
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாமக - செளமியா அன்புமணி எந்தத் தொகுதியில் நிற்கிறார்?
2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அன்புமணி ராமதாஸ்இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளின் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, * பெரம்பூர் – திலகபாமா * தர்மபுரி – சௌமியா அன்புமணி* விருத்தாசலம் – தமிழரசி ஆதிமூலம்* விக்கிரவாண்டி – மயிலம் சிவக்குமார்* சேலம் மேற்கு – மு.கார்த்தி * சேலம் வடக்கு - சதாசிவம்* பென்னாகரம் – பாடி வெ.செல்வம்* சோளிங்கர் – வழக்கறிஞர் க.சரவணன்* மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ.பழனிச்சாமி* உத்திரமேரூர் பெ.மகேஷ்குமார்அன்புமணி ராமதாஸ் * போளூர் – சி.ஆர்.பாஸ்கரன்* திருப்போரூர் – வழக்கறிஞர் கே.பாலு* ஜெயங்கொண்டம் – க.வைத்தி* ரிஷிவந்தியம் – அ.ப.செழியன்* காட்டுமன்னார்கோயில் – மருத்துவர் அன்பு.சோழன்
இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.