் மேடையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எந்த புரோட்டோகால் மூலம் அமரவைக்கப்பட்டார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.நயினார் நாகேந்திரன், மோடி - நிர்மல் குமார்கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்நிர்மல் குமார் பதில் மாணிக்கம் தாகூரின் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், “ஒன்றிய அரசு நடத்திய நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. போன்ற எந்தவொரு மக்கள் பிரதிநிதித்துவப் பொறுப்பிலும் இல்லாத கட்சிச் சார்ந்த நபர் எந்தப் புரோட்டோகாலின் அடிப்படையில் மேடையில் அமர வைக்கப்பட்டார் என்று தெரியவில்லை.இது ஒரு தவறான மற்றும் மோசமான முன்னுதாரணம்.நிலைமை எவ்வாறு இருக்கும்? கட்சிச் சார்ந்த நபர்களை விளம்பரப்படுத்துவதற்கோ அல்லது ஊக்குவிப்பதற்கோ (promote) அரசு நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எதிர்காலத்தில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.புரோட்டோகால் இல்லாமல் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அனுமதிக்கும் இத்தகைய தவறான முன்னுதாரணத்தை இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றத் தொடங்கினால் நிலைமை எவ்வாறு இருக்கும்?எங்களது கட்சியின் நிர்வாகிகள் அரசுப் பள்ளிகளுக்குக்கூடச் செல்லக் கூடாது என்று பொதுச்செயலாளர் அறிவித்துள்ள நிலையில், ஒரு மிகப்பெரிய அரசு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. இல்லாத ஒருவரை அமர வைத்தது மிகப்பெரிய தவறு” என்று பேசியுள்ளார்.பாகிஸ்தானில் Emergency நிலை: பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கட்சி ஆட்சியைக் கலைத்த ஷெபாஸ் அரசு!

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவுக் கடன்கள்: சிறப்பு முகாம்கள் நடக்குது! உங்களுக்கும் கடன் வேண்டுமா?
இந்தியா

ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவுக் கடன்கள்: சிறப்பு முகாம்கள் நடக்குது! உங்களுக்கும் கடன் வேண்டுமா?

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கடனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள்..? தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கான ரூ.1,80,000 கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திடும் வகையில், வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத்துறையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.எப்போது... என்ன..? ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.கடன்அரசு நிகழ்ச்சி மேடையில் நயினார் நாகேந்திரன்: "மோசமான முன்னுதாரணம்"- நிர்மல் குமார் காட்டம் என்னென்ன கடன்கள்? இந்தச் சிறப்பு முகாம்களில்...> நடுத்தர கால விவசாயக் கடன்கள், > ஊரகத் தொழில் கடன்கள், > வீட்டு வசதிக் கடன்கள், > வீட்டு அடமானக் கடன்கள், > மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள், > திருநங்கையருக்கான கடன்கள், > மின் ஆட்டோ கடன்கள் மற்றும் > இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கூட்டுறவுக் கடன் திட்டங்களின் கீழ், பயன்பெற விரும்பும் தகுதியுடைய மக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்புக் கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம்.மேலும், விவரங்களுக்கு 9884000845 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
'தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டோம் என பேசிய திமுக இன்று.!'- மாணிக்கம் தாகூர்
இந்தியா

'தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டோம் என பேசிய திமுக இன்று.!'- மாணிக்கம் தாகூர்

"தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " திமுக தோல்விக்கு ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு, பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய பேச்சுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம்தான் காரணம்!21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் (S.I.R.) மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். திமுக தலைவர் ஸ்டாலின்ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. தமிழ்நாடு முழுவதும், திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களான BLA2-க்களைச் சந்தித்து வருகிறேன். திமுக சார்பில் 75,032 BLA2-க்கள், 5,50,000 வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் (BLC), 75,032 வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த 7 லட்சம் பேர்தான்” என்றார்.`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே...' - திருமாவளவன்ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் மக்கள் திமுகவை முற்றிலுமாகப் புறக்கணித்துத் தோல்வியைத் தந்தவுடன், இப்போது எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதே தங்களது தோல்விக்குக் காரணம் என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதற்கு, அன்றைய முதலமைச்சராக இருந்த அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே மதுரைக் கூட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.தேர்தலுக்கு முன்னால் "வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் சிறப்பாக முடித்துவிட்டோம், எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று கூறிவிட்டு, தேர்தல் முடிந்து மக்கள் தீர்ப்பு எதிராக வந்த பிறகு மட்டும் வாக்காளர் திருத்தப் பணி மீது பழியைப் போடுவது என்ன வகையான அரசியல்? குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்ட மனுவின் 4-வது கோரிக்கையில் கூட, எங்கு வாக்குத் திருட்டிற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் (Conclusive evidence of vote chori) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோ, அந்த மாநிலங்களின் தேர்தல்களை மட்டுமே ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது! மாணிக்கம் தாகூர்மேற்கு வங்கத்தில் அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆரைச் செயல்படுத்த மறுத்தபோதிலும், ‘ஊடுருவல்காரர்கள்’ என்ற பெயரைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாகப் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல அசாமிலும் பீகாரிலும் முறைகேடுகள் நடைபெற்றன; மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வேறு வகையான வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது! ஆனால், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய இடங்களில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை.வரலாறு காணாத ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை அவமதித்து தான் திமுகவின் உண்மையான தோல்விக்குக் காரணம்!இப்போதுகூட எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகிறார்களே தவிர, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள். ஆனால், திமுக சார்பில் ஒரு எம்பி கூட பங்கேற்கவில்லை. இதற்கு என்ன காரணம்? எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.தமிழ்நாட்டின் நலன், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றில் திமுகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
'அரசியலாகும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை!' - அப்டேட் கொடுக்குமா அரசு?
இந்தியா

'அரசியலாகும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை!' - அப்டேட் கொடுக்குமா அரசு?

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏவான வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களாக அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் எந்த அறிக்கையும் வெளியாகாத நிலையில், இப்போது அந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியிருக்கிறது. வி.எஸ்.பாபுவி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, 'அவர் ஒரு ‘சாதாரணமான குடிமகன்’ என்று சொன்னால், அவரது உடல்நிலை குறித்து பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், அவர் மக்கள் பிரதிநிதி; கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எனவே, அவருடைய உடல்நலம் குறித்து அவரது சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும், பொது மக்களுக்கும் அரசு தெரிவித்தாக வேண்டும். விஜய் - வி.எஸ்.பாபுஅவர் ஒன்றும் பெரிய வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல. சென்னையிலேயே உயர்தர சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனை உண்டு. எனினும் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடரப்படுகிறது. அவருடைய மருத்துவ செலவினங்களை அரசு ஏற்றுக் கொள்கிறதா? குடும்பமா? அல்லது கட்சியா என்பது குறித்தும், அவருடைய தற்போதைய உடல்நலம் குறித்தும் தொடர்ந்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் வைத்திருப்பது மருத்துவமனைக்கும் மாண்பல்ல; அரசுக்கும் அழகல்ல.!' என அறிக்கை வெளியிட்டிருக்கிறார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், 'அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மனிதநேயத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது திமுக எந்த அளவுக்கு அவர்களின் நல்வாழ்வை விரும்பியதோ, அதேபோல் வி.எஸ். பாபுவும் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.அதிமுக எம்.பி இன்பதுரை வெளியிட்டிருக்கும் பதிவில், 'கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்த விபரங்களை தொகுதி மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை! பொதுநலன் கருதி, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு' எனக் கூறியிருக்கிறார். வி.எஸ்.பாபு - VS Babu வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து பேசத் தொடங்கியிருக்கின்றனர். கட்சி வட்டாரங்களில் நாம் விசாரிக்கையில், 'வயோதிகம் காரணமாக அவருக்கு தொடர்ந்து சிறப்பான தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தரப்பிலிருந்து விரைவில் ஒரு விளக்க அறிக்கை வெளியாகும்' என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்
இந்தியா

சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

நேற்று ஏமனின் ஹவுதிப் படைகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.ஹவுதியின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...''கடந்த சில நாள்களில் ரியாத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களையும், குறிப்பாக உயிர்ப்பலி, காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்களை ஏற்படுத்திய அக்டோபர் 10 அன்றைய கொடூரமான தாக்குதலையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அறிக்கை"உக்ரைனுக்கு புதிய அதிபர் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது" - ரஷ்யாவிடம் 'டீல்' போட்ட ட்ரம்ப் கருத்துஉயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சவூதி அரேபிய நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அந்நாட்டு மக்களுடனும் அரசாங்கத்துடனும் நாங்கள் உறுதியுடன் நிற்கிறோம்.மேலும் இப்பகுதியில் விரைவில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பும் என நம்புகிறோம்".

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை
இந்தியா

”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த வரலாறு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, இன்றைக்கு தூய ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜோசப் விஜய் ஓர் அற்புதத்தை நடத்திக் காட்டியுள்ளார். 108 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொடுத்து முதல்வர் ஜோசப் விஜய்தான் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தனர். ஆட்சி அமைத்து நான்கு மாதங்களுக்கு உள்ளாகவே இடைத்தேர்தல் நடைபெற்றது. கடம்பூர் ராஜூஅதிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை முதல்வர் ஜோசப் விஜய் பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் இனி ஒரே கழகம்தான் அது தமிழக வெற்றிக் கழகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழாகப் பார்க்க வேண்டும். தி.மு.க அ.தி.மு.க அரசியல் பேசாமல் முதல்வர் விஜய்யைப் பற்றி மட்டும் விமர்சனம் செய்தார்கள். அந்த விமர்சனங்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள் அ.தி.மு.க நிலைமையைப் பற்றி யோசித்தால் வேதனைக்குரிய விஷயம்தான். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் அ.தி.மு.க இருந்தபோது தோல்வியைக் காணாத இயக்கமாக இருந்தது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.கவை இந்திய துணைக்கண்டத்தில் மூன்றாவது கட்சியாக உயர்த்தினார். கடந்த 2021-ல் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தது. 2026-ல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. தற்போது அந்தக் கட்சி இன்று மழுங்கி, மங்கி விட்டது. ’திருமங்கலம் ஃபார்முலா’ என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது தி.மு.க. அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் நடைபெற்ற தேர்தல்களில் அரசியல் கட்சியினர் மக்களை எப்படிச் சந்தித்தனர் என்பது தெரியும். ஆனால், தமிழக வெற்றிக் கழகம் பணம் கொடுத்து வாக்குகளைத் திருடாமல், வாங்காமல் நேர்மையாக தேர்தலைச் சந்தித்தனர். கடம்பூர் ராஜூஇது ஒன்றே தூய சக்தி என்பதற்கு ஒரு அடையாளம். இடைத்தேர்தல் என்றால் மக்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். இடைத்தேர்தல் வந்துவிட்டால் தீபாவளி, பொங்கல் என்று மக்கள் எதிர்கொள்வார்கள். ஆனால் இந்த இடைத்தேர்தலில் ஒருபைசா கூட கொடுக்காமல் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலைச் சந்தித்தது. பொருளாதார வீக்கத்தின் அடிப்படையில் சில நேரங்களில் விலைவாசி உயரும். பொருளாதார நிலை சரியாகும் போது விலைவாசி குறையும். விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். நிச்சயமாக விலைவாசி உயர்வு விரைவில் கட்டுப்படுத்தப்படும்” என்றார்.'தவெக கோஷம்... சங்கடத்தில் நெளிந்த காங். சீனியர்கள்!' - ராகுல் காந்தியின் நிகழ்ச்சி சொதப்பிய பின்னணி

vikatan
அக். 12
3 நிமிடம் படிக்க
Zero Sugar: ஜீரோ சுகர், ஜீரோ கலோரி பிஸ்கட், சாக்லேட், கூல்டிரிங்ஸ் வெள்ளை சர்க்கரையை விட ஆபத்து!
சுகாதாரம்

Zero Sugar: ஜீரோ சுகர், ஜீரோ கலோரி பிஸ்கட், சாக்லேட், கூல்டிரிங்ஸ் வெள்ளை சர்க்கரையை விட ஆபத்து!

Anna government Yoga and Naturopathy Dr Y.Deepa says about what will happen intake of Artificial sweetners, Zero sugar, zero Calorie foods.

oneindia
அக். 12
3 நிமிடம் படிக்க
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்
வானிலை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்

The Chennai Meteorological Centre has forecast moderate rain accompanied by thunderstorms and strong winds in isolated places across 11 Tamil Nadu districts on October 12, with rain likely in three southern districts on October 13.

oneindia
அக். 12
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்