தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

india

49 கட்டுரைகள் india இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்பூரில் சிம் வாங்கினர்
இந்தியா

டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்பூரில் சிம் வாங்கினர்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​கள் குறித்து அதி​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது: டெல்லி குண்​டு​வெடிப்​புக்​காக நேபாளத்​தில் இருந்து ஏழு பழைய செல்போன்​களை சதி​காரர்​கள் வாங்​கி​யுள்​ளனர். மேலும் 17 சிம் கார்​டு​கள் வாங்​கப்​பட்​டுள்​ளன. இதில் 6 சிம் கார்​டு​களை உ.பி.​யின் கான்​பூரில் வாங்​கி​யுள்​ளனர்.

feedburner
21 நவ.
3 min read
2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு
இந்தியா

2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு

புதுடெல்லி: கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடந்த அக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறும் பணியை உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது தாத்ரியின் படுகொலை சம்பவம். மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்ததாகக் கூறி முகமது அக்லாக், கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

feedburner
21 நவ.
3 min read
இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்
இந்தியா

இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்

புதுடெல்லி: இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும் என்று அக்​கட்சி எம்​எல்ஏ ரவி​தாஸ் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து சமாஜ்​வாதி கட்​சி​யின் மத்​திய லக்னோ தொகுதி எம்​எல்ஏ ரவி​தாஸ் மல்​ஹோத்ரா கூறும்போது, ‘‘பிஹாரில் வாக்​குச் சீட்டு அடிப்​படை​யில் தேர்​தல் நடந்​திருந்​தால் இண்​டியா கூட்​டணி வெற்றி பெற்​றிருக்​கும். நாட்​டின் அரசி​யல் முக்​கிய​த்​து​வம் வாய்ந்த ஒரு மாநிலத்​தில் (உ.பி.​யில்) தனித்து ஆட்சி அமைக்​கும் திறனுள்ள கட்​சி​யாக சமாஜ்​வாதி உள்​ளது. இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும்” என்​றார். நாட்​டின் முக்​கிய எதிர்க்​கட்​சி​யான காங்​கிரஸ் பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் 6 இடங்​களில் மட்​டுமே வென்​றுள்​ளது. தேர்​தலுக்கு முன் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நடத்​திய வாக்​காளர் அதி​கார யாத்​திரை உரிய பலனை அளிக்​க​வில்​லை.

feedburner
21 நவ.
3 min read
நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்
இந்தியா

நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு வழக்கை விசா​ரிக்​கும் என்ஐஏ அதி​காரி​கள் கூறிய​தாவது: ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா மருத்​து​வ​மனை​யில் உமர் நபி மருத்​து​வ​ராக பணி​யாற்றி வந்​தார். அங்கு சக மருத்​து​வர்​கள் கைது செய்​யப்​பட்ட நிலை​யில் உமர் நபி தலைமறை​வா​னார். இதன்​பிறகு ஹரி​யா​னா​வின் நூ நகரில் அவர் 10 நாட்​கள் பதுங்கி இருந்​துள்​ளார். அங்கு ஹிதா​யத் காலனி​யில் உள்ள வீட்​டில் அவர் தங்​கி​யிருந்து உள்​ளார். இந்த வீடு, அல் பலா மருத்​து​வ​மனை ஊழியர் சோகிப்​பின் உறவினர் வீடு ஆகும். சோகிப் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். வீட்​டின் உரிமை​யாளர் தலைமறை​வாகி​விட்​டார். அவரை தீவிர​மாக தேடி வரு​கிறோம்.

feedburner
21 நவ.
3 min read
டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது
இந்தியா

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 10-ம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர், டெல்லி, ஹரியானா, குஜராத், உத்தர பிரதேச போலீஸாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

feedburner
21 நவ.
3 min read
டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு
இந்தியா

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

புதுடெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார். இதில், 13 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் முக்​கிய குற்​ற​வாளி​யாக சந்​தேகிக்​கப்​பட்ட மருத்​து​வர் ஷாகின் சயீத் கைது செய்​யப்​பட்​டார். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் பாகிஸ்​தானைச் சேர்ந்த ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்​பின் பெண்​கள் பிரி​வின் தலை​வ​ராக இந்​தி​யா​வில் செயல்​பட்​டது தெரிய​வந்​தது.

feedburner
21 நவ.
3 min read
பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்
இந்தியா

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

புதுடெல்லி: முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்படுத்தி உள்​ளது. காங்​கிரஸ் கட்​சிக்​கும் அவருக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சசி தரூர் எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில், அழைப்​பின் பேரில் நான் பங்​கேற்​றேன். அதில் பேசிய பிரதமர் நரேந்​திர மோடி, இந்​தியா என்​பது வளரும் சந்தை மட்​டுமல்ல, உலக நாடு​களுக்​காக வளர்ந்து வரும் மாதிரி என்று கூறி​னார். கரோனா பெருந்​தொற்​று, ரஷ்​யா-உக்​ரைன் போர் உள்​ளிட்ட சர்​வ​தேச அளவி​லான நிச்​சயமற்ற தன்​மைக்கு நடு​விலும் இந்​திய பொருளா​தா​ரம் வளர்ந்து வரு​வதைத்​தான் அவர் அவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

feedburner
21 நவ.
3 min read
பாஜக.வினருக்கு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ஆயுதங்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும்: கல்​யாண் பானர்​ஜி பேச்சால் சர்ச்சை
இந்தியா

பாஜக.வினருக்கு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ஆயுதங்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும்: கல்​யாண் பானர்​ஜி பேச்சால் சர்ச்சை

கொல்கத்தா: ‘‘​பாஜக.​வினருக்கு ஆயுதங்​கள், வெடிப்​பொருட்​கள் வழங்​கு​வதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்​திக் கொள்ள வேண்​டும்’’ என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி பேசி​யது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. மேற்கு வங்க மாநிலத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் மம்தா பானர்ஜி முதல்​வ​ராக பொறுப்பு வகிக்​கிறார். இவரது கட்​சி​யின் எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி. அவ்​வப்​போது ஏதாவது கருத்​துகளை தெரி​வித்து சர்ச்​சை​யில் சிக்கி வரு​கிறார்.

feedburner
21 நவ.
3 min read
நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
இந்தியா

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்

பாட்னா: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய திலிப் ஜெய்ஸ்வால், "நாளை காலை 10 மணிக்கு பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். இதில், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சியின் மேலிட பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து என்டிஏ கூட்டம் நடைபெறும்.

feedburner
21 நவ.
3 min read