தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

india

28 கட்டுரைகள் india இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

கழகங்கள் இல்லா குமரி மேற்கு மாவட்டம்; தேசியக் கட்சிகளின் கையில் தொகுதிகள்; பின்னணி என்ன?
இந்தியா

கழகங்கள் இல்லா குமரி மேற்கு மாவட்டம்; தேசியக் கட்சிகளின் கையில் தொகுதிகள்; பின்னணி என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அரசியல் கட்சிகள் இந்த ஆறு தொகுதியையும் இரண்டாகப் பிரித்து கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக அமைப்பு ரீதியாக இயங்கி வருகின்றன. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய தொகுதிகள் கிழக்கு மாவட்டத்திலும், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும் உள்ளன. மாநிலக் கட்சியான அ.தி.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் நேரடியாகப் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகள் அனைத்தும் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க மற்றும் த.மா.க கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதுபோன்று மாநிலக் கட்சியாக விளங்கும் தி.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் போட்டியிடுகின்றது. கடந்தமுறை வென்ற ஒற்றை தொகுதியான பத்மநாபபுரத்தை சி.பி.எம் கட்சிக்கும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளைக் கடந்த முறை போன்று காங்கிரஸுக்கும் ஒதுக்கி உள்ளது.பா.ஜ.க, சி.பி.எம், காங்கிரஸ்அ.தி.மு.க மற்றும் தி.மு.க கழகங்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் மட்டும் போட்டியிடும் நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் தேசிய அளவிலான கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக தேர்தல் அறிக்கை: 'TV, Fridgeக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன், 10 லட்சம் வீடுகள்'- முழு லிஸ்ட்கன்னியாகுமரி மாவட்டம் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைப்பு ரீதியாக மேற்கு மாவட்டம் தேசியக் கட்சிகள் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு இரண்டு கழகங்களின் தலைமையும் ஆதரவு அளித்துள்ளதுதான் ஆச்சர்யமானது.பத்மநாபபுரம் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க நேரடியாக மோதின. தி.மு.க-வைச் சேர்ந்த மனோ தங்கராஜ் வென்று அமைச்சராகவும் ஆனார். கன்னியாகுமரி வருவாய் மாவட்டத்தில் தி.மு.க வென்ற ஒரே தொகுதியையும் கூட்டணியான சி.பி.எம்-க்குக் கொடுத்துள்ளதுதான் ஆச்சர்யத்தின் உச்சமாக உள்ளது.கன்னியாகுமரிகன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை கேரளா எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள 3 தொகுதிகளில் விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இதுவரை வென்றதில்லை. விளவங்கோட்டில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகள் வென்றுள்ளன. கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதா தளம், த.மா.க கட்சிகள் வென்றுள்ளன. விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் உள்ளன. பத்மநாபபுரம் தொகுதியில் மட்டுமே தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் வென்றுள்ளன. இப்போது தி.மு.க அந்தத் தொகுதியை சி.பி.எம்-க்கும், அ.தி.மு.க கூட்டணி கட்சியான பா.ஜ.க-விடமும் ஒப்படைத்துவிட்டது. இப்போது கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளும் தேசியக் கட்சிகள் வசம் சென்றுவிட்டன."திமுக ஆட்சியில் தரமற்ற லேப்டாப் வழங்கப்பட்டது பற்றி விசாரணை கமிஷன் அமைப்போம்" - இபிஎஸ்

vikatan
30 மார்.
3 min read
'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?
இந்தியா

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். என்ன காரணம்?Vijayதவெக தலைவர் விஜய் இன்று காலை பெரம்பூரின் அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த உடனேயே பிரசார வேனில் ஏறிவிட்டார். பிரசாரத்துக்கு திட்டமிடப்பட்டிருந்த முதல் ஸ்பாட்டான பெரம்பூர் விவேகானந்த ரோடை மதியம் 1 மணிக்கு மேல் எட்டினார்.வழிநெடுகும் விஜய்யின் தொண்டர்கள் சூழ்ந்ததால் விஜய்யின் வாகனம் ஊர்ந்து ஊர்ந்தே நகர்ந்தது. பெரம்பூரில் பேசி முடித்துவிட்டு கொளத்தூருக்கு விஜய் சென்றார். பெரம்பூரிலிருந்து கொளத்தூருக்கு விஜய் செல்ல 3 மணி நேரம் ஆனது. கொளத்தூரில் அளவுக்கதிகமான கூட்டம் கூடியதால், அசம்பாவிதங்களை தவிர்க்க விஜய்யை காவல்துறையினர் சீக்கிரம் பேசி முடிக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி விஜய்யும் 2 நிமிடங்களில் பேசி முடித்தார்.வில்லிவாக்க கூட்டம்இதேவேளையில் மூன்றாவது ஸ்பாட்டான வில்லிவாக்கத்திலும் விஜய்யின் பிரசாரத்தை பார்க்க எக்கச்சக்கமான பேர் கூடியிருந்தனர். விஜய் கொளத்தூரை எட்டிய சமயத்திலேயே தவெகவின் முக்கிய நிர்வாகயான சி.டி.ஆர்.நிர்மல் குமாகுமார் 'காவல்துறை எங்களின் பிரசாரத்துக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை' என தேர்தல் ஆணையத்துக்கு புகார் ஒன்றை கொடுத்தார்.இந்நிலையில் கொளத்தூரிலிருந்து விஜய் நேராக வில்லிவாக்கம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். வில்லிவாக்கம் தொகுதியின் மாவட்டச்செயலாளர் பூக்கடை குமார் பேசுகையில், 'தலைவரால் கொளத்தூருக்குள்ளேயே செல்ல முடியவில்லை. காவல்துறை முறையாக பாதுகாப்பு கொடுக்கவில்லை. வில்லிவாக்கத்தில் மாலை 6 மணி வரைதான் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறோம். நெரிசலில் தலைவர் வந்து சேர 8 மணி ஆகும் போல தெரிகிறது. அதனால் பிரசாரத்தை ரத்து செய்கிறோம். இன்னொரு நாள் தலைவர் உங்களை சந்திப்பார்' என்றார்.

vikatan
30 மார்.
3 min read
"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்
இந்தியா

"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்

"ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும். ஈரானின் புதிய அரசாங்கத்தோடு பேசி வருகிறேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – இரண்டு நாடுகளும் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக் காரணம் ‘ஈரானின் ஆட்சி மாற்றத்திற்காகத்தான்’ என்பது இப்போது நன்கு தெரிகிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்துவது அமெரிக்காவில் இருக்கும் பலருக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்க்கும் இந்தப் போரில் விருப்பமில்லை என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேரி எல். ட்ரம்ப் பதிவுபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇந்த நிலையில், ட்ரம்பின் சொந்த குடும்பத்தில் இருந்தே ஒரு குரல் வந்திருக்கிறது. ட்ரம்பின் அண்ணன் மகள் மேரி எல். ட்ரம்ப். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…“டொனால்ட் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்தான். ஆனால், அது ஈரானில் இல்லை. அமெரிக்காவில்” என்று பதிவிட்டுள்ளார். `UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து' - ஜெஃப்ரி சாக்ஸ்

vikatan
30 மார்.
3 min read
`தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை!' - அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ
இந்தியா

`தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை!' - அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. அதற்காக தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடந்த இரண்டு நாட்களில் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு முடித்திருக்கின்றன. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அவர்களின் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.ஆர்.வசந்தவேலுக்கு, பேருந்து நிலையம் அருகே நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ரிஷிவந்தியம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளருமான வசந்தம் கார்த்திகேயனும் ஜி.ஆர்.வசந்தவேல் வந்த அந்த வாகனத்தில் இருந்தார்.வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.ஆர்.வசந்தவேலுடன், வசந்தம் கார்த்திகேயன்அப்போது பேசிய வசந்தம் கார்த்திகேயன், ``எங்கள் வீட்டுப் பிள்ளையாக நிற்கும் ஜி.ஆர்.வசந்தவேல் அவர்களை சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் ஜி.ஆர்.வசந்தவேல். அவர் பணக்காரர் இல்லை. பெரிய மாட மாளிகைகள் அவரிடம் இல்லை. பல்வேறு பதவிகளில் இருந்து பணத்தை வாரிச் சுருட்டவில்லை. எதுவுமே இல்லாத அப்பாவி அவர். இந்தத் தேர்தலில் அவர் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. நம் வீட்டுப் பிள்ளை சாகலாமா ? அவர் உயிருக்கு நாம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்தானே ? அவரை காப்பாற்ற வேண்டும்தானே ? வசந்தவேல் தோற்றால் இந்த வசந்தம் கார்த்திகேயன் செத்ததாக அர்த்தம். இந்தத் தேர்தலில் எனக்கு எந்த வேலையும் இல்லை. அண்ணன் வசந்தவேல் அவர்களின் வெற்றிக்காக உழைப்பதுதான் என் வேலை.அதனால் வசந்தவேல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால், 25 நாட்களுக்கு நாம் அயராது பாடுபட வேண்டும். நம் வீட்டுப் பிள்ளையின் வெற்றிக்கு நாம்தான் உழைக்க வேண்டும். நாம் அனைவரும் வசந்தவேல்தான், நாம்தான் உதயசூரியன் என்ற எண்ணத்துடன், வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவுடன் அவரை நாம் வெற்றிபெற வைக்க வேண்டும். நான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதி கூட எனக்கு முக்கியம் இல்லை. உளுந்தூர்பேட்டை தொகுதி வெற்றிதான் எனக்கு முக்கியம். உங்கள் பார்வையில் வேண்டுமானால் வசந்தவேலிடம் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். அதை வசந்தவேலிடம்தான் கேட்க முடியுமே தவிர, வசந்தம் கார்த்திகேயனிடம் கேட்க முடியாது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் வீடு பார்க்குமாறு கூறியிருக்கிறேன். அவரை சட்டமன்ற உறுப்பினராக்க நீங்கள் அயராது பாடுபட வேண்டும் என்று உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்.தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்இதை விட்டுவிட்டால் உளுந்தூர்பேட்டை தொகுதியை காப்பாற்றவே முடியாது. எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ``வசந்தம் கார்த்திகேயனின் விளம்பர மோகத்துக்கு அளவே இல்லையா ? அவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அப்படி இருக்கும்போது, அவர் தொகுதியை விட்டுவிட்டு வேறு ஒரு தொகுதியில் வேலை செய்வாரா ? மேலும் உளுந்தூர்பேட்டை தொகுதி கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்தில் வருகிறது. அதன் மாவட்டச் செயலாளர் எங்கள் எம்.எல்.ஏ உதயசூரியன்தான். அவர் இருக்கும்போது இவர் முந்திரிக் கொட்டைத்தனமாக நடந்து கொண்டதுடன், எதிர்க்கட்சிகள் கேலி செய்யுமளவுக்கும் பேசி வைத்திருக்கிறார்" என்று கடுகடுக்கின்றனர் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியனின் ஆதரவாளர்கள்."மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; திமுக-வைத் தவிர..." - செல்வப்பெருந்தகை

vikatan
30 மார்.
3 min read
மனோ தங்கராஜ்: `அமைச்சருக்கே சீட் இல்லியா?' - இரவு வரை போராட்டம் - நிர்வாகிகள் சொல்வது என்ன?
இந்தியா

மனோ தங்கராஜ்: `அமைச்சருக்கே சீட் இல்லியா?' - இரவு வரை போராட்டம் - நிர்வாகிகள் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சீட் மறுக்கப்பட்டதுடன் அந்த தொகுதி சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் தொகுதி கடந்த 20 ஆண்டுகளாக தி.மு.க வசம் இருந்தது. தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்தார் மனோ தங்கராஜ். 2021 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வென்ற ஒரே தி.மு.க எம்.எல்.ஏ-வான மனோ தங்கராஜிக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்த முறையும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடக்கும் என எண்ணியிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன் தொகுதியும் கூட்டணி கட்சியான சி.பி.எம்-க்கு ஒதுக்கப்பட்டது. இது மனோ தங்கராஜ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளும், மனோதங்கராஜின் ஆதரவாளர்களும் கூடினர். தி.மு.க அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்பின்னர் அங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர். அதில், மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றதில் இருந்து தேசிய கட்சிகளின் கோட்டையாக இருந்த குமரி மாவட்டத்தை தி.மு.க கோட்டையாக மாறி அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதிகூட தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படாதது வருத்தமளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கழகத்துக்கு உண்மையாகவும், அரசுக்கு தன் துறை வழியாக நற்பெயரும் உருவாக்கியதோடு, குமரி மாவட்ட தி.மு.க-வை அரண்போல் காத்து, பல ஆயிரம் கோடி திட்டங்கள் மூலம் மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்திய அமைச்சர் மனோ தங்கராஜிக்கு பத்மநாபபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுபரிசீலனை செய்ய தி.மு.க தலைவர் ஸ்டாலினை கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்னர் கட்சி அலுவலகத்துக்கு வெளியே சாலை ஓரமாக நின்று மனோ தங்கராஜிக்கு சீட் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். நேற்று காலையில் இருந்தே கட்சி அலுவலகத்துக்கு வந்த தி.மு.க-வினர் மதியம் கலைந்து சென்றனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் சில நிர்வாகிகள் கட்சி அலுவலகத்துக்குச் சென்று இரவு சுமார் 9 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். மனோ தங்கராஜ் சென்னையில் இருந்தாலும் அவரது ஏற்பாட்டின்படியே ஆதரவாளர்கள் மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராக உள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக 9 ஒன்றியங்கள் உள்ளன. அதில் 5 ஒன்றிய செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 4 பேர் ஆப்சென்ட் ஆகினர். பத்மநாபபுரம் தொகுதியின் மையப்பகுதியான பத்மநாபபுரம் நகர முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்துகொள்ளவில்லை.தி.மு.க போராட்டம்இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜ், "தேர்தல் கூட்டணி விவகாரத்தில் விளவங்கோடு தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் விட்டு கொடுக்க மறுத்ததால் வேறு வழியின்றி பத்மநாபபுரம் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க தலைமை ஒதுக்கியது. கட்சி எடுத்த முடிவுக்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும். மீண்டும் திராவிட மாடல் அரசு தொடர நமது பணி இருக்க வேண்டும். இருந்தாலும் குமரி மேற்கு மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக தி.மு.க-வுக்கு ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். இதனை தி.மு.க தலைவர் பரிசீலனை செய்ய வேண்டும். எனவே, பத்மநாபபுரம் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கி மனோ தங்கராஜை வேட்பாளராக அறிவிக்க தலைமை பரிசினை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளோம்" என்றார்.

vikatan
30 மார்.
3 min read
"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?
இந்தியா

"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?

கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக ஆசி. தியாகராஜன் அறிவிக்கப்பட்டதிலிருந்து கரூர் தி.மு.க நிர்வாகிகள் பொறுமிக்கொண்டிருக்கின்றனர். கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடாததால், இங்குள்ள தி.மு.க-வினர் சேர்வடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியானது. இது பற்றி விசாரிக்க களம் இறங்கினோம்... `தயவு செய்து பெயரை மட்டும் போட்டு விடாதீர்கள்' எனக் கூறிய கட்சி நிர்வாகிகள் சிலர், ``காலம் காலமாக கட்சிக்கு வேலை பார்த்து வரும் சீனியர்கள் பலர் தொகுதியில் இருக்க, 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி போராட்டங்கள், சிறைவாசம் எனக் கட்சிக்காக வாழ்க்கையே தியாகம் செய்தவர்கள் கரூர் மாவட்டத்தில் பலர் இருக்க அதில், ஒருவர் கூட கட்சி தலைமைக்குத் தெரியாமல் போய்விட்டது?முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜிதி.மு.க அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு வேட்பாளர் தேர்வு நடந்திருக்காது. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் கரூர் மாவட்ட தி.மு.க-விற்கு இப்படி ஒரு அநீதி நடந்திருக்காது" எனத் புலம்பித் தள்ளினர்.``2026 சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததுமே கட்சி தலைமை முடிவு செய்து விட்டதாம்.செந்தில் பாலாஜி அனுப்பிய மெசேஜ்; கலர் மாறும் கோவை தெற்கு தொகுதி! - திமுக நிர்வாகிகள் ஷாக்!இதனால், கரூரில் இருந்து தனது ஆதரவாளர்கள் சிலரை கோவைக்கு இடம் மாற வைத்து சரியான அடித்தளத்தை அமைத்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்பது தெரிந்தும், கட்சிக்கு விசுவாசமாக, உண்மையாகப் பாடுபட்டு வரும் பலர் இருக்க அதில் யாராவது ஒருவரைத் தேர்வு செய்து நிறுத்தி இருக்கலாம். ஆனால், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதால், கட்சிக்குத் தொடர்பு இல்லாத ஆசி.தியாகரஜனுக்கு சீட் வாங்கி கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.ஆசி. தியாகராஜன்உண்மையான கட்சி நிர்வாகிகள் அனைவரும் வெளிய சொல்ல முடியாதளவிற்குக் கொதித்துப் போய் உள்ளனர். செந்தில் பாலாஜிதான் கட்சி தொண்டர்களை மறந்து விட்டார் என்றால்? தி.மு.க தலைமையுமா கரூர் நிர்வாகிகளை மறந்து விட்டது? கட்சிக்காக காலம் முழுதுவம் பாடுபடும் தொண்டர்களுக்கு தலைமை கொடுக்கும் வெகுமதி இதுதானா?" எனச் சர வெடியாய் வெடிக்கின்றனர்.யார் இந்த தியாகராஜன்?65 வயதான ஆசி. தியாகராஜன் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி பட்ட படிப்பு முடித்த இவர், விவசாய மற்றும் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருகிறார். கரூர் தான்தோன்றி மலை வெங்கட்ரமண சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர், உப்பிடமங்கலம் விவசாயிகள் நுண்ணுயிர் நீரேற்று பாசன சங்கத் தலைவர் இவைதான் இவரது அரசியல் அனுபவம். இவருக்கு சீட்டு கொடுத்து இருப்பதால் கரூர் தி.மு.க-வினருக்கு மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி; அமைச்சருக்கு இடம் இல்லை! - திமுக வேட்பாளர் பட்டியல்! முழு விவரம்

vikatan
30 மார்.
3 min read
TVK : பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்; பிரசாரத்தைத் தொடங்கிய விஜய்! | Spot Clicks
இந்தியா

TVK : பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்; பிரசாரத்தைத் தொடங்கிய விஜய்! | Spot Clicks

விஜய் - TVKவிஜய் - TVKவிஜய் - TVKவிஜய் - TVKவிஜய் - TVKவிஜய் - TVKவிஜய் - TVKவிஜய் - TVKவிஜய் - TVKவிஜய் - TVKவிஜய் - TVK

vikatan
30 மார்.
3 min read
`உடலா மனமா எது அடையாளம்?'- திருநர் பாலின உரிமையை கேள்விக்குள்ளாக்குகிறதா அரசு?- Trans amendment bill
இந்தியா

`உடலா மனமா எது அடையாளம்?'- திருநர் பாலின உரிமையை கேள்விக்குள்ளாக்குகிறதா அரசு?- Trans amendment bill

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026, இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது இந்தியாவின் சமூக நீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமார் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, `` 2019-ம் ஆண்டு சட்டத்தில் இருந்த 'திருநங்கை' என்ற வரையறை மிகவும் விரிவானதாகவும், தெளிவற்றதாகவும் இருந்தது. இதனால், உண்மையான பலன்களைப் பெற வேண்டியவர்களைக் கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது. எனவே, `உண்மையிலேயே சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகும் நபர்களை' மட்டும் அடையாளம் காண இந்தத் திருத்தம் அவசியம்.கலைநிகழ்ச்சி ஒன்றில் திருநங்கைகள்!சுய-அடையாளம் (Self-identification) என்ற முறையில் எவர் வேண்டுமானாலும் தங்களைத் திருநங்கை என்று கூறிக்கொள்ள வாய்ப்புள்ளது. இதன் மூலம் அரசின் சலுகைகளைத் தவறானவர்கள் தட்டிச் செல்ல வாய்ப்புள்ளதாக அஞ்சுகிறோம். எனவே, ஒருவர் தன்னைத் திருநங்கை என்று அடையாளப்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மசோதாவின்படி, ஒரு மருத்துவக் குழுவின் பரிசோதனைக்குப் பிறகே 'திருநங்கை' என்ற சான்றிதழ் வழங்கப்படும்.குழந்தைகள் அல்லது பெரியவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தலின் பேரில் பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கோ அல்லது திருநங்கை அடையாளத்தை ஏற்பதற்கோ உள்ளாக்கப்படுவதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது." என்றார்.ராஜினாமாவும்... எதிர்ப்பும்..!இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய திருநர் கவுன்சிலின் (NCTP) உறுப்பினர்களான கல்கி சுப்பிரமணியம், ரிதுபர்ணா நியோக் ஆகியோர் மார்ச் 26 அன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.ரிதுபர்ணா நியோக் - கல்கி சுப்பிரமணியஇந்த நிலையில், மசோதாவில் இருக்கும் சிக்கல் குறித்து விரிவாகப் பேச திருநர் சமூகச் செயல்பாட்டாளரும், நடிகையுமான நேஹாவிடம் பேசினோம்.``ஒருவர் தன்னைத் திருநங்கை என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கு ஒரு மருத்துவக் குழுவின் சான்றிதழ் கட்டாயம் என்பது அடிப்படை மனித உரிமை மீறல். ஓர் ஆணோ, பெண்ணோ தங்களை நிரூபிக்க இப்படி உடல் ரீதியான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதில்லை. ஆனால், திருநங்கைகளை மட்டும் அவர்களின் உறுப்புகளைப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்குவது என்பது மிகப்பெரிய அவமானம். 'சுய-அடையாளம்' என்பது மனரீதியானது, அது உடல் உறுப்பு சார்ந்தது மட்டுமல்ல என்பதை இந்த அரசு உணர்வதே இல்லை.ட்ரம்ப்பை காப்பி அடிக்கிறார்கள்!அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு செய்த தவறுகளை அப்படியே காப்பி அடித்து இந்தியாவிலும் அமல்படுத்தப் பார்க்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் 'திருநங்கை' என்ற கண்ணியமான பெயர் புழக்கத்தில் உள்ளது. ஆனால், இந்த மசோதா 'ஹிஜ்ரா', 'அரவாணி' போன்ற மதம் சார்ந்த பெயர்களை மட்டுமே முன்னிறுத்துகிறது. இது கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய சமூகத்திலிருந்து வரும் திருநங்கைகளையும், நாத்திகர்களையும் புறக்கணிக்கும் செயலாகும்.நடிகை நேஹாதிருநங்கைகள் மற்றவர்களைக் கடத்தி வலுக்கட்டாயமாகத் தங்கள் சமூகத்தில் சேர்க்கிறார்கள் என்ற அரசின் வாதம் முற்றிலும் ஆதாரமற்றது. அது அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டம். உயிருக்குப் பயந்து ஓடி வரும் இளம் திருநங்கைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மூத்த திருநங்கைகளை 'கடத்தல்காரர்கள்' என முத்திரை குத்தி, அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இது பெற்றோர்களும், போலீஸாரும் எங்களை மேலும் ஒடுக்கவே உதவும்.நாடாளுமன்றத்தின் வாசலில் திருநங்கைகள் போராடிக் கொண்டிருந்தபோது, அவர்களின் குரலை கேட்காமல் அவசர அவசரமாகக் குரல் வாக்கெடுப்பு மூலம் இதை நிறைவேற்றியது ஜனநாயகப் படுகொலை.எந்த ஒரு மனநல மருத்துவர், ஆய்வாளர் அல்லது திருநங்கை சமூகப் பிரதிநிதிகளின் ஆலோசனையையும் அரசு பெறவில்லை. இது ஒரு சமூகத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி. `எங்கள் உடலையும், வாழ்வையும் தீர்மானிக்க எங்களுக்குத்தான் உரிமை உண்டு' என்ற முழக்கத்துடன் உச்ச நீதிமன்றத்தை நாடத் தயாராகி வருகிறோம்" என்றார்.அக்னி பிரதீப்பாலியல் வன்கொடுமை... - ஏன் இந்த வேறுபாடு?தொடர்ந்து திருநர் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் கவிஞரும் எழுத்தாளருமான அக்னி பிரதீப்பிடம் பேசியபோது, ``அவரவர் பாலின அடையாளத்தை அவர்களே தீர்மானிக்கும் நல்சா (NALSA) தீர்ப்பு 2014 உரிமையை இந்த மசோதா மறுக்கிறது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 படி சுய அடையாளம் என்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதை இந்த சட்ட திருத்தம் மீறுகிறது.திருநர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு கடுமையான சட்டங்களோ தண்டனைகளோ இதில் வரையறுக்கப்படவில்லை.கடந்த காலங்களில் திருநர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை பதிவு செய்யும்போது, காவல் நிலையங்களிலேயே ‘நீங்கள் பெண்களா?’ என்ற கேள்வி எழுப்புவார்கள். பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகே புகார்கள் பதிவு செய்ய முடிகிறது.இந்த மசோதாவில், திருநர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த வேறுபாடு குறித்து இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர், 'பெண்களின் உடல் அமைப்பும் திருநர்களின் உடல் அமைப்பும் வேறுபட்டவை' என்ற விளக்கத்தை அளித்துள்ளார்.மிஸ் கூவாகம் 2023 - திருநங்கைகள்பெயருக்குத்தான் பாதுகாப்புச் சட்டம்...அதாவது, திருநர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் இங்கே முறையாக அணுகப்படுவதில்லை. அதுவே ஒரு பெரிய பாகுபாடு. பிறரை கட்டாயப்படுத்தி திருநராக மாற்றுவோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என மசோதா குறிப்பிடுகிறது. அப்படி மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதற்கான ஆதாரங்களும் இல்லை. இருந்தாலும் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், திருநர்களின் முன்னேற்றத்திற்கான கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு போன்ற அடிப்படை அம்சங்கள் குறித்து எந்த கட்டாய வழிகாட்டுதலும் இதில் இல்லை. மருத்துவர்களுக்கே திருநர் உடல் மற்றும் பாலின அடையாளம் குறித்து முழுமையான புரிதல் இல்லாத சூழலில், அவர்களே அடையாளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே தவறான அணுகுமுறை. இது திருநர் அடையாளத்தை ஒரு ‘நோய்’ என்ற பார்வையில் கட்டமைக்கும் அபாயத்தையும் உருவாக்குகிறது. திருநர்களுக்கு எதிரான வார்த்தை வன்முறைகள் குறித்தும் தெளிவான சட்ட வரையறைகள் இதில் இல்லை. எனவே, பெயருக்குத்தான் இது ஒரு பாதுகாப்புச் சட்டம். ஆனால் நடைமுறையில், திருநர்களை இது பாதுகாக்கவில்லை" எனத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.மனநல மருத்துவர் சிவ பிரகாசன்பாலின அடையாளம் என்பது...திருநர் உணர்வுகள் குறித்து தெளிவுபெற SCARF நிறுவனத்தின் இளைஞர் மனநலத் துறைத் தலைவரும், முதுநிலை மனநல மருத்துவருமான சிவ பிரகாசனிடம் பேசினோம். அவர், ``முதலில் திருநங்கைத் தன்மை என்பது ஒரு நோயோ அல்லது குறைபாடோ அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம், அனுபவிக்கிறோம் என்பதில் இருக்கும் ஒரு மாற்றம் இது. பாலின அடையாளம் என்பது உடல் சார்ந்ததா அல்லது மனம் சார்ந்ததா என்ற கேள்விக்கே இடமில்லை.நம் ஒவ்வொருவருக்கும் மூளையில் `என் உடல் எப்படி இருக்கிறது?' என்பது குறித்த ஒரு பிம்பம் இருக்கும். ஒருவரின் மனரீதியான அந்தப் பிம்பமும், அவரின் உடல் அமைப்பும் எப்போது முரண்படுகிறதோ, அப்போதுதான் இந்த அடையாளம் குறித்த சிக்கல் ஆரம்பிக்கிறது. எனவே, இது மனரீதியான உணர்வு மற்றும் உடல் ரீதியான வெளிப்பாடு ஆகிய இரண்டின் கலவை.ஏற்கெனவே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரும் திருநங்கைகளுக்கு, தற்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத் திருத்தம் கூடுதல் தடையை உருவாக்கும். தங்களின் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்குள் தேவையற்ற பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் உண்டாக்கும்.திருநங்கைகள்12 ஆண்டுக்கால அனுபவத்தில்...ஒருவேளை ஒரு மருத்துவர் அவர்களின் உணர்வை அங்கீகரிக்க மறுத்தால், அது அந்த நபரை மீண்டும் ஒரு சமூக முடக்கத்திற்குத் தள்ளும். இது அவர்களைப் பாதுகாப்பற்ற முறையிலான ஹார்மோன் சிகிச்சைகளைத் தேடிச் செல்லத் தூண்டும் அபாயமும் உள்ளது.பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் இருப்பவர்களைச் சிலர் மேனிபுலேட் (Manipulate) செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், எனது 12 ஆண்டுக்கால அனுபவத்தில் இது போன்ற நேரடியான பாதிப்புகள் எதையும் நான் பார்த்ததில்லை. எனவே, ஒருவர் பாலின மாற்றம் குறித்த முடிவை எடுப்பதற்கு முன், போதுமான கால அவகாசம் கொடுத்து, முறையான ஆலோசனைக்கு உட்படுத்துவது சரியாக இருக்கும். எனவே, சுய-பாலின அடையாளம் ஒருவரின் உரிமையாக இருக்க வேண்டும். அதே சமயம், அவர்கள் சரியான முடிவை எடுக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தத் தேவையான மருத்துவ மற்றும் மனநல ஆதரவை அரசு வழங்க வேண்டுமே தவிர, அதை ஒரு தடையாக மாற்றக் கூடாது" எனத் தெளிவாகப் பேசினார்.யாரையும் வற்புறுத்திஇந்த விவகாரம் குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயராமனிடம் பேசினோம். அவர், ``ஒரு நபர் திருநங்கையா என்பதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப் பல கட்டப் பரிசோதனைகள் உள்ளன. ரத்தப் பரிசோதனை மூலம் ஹார்மோன் அளவுகளைக் கண்டறிவது, மரபணு (Genetic/Chromosome) சோதனை செய்வது, எலும்பு மஜ்ஜை சார்ந்த ஆய்வுகள் மூலம் ஒருவரின் உடற்கூறியல் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும்.டாக்டர் ஜெயராமன்பொதுவாக, பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு, உடல் அந்த மாற்றங்களுக்கு எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதும் கண்காணிக்கப்படும். உடல் ரீதியாக ஒரு பாலினமாகவும், மனரீதியாக மற்றொரு பாலினமாகவும் உணரும் நபர்களில், மனரீதியான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மனதளவில் தங்களைத் திருநங்கைகளாக உணரும் நபர்களுக்கும் ஹார்மோன் நிலைகள் மற்றும் மரபணு சோதனைகள் மூலம் உரிய மருத்துவ வழிகாட்டுதல்களை வழங்க முடியும். அரசின் மசோதாவில், 'வற்புறுத்தலின் பேரில் பாலின மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கவே மருத்துவச் சான்றிதழ் கேட்கப்படுகிறது' என்ற வாதம் ஏற்புடையது அல்ல. யாரையும் வற்புறுத்தி ஓர் அடையாளத்தை ஏற்க வைக்க முடியாது. ஒருவேளை மிரட்டல் அல்லது வற்புறுத்தல் இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால், அந்த நபரின் மரபணு ரீதியான தரவுகள் மற்றும் விரிவான மருத்துவப் பின்னணியைச் சோதிப்பதன் மூலம் உண்மைத் தன்மையைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் மருத்துவச் சான்றிதழ் முறை, அறிவியல் ரீதியாகச் சாத்தியம் என்றாலும், அது ஒரு நபரின் தனிப்பட்ட உணர்வுகளைச் சிதைக்காமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம்" என்றார்.கர்நாடகாவில் ஆணவக்கொலைக்கு எதிரான மசோதா, சாதி ஓட்டுக் கணக்கால் தயங்குகிறதா தமிழ்நாடு?

vikatan
30 மார்.
3 min read
"கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம்; மோடியின் உத்தரவாதம்!" - பாலக்காட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
இந்தியா

"கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம்; மோடியின் உத்தரவாதம்!" - பாலக்காட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர் மோடி. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, திருச்சூர் பி.ஜே.பி வேட்பாளர் பத்மஜா வேணுகோபால், மணலூர் தொகுதி வேட்பாளர் கே.கே. அனீஷ் குமார், நாட்டிகா தொகுதி சி.பி.ஐ கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்து பின்னர் பா.ஜ.க-வில் இணைந்து வேட்பாளரான சி.சி.முகுந்தன் ஆகியோரும் பிரதமரின் ரோடு ஷோ வாகனத்தில் இருந்தனர். பாலக்காட்டில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "கேரளத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளத்தின் இளைஞர்களும், பெண்களும், விவசாயிகளும் பி.ஜே.பி பக்கம் நிற்கிறார்கள். நமது எத்தனையோ நிர்வாகிகள் அரசியல் தாக்குதலால் உயிரை தியாகம் செய்தனர். அந்த நிர்வாகிகளை வணங்குகிறேன். கேரளத்தின் நுழைவு வாயிலாக பாலக்காடு அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக கேரளா இடது-வலது கட்சிகளின் வஞ்சனையில் சிக்கிக்கிடக்கிறது. ஒன்று ஊழல் கட்சி, மற்றொன்று மகா ஊழல் கட்சி. ஒன்று வகுப்புவாதம் மற்றொன்று பயங்கர வகுப்புவாதம். எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் ஆகிய கூட்டணிகளின் கொள்கைகள் வாக்கு வங்கி அரசியலாகும். கேரளாவின் வளர்ச்சியைப் பற்றி அவர்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. இங்கு அமைய உள்ள பி.ஜே.பி அரசு கேரளாவில் வேகமான வளர்ச்சிப்பணிகளை ஏற்படுத்தும். கேரளம் வளரும், மாறாதது இனி மாறும். பல தசாப்தங்களாக எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் ஆகியவை மாறி மாறி கேரளாவை கொள்ளையடித்து வருகிறது.பாலக்காடு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிகாங்கிரஸ் பி.ஜே.பி-யின் 'பி' டீம் என்று சி.பி.எம் கூறுகிறது. சி.பி.எம் கட்சி பி.ஜே.பி-யின் 'பி' டீம் என்று காங்கிரஸ் கூறுகிறது. எனவே கேரளாவில் 'ஏ' டீம் பி.ஜே.பி மட்டும்தான் என்பதை இரு கூட்டணிகளும் ஒப்புக்கொள்கின்றன. கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம். இரண்டு ஊழல் கட்சிகளும் பி.ஜே.பி-யைக் கண்டு பயப்படுகின்றன. ஏனென்றால் கேரளாவில் பி.ஜே.பி ஆட்சி வந்ததும், அவர்களின் ஊழல் எல்லாவற்றையும் வெளியே கொண்டுவரும். பல ஆண்டுகளாக அவர்கள் கொள்ளையடித்தாலும், மாறி மாறி சட்ட நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். கேரளத்தில் பி.ஜே.பி அரசு அமைந்தால், சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுகளின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம். இதனால்தான் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பி.ஜே.பி-யைப் பார்த்து பயப்படுகின்றன.வளர்ந்த கேரளம் - மோடியின் உத்தரவாதம்!ரோடு ஷோ-வில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபிமேற்கு ஆசியாவில் யுத்தம் நடக்கிறது. கேரளத்தில் இருந்து நிறையபேர் யுத்த பூமியில் சிக்கி உள்ள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நம் நாட்டு தூதரகங்கள் அங்கு தீவிரமாக வேலைசெய்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆபத்தான விஷயங்களை பேசுகிறார்கள். வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சுமார் ஒருகோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு ஆபத்து ஏற்படவேண்டும், அதன்மூலம் அரசியல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸும், சி.பி.எம் கட்சியும் நாடு முழுவதும் ஒன்றாக உள்ளன. பீகார், ஆந்திரா, மணிப்பூர், திரிபுரா, அசாம் மற்றும் தமிழ்நாட்டிலும் இவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். கேரளாவில் மட்டும் பரஸ்பரம் மோதிக்கொள்வார்கள். எனவே இவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேரளத்தில் சாலை, ரயில்வே வளர்ச்சி, ஜல் ஜீவன் மிஷன், பி.எம் ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களுக்காக வழங்கப்பட்ட பணம் மக்களைச் சென்றடையவில்லை. வளர்ந்த கேரளம் என்பது மோடியின் உத்தரவாதம்" என்றார்.

vikatan
30 மார்.
3 min read