
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
ஈரான் - அமெரிக்கா போர் ஈரான்- இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது அமெரிக்கா, அந்த வகையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கி வருகிறது. அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை தளங்கள், ராணுவ கட்டமைப்புகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு இலக்குகள் மீது பல்வேறு வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுவந்தது. இதற்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விநியோகம், ஹார்முஸ் நீரிணை வழிக் கடல்சார் போக்குவரத்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை குறிவைத்து தாக்கும் அமெரிக்கா போர் விரிவடையாமல் தடுக்க பல நாடுகள் உடனடி போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தையை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா தனது முழு பலத்தை கொண்டு ஈரானை தாக்கி வருகிறது. இதில் பல ஆயிரம் பேர் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தங்களது அனுமதியின்றி சென்ற கப்பலை ஈரான் தாக்கியது. இதனால் மீண்டும் அமெரிக்கா ஈரானை தாக்கி வரும் நிலையில் பல இடங்களில் ராணுவ கட்டமைப்பு அழிக்கப்பட்டது. இந்த பரபரப்பான நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வெள்ளை மாளிகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ரகசிய சந்திப்பை நடத்தினர். நவீன சக்தி வாய்ந்த 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி அப்போது ஈரானுக்கு எதிராக அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை அலற வைக்கும் வகையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் புரட்சிகர ராணுவப்படை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் அதி நவீன சக்தி வாய்ந்த 3 அதி நவீன எப்35 போர் விமானம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல விமானங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக ஈரான் புரட்சிக்கர ராணுவப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க ராணுவம் நேர்மையாக மோதாமல், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணவ தளத்தில் இருந்து ஈரானை தாக்கியதாகவும், இதில் ஈரானின் உள்ள குயிஷம் தீவில் குடியிருப்புகள் மீது விழுந்தலில் ஒரு குழந்தை உயிரிழந்தாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் உயிரிழப்பு இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்த படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமெரிக்காவின் எப்35 போர் விமானங்கள் மற்றும் சில விமானங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று எப்35 போர் போர் விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. ஈரான் ஏவிய ஏவுகனையை நடு வழியில் அழித்து விட்டதாக தெரிவித்துள்ளது. எனவே இதில் எந்த வகையில் உண்மையென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை F-35 போர் விமானம் சிறப்பம்சம்.? அமெரிக்காவின் 5-ஆம் தலைமுறை விமானமான F-35 போர் விமானம், எதிர்களிடம் இருந்து மறைந்து தாக்கும் திறன் கொண்டதாகும். இது உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிகபட்ச வேகமாக மணிக்கு சுமார் 1,930 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாகும். F-35-இன் மிகப்பெரிய பலம் அதன் வேகம் மட்டும் அல்ல. எதிரியை முதலில் கண்டறிந்து, தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து, எதிரி அறியுமுன் தாக்கும் திறன்தான் இதன் முக்கிய வலிமையாகக் கருதப்படுகிறது. F-35A போர் விமானம், இந்திய ரூபாயில் சுமார் ₹700–800 கோடியாக என கூறப்படுகிறது.
இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் உலகம் செய்திகளை உள்ளடக்கியது.