தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

tamil-nadu

43 கட்டுரைகள் tamil-nadu இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்
தமிழ்நாடு

கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்

கோவை: கோவைக்கு இன்று (நவ. 19) வரும் பிரதமர் மோடியை, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரவேற்​கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்​டமைப்பு சார்​பில் கோவை கொடிசியா தொழிற்​காட்சி வளாகத்​தில் இயற்கை விவ​சா​யிகள் மாநாடு இன்று முதல் 3 நாட்​களுக்கு நடை​பெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்​கிவைக்​கிறார். இதில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி இன்று மதி​யம் 1.25 மணிக்கு புட்​டபர்த்​தி​யில் இருந்து விமானம் மூலம் கோவை வரு​கிறார். கோவை விமான நிலை​யத்​தில் பிரதமரை, ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாஜக தேசிய மகளிரணித் தலை​வர் வானதி சீனி​வாசன் உள்​ளிட்​டோர் வரவேற்​கின்​றனர்.

feedburner
21 நவ.
3 min read
வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழ்நாடு

வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு எதிராக வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்த திமுக அரசு தூண்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். திருநெல்வேலியில் வ.உ.சி-யின் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வ.உ.சி-க்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப் படுகிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர் பிரதமர் மோடி.

feedburner
21 நவ.
3 min read
நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
தமிழ்நாடு

நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரம் காரணமாக ஜூலை 27-ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கவின் காதலித்து வந்த இளம் பெண்ணின் தம்பி சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெண்ணின் தாயாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்.

feedburner
21 நவ.
3 min read
லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை
தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

சென்னை: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கப்​பட்​டது தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​துள்ள நிலை​யில், அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் பதி​வாளர் உள்​ளிட்ட 10 அதி​காரி​கள் விரை​வில் இடைநீக்​கம் செய்​யப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. மாநில அரசின் தொழில்​நுட்ப பல்​கலைக்​கழக​மான அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் இணைப்பு அங்​கீ​காரம் பெற்று தமிழகத்​தில் 470-க்​கும் மேற்​பட்ட தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன.

feedburner
21 நவ.
3 min read
‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ - மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து
தமிழ்நாடு

‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ - மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து

புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில் தனியான ஒரு அணியை கட்டமைக்க நினைக்கிறார் ஜான்குமார். இதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாஜக மேலிடமும் கண்டும் காணாமல் இருக்கிறது. ஆனாலும் இவை அனைத்தையும் மவுனமாக கடந்து கொண்டிருக்கும் ரங்கசாமி, பிஹார் தேர்தல் வெற்றிக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பதுடன், டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கவும் தயாராகி வருகிறார்.

feedburner
21 நவ.
3 min read
மத்திய அரசுப் பள்ளிகளில் 14,967 காலி பணியிடங்கள்: டிச.4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு

மத்திய அரசுப் பள்ளிகளில் 14,967 காலி பணியிடங்கள்: டிச.4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: கேந்​திரிய வித்​யால​யா, நவோதயா பள்​ளி​களில் காலி​யாக உள்ள 14,967 பணி​யிடங்​களுக்கு டிச.4-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்டுமென அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் 9,126, நவோதயா பள்​ளி​களில் 5,841 என மொத்​தம் 14,967 ஆசிரியர் மற்​றும் பணி​யாளர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. இதில் 13,008 பணி​யிடங்​கள் இடைநிலை, பட்​ட​தா​ரி, முது​நிலை ஆசிரியர், முதல்​வர், துணை முதல்​வர், நூல​கர் பதவி​களுக்​கானவை. மீத​முள்ள 1,959 பணி​யிடங்​கள் உதவி ஆணை​யர், நிர்​வாக அதி​காரி, இளநிலை உதவி​யாளர், மூத்த உதவி​யாளர், உதவி பிரிவு அலு​வலர் (ஏஎஸ்​ஓ), நிர்​வாகப் பணி​யாளர், நிதி அதி​காரி, பொறி​யாளர், மொழிபெயர்ப்​பாளர் மற்​றும் சுருக்​கெழுத்​தாளர் என ஆசிரியர் அல்​லாத பிரி​வில் வரு​கின்​றன.

feedburner
21 நவ.
3 min read
சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது? - அரசுக்கு அண்ணாமலை கேள்வி
தமிழ்நாடு

சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது? - அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது என திமுக அரசுக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

feedburner
21 நவ.
3 min read
ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கக் கோரிய வழக்கை தள்ளிவைத்த ஐகோர்ட் எச்சரிக்கை
தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கக் கோரிய வழக்கை தள்ளிவைத்த ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் டிச.16-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் சுகாதாரத் துறை உள்ளிட்ட 3 துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான லட்சுமி ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், ‘பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை சுத்தமாக பராமரித்து பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நாப்கின்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் ஏழை, எளிய பெண்கள் நாப்கின்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

feedburner
21 நவ.
3 min read
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்த போராட்டம்
தமிழ்நாடு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்த போராட்டம்

சென்னை: அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி ஜாக்​டோ-ஜியோ சார்​பில் இன்று (நவ.18) ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது. அதேநேரம், வேலைநிறுத்​தத்​தில் ஈடு​பட்​டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என தலை​மைச் செய​லா​ளர் எச்​சரித்​துள்​ளார். அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்​து செய்​து​விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது, அரசு துறை​களில் உள்ள லட்​சக்​கணக்​கான காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவது உள்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு ஊழியர்​-ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான ஜாக்​டோ-ஜியோ போராடி வரு​கிறது.

feedburner
21 நவ.
3 min read