தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

india

28 கட்டுரைகள் india இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் பதில் என்ன?
இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் பதில் என்ன?

மத்திய அரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இக்கணக்கெடுப்பில் லிவ் இன் முறையில் வாழ்பவர்களை எவ்வாறு கணக்கெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நிலையான லிவ் இன் உறவில் இருக்கும் தம்பதிகளை திருமணமான தம்பதிகளாகக் கணக்கெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய-விவரப் பதிவேற்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கேள்விக்கு அளித்துள்ள விளக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது."சுய-விவரப் பதிவேற்றத்தின் போதோ அல்லது கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போதோ, ஒன்றாக வசிக்கும் (live-in relationship) ஒரு ஜோடியை திருமணமான தம்பதியாகக் கருதலாமா?" என்ற கேள்விக்கு, அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், ''அந்த ஜோடி தங்கள் உறவை ஒரு நிலையான பிணைப்பாகக் கருதினால், அவர்கள் திருமணமான தம்பதிகளாகவே நடத்தப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்புதம்பதிகள் தாங்கள் நிலையான உறவில் இருப்பதாகத் தெரிவித்தால், அதற்கு சட்டப்பூர்வ சான்றிதழ்கள் எதுவும் தேவையில்லை. அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே கணக்கெடுக்கப்படுவார்கள். மக்கள் தாங்களாகவே இணையதளம் வழியாகவோ அல்லது கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போதோ இந்தத் தகவலைப் பதிவு செய்யலாம். இந்த விவகாரத்தில் தற்போதுதான் முதல்முறையாகப் மத்திய அரசு வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, மக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுவதால் இந்தத் தெளிவுபடுத்தல் அவசியமாகிறது. இருப்பினும், கடந்த கால கணக்கெடுப்புகளிலும் கூட, ஒன்றாக வாழும் திருமணதிற்கு அப்பாற்பட்ட ஜோடிகள் தங்களை "திருமணமானவர்கள்" என்று கணக்கெடுப்பாளரிடம் தெரிவித்தால், அவ்வாறே பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுட்டனர். தென்னிந்தியாவில் குறையும் இளம் மக்கள் தொகை - அரசியல், பொருளாதார தாக்கம் என்ன?மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியல், வீட்டு வசதிகள் குறித்து கேட்கப்பட்டுள்ள கட்டத்தில் கேட்கப்படவுள்ள 33 கேள்விகளில், ஒரு வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகும். இந்தக் கணக்கெடுப்புப் பணி 45 நாட்கள் நடக்க இருக்கிறது. முதல் கட்டமான வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் அறிவிப்பின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியல் பணிகள் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும்.45 நாட்கள் நடக்கும் இக்கணக்கெடுப்பின் முதல் 15 நாட்கள் சுய விபர பதிவேற்றத்திற்காகவும், அதைத்தொடர்ந்து வரும் 30 நாட்களில் கணக்கெடுப்பாளர்கள் நேரில் வந்து விபரங்களைச் சேகரிப்பதாகவும் இருக்கும்.மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பதிலளிப்பவர்கள் தங்கள் பதில்களுக்கு எந்தவிதமான ஆவண ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தெரிந்த உண்மையான தகவல்களைத் தெரிவித்தால் போதுமானது. மக்கள் தொகைபதிலளிப்பவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புது டெல்லி மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி சுய விபரப் பதிவேற்றம் தொடங்குகிறது. இதில் ஒரு பிரத்யேக இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளலாம்.இந்தச் சுய-விவரப் பதிவேற்ற வசதி, ஆங்கிலம் மற்றும் 15 இந்திய மொழிகளில் இருக்கும். குடும்பத் தலைவர் சுயவிபர தகவல்களைப் பதிவேற்றம் செய்யப்படலாம். குடும்பத் தலைவர் ஆண் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தவிர ஒடிபி அடிப்படையிலான மொபைல் சரிபார்ப்பை முடித்த பிறகு, குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்பான குடும்ப உறுப்பினர் எவரும் இதனைச் செய்யலாம்.கால்பந்து மைதானத்தை விடச் சிறியது; ஆனால் மக்கள் தொகை அதிகம் - உலகின் நெரிசலான தீவு பற்றி தெரியுமா?

vikatan
30 மார்.
3 min read
நான்காவது முறையாக கொளத்தூரில்... வேட்புமனு தாக்கல் செய்து, பிரசாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின்! - Album
இந்தியா

நான்காவது முறையாக கொளத்தூரில்... வேட்புமனு தாக்கல் செய்து, பிரசாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின்! - Album

ஸ்டாலின்ஸ்டாலின்ஸ்டாலின்ஸ்டாலின்ஸ்டாலின்ஸ்டாலின்ஸ்டாலின்

vikatan
30 மார்.
3 min read
போர் எதிரொலி: `மீண்டும் மண்ணெண்ணெய்.!' - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியா

போர் எதிரொலி: `மீண்டும் மண்ணெண்ணெய்.!' - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் இடையே தொடர்ந்துவரும் போரால், ஹோர்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருக்கிறது. ஈரான் அனுமதிக்கும் நாடுகளின் கப்பல் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சூழல் நிலவுவதால் உலக நாடுகள் பலவும் எரிசக்திப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிம விதிமுறைகளைத் தளர்த்தி மார்ச் 29 அன்று புதிய அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மண்ணெண்ணெய்அதில், ``மண்ணெண்ணெய் விநியோகம் ஏற்கனவே படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்த டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பொது விநியோக அமைப்பின் (PDS) உயர்தர மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விநியோகத்தை விரைவுபடுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, சமையல் மற்றும் விளக்கு எரிப்பதற்காக, வீடுகளுக்குத் தேவையான மண்ணெண்ணெயை அடுத்த 60 நாள்களுக்கு வழங்கப்படும்.மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இது தவிர குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்கள் மூலமாகவும் விநியோகிக்கலாம். அவற்றில் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெயை இருப்பு வைக்க அனுமதிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் இரண்டு சேவை நிலையங்களை மாநில அரசுகள் அடையாளம் காணும்.திருச்சியில் பிரதமர் மோடிதற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலிய விதிகள் 2002-ன் கீழ் மண்ணெண்ணெய் கையாளுதல் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத் தேவைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், இறுதிக்கட்ட விநியோகச் சங்கிலியை பலப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 60 நாட்களுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும்." என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.Trump: 'No Kings' ட்ரம்பிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

vikatan
30 மார்.
3 min read
`காலம் சில கணக்குகளைப் போட்டுக் காத்திருந்தது' - ஓ.பி.எஸ் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட தேர்தல்!
இந்தியா

`காலம் சில கணக்குகளைப் போட்டுக் காத்திருந்தது' - ஓ.பி.எஸ் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட தேர்தல்!

முதல் களம் 12ஓ.பன்னீர்செல்வம்தமிழக அரசியல் வரலாறு எத்தனையோ பல விசித்திரங்களையும் விநோதங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையும் அத்தகைய ஒன்றுதான். 2001 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வத்துக்கு ஆரம்பமே வெற்றிதான். எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்தில் நுழைந்தவர், வருவாய்த் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டபோதுதான் அதிமுக வட்டாரம் மட்டுமல்ல, அரசியல் வட்டாரமும் ஆச்சரியமும் வியப்புமாக பார்த்தது. ஆனால், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ-வாகவும் அமைச்சராகவும் ஆனதன் பின்னணியை அறிந்தவர்களுக்கு அத்தகைய அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த பின்னணி என்ன, டீ கடை வைத்திருந்த பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ ஆனது எப்படி? யார் அவருக்கு தேர்தலில் சீட் வாங்கிக் கொடுத்தார்கள்? அதைவிட முதன்முறையாக எம்.எல்.ஏ-வாக ஆனவருக்கு அமைச்சர், அடுத்ததாக முதலமைச்சர் பதவியில் அமரும் அளவுக்கு செல்வாக்கு ஏற்பட்டது எப்படி..? எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள 1970 லிருந்து பயணிக்க வேண்டும்... ஓ.பன்னீர்செல்வம்தேநீர் கடை உரிமையாளர் டு நகர்மன்றத் தலைவர்தேனி மாவட்டத்தின் பெரியகுளம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவர் ஓ.பன்னீர்செல்வம். பெரியகுளம் கார்டியா கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் படித்த மூன்றாண்டுகளிலும் அவரை நண்பர்களுடன் பார்ப்பது என்பது அரிது. ஏனெனில் அவருக்கு நண்பர் வட்டமே இல்லை. மதிய உணவு கூட தனிமையில்தான். அந்த அளவுக்கு அலட்டிக்கொள்ளாமல் இருந்தவர், கல்லூரி படிப்பை முடித்ததும், சிறிய அளவில் பால்பண்ணை ஒன்றை ஆரம்பித்தார். பால் கொள்முதல் தாராளமாக இருந்ததால், டீ கடை ஒன்றையும் நண்பர் ஒருவருடன் இணைந்து தொடங்கினார். அந்தக் கடைதான் அவருக்கு உள்ளூரில் ஓரளவு அறிமுகத்தைக் கொடுத்தது. எம்.ஜி.ஆர்.,திமுக-விலிருந்து பிரிந்து அதிமுக-வைத் தொடங்கியபோதிலிருந்து தொடங்கியது பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை. அதிமுகவில் இணைந்த அவர், சில மாதங்களிலேயே பெரியகுளம் நகர இளைஞர் அணிச் செயலாளரானார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கட்சி பிளவுபட்டபோது, ஜானகி அணியை ஆதரித்தார். 1989 சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணி சார்பில் போட்டியிட்ட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஆதரவாக தேர்தல் வேலைகளை மேற்கொண்டார். ஆனாலும், அந்தத் தொகுதியில் ஜெயலலிதாவே வெற்றிபெற்றார். அடுத்து வந்த ஆண்டுகளில் இரு அணிகளும் இணைந்தபோது, பன்னீர்செல்வம், ஜெயலலிதா தலைமையை ஏற்றார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியகுளம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு, நகர்மன்ற தலைவர் பதவி கிடைத்தது.தினகரனால் கிடைத்த அரசியல் வெளிச்சம்1999 நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் பன்னீரின் அரசியல் வாழ்க்கையில் வெளிச்சம் பரவத் தொடங்கியது. அந்தத் தேர்தலில், அப்போது போயஸ் தோட்டத்தில் செல்லப்பிள்ளையாக வலம் வந்த டி.டி.வி தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவரை வெற்றி பெறச் செய்வதற்கான தேர்தல் வேலைகளைப் பார்த்தவர் பன்னீர் செல்வம்தான். குறிப்பாக தினகரனுக்கான தேர்தல் செலவுகளை நயாபைசா துல்லியமாகக் கணக்கிட்டு நிர்வகித்தார். திமுக மாவட்டச் செயலாளர் மூக்கையாவையும் பலமாக 'கவனித்து' அவரை தேர்தல் வேலை பார்க்கவிடாமல் முடக்கிப்போட்டதாகவும் சொல்லப்பட்டது. தேர்தலில் தினகரன் வெற்றி பெறவும், அதற்குப் பிரதிபலனாக, பன்னீர்செல்வத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் போயஸ் கார்டனுக்குள் நுழையும் அங்கீகாரமும் கிடைத்தது.பன்னீர்செல்வம் - தினகரன்உச்சத்துக்கு கொண்டு சென்ற முதல் தேர்தல் வெற்றி இந்த நிலையில், 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தினகரன் உதவியால் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது பன்னீருக்கு. அவரை எதிர்த்து திமுக சார்பில், எம். அபுதாகிர் களம் இறங்கினார். மதிமுக உள்ளிட்ட சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் போட்டியிட்டாலும், உண்மையில் அது இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான நேரடிப் போட்டியாகவே அமைந்தது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது, 62,125 வாக்குகளைப் பெற்று, 17,920 வாக்குகள் வித்தியாசத்தில் அபுதாகிரை வீழ்த்தி வெற்றி பெற்றார் பன்னீர்செல்வம். அடிமட்டத்தில் வலுவான அமைப்பும், அதிமுக-வின் செல்வாக்குமிக்க நபரின் ஆசியும் ஆதரவும் இருந்ததால், அவரது வெற்றி எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது. முதன்முறையாக எம்.எல்.ஏ ஆன பன்னீர்செல்வம், அடுத்ததாக யாரும் எதிர்பாராத வகையில், வருவாய்த் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஆச்சரியங்கள் அதோடு நின்றதா என்றால் இல்லை. காலம் இன்னும் வேறு சில கணக்குகளைப் போட்டுக் காத்திருந்தது. போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை TTV தினகரனின் முதல் தேர்தலும் ஆச்சரியங்களும்! | முதல் களம் 11அது 2001 செப்டம்பர் 21-ம் தேதி. ‘டான்சி’ ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருந்த ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் பாத்திமாபீவி முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால், அதிர்ந்துபோனார்கள் அதிமுகவினர். அரசியல் வட்டாரத்தில் ஏக பரபரப்பு. அதிமுகவுக்கு முழு பெரும்பான்மை பலம் இருந்ததால், ஆட்சிக்கு ஆபத்தில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்குப் பதில் வேறு ஒருவரை அக்கட்சி முதலமைச்சராக தேர்வு செய்ய வேண்டிய நிலை. இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்லுமாறு அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் உத்தரவு பறக்கிறது. இன்னொருபுறம், போயஸ் தோட்டத்தில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. யாரை முதலமைச்சராக்கினால், அவர் நமக்கு கட்டுப்பட்டு நடப்பார், விசுவாசமாக இருப்பார் என்கிற மந்திராலோசனையில் ஒருவர் பெயர் முடிவு செய்யப்படுகிறது. பன்னீர்செல்வம்பணிவுக்கும் விசுவாசத்துக்கும் கிடைத்த முதலமைச்சர் பதவி இந்த நிலையில், மாலை 3 மணியில் இருந்தே அதிமுக தலைமைக் கழகத்தில் குவியத் தொடங்கிய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்த முதலமைச்சராக அம்மா யாரை அறிவிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு. ஒருவருக்கொருவர் குசுகுசுவெனப் பேசிக்கொள்கிறார்கள். நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதா என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்புமாக இருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலர் ஒன்றுகூடி, ரகசியமாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இரவு 7 மணி வாக்கில் தலைமைக் கழகத்துக்கு வருகிறார் ஜெயலலிதா. அடுத்த சில நிமிடங்களில் கூட்ட அரங்குக்குச் சென்ற அவர், வழக்கில் தாம் வெற்றிபெறும் வரை முதலமைச்சர் பதவிக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை விளக்கி, அப்பதவிக்கு தாம் முடிவு செய்த ஒரு நபரின் பெயரை அறிவிக்கிறார். அவர் பெயர் ஓ.பன்னீர்செல்வம். அந்தப் பெயரைக் கேட்டதும், அரங்கில் கூடி இருந்த ஒட்டுமொத்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சி. 2001 தேர்தலில் முதல்முறையாக பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வான பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டபோதே அதை ஆச்சரியமாகத்தான் பார்த்தார்கள் அதிமுக-வினர். தற்போது முதலமைச்சர் பதவியும் அவருக்கே என்பதை அதிமுக மூத்த அமைச்சர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவ்வளவு ஏன், எம்.எல்.ஏ-க்களுக்கு கூட அதிர்ச்சிதான். ஆனால், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ-வாகவும் அமைச்சராகவும் ஆனதன் பின்னணியை அறிந்தவர்களுக்கு அத்தகைய அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அமைதியானவர்; அடக்கமானவர்; விசுவாசமாக நடந்துகொள்வார் என பன்னீர்செல்வத்தின் மீது போயஸ்தோட்ட அதிகார மையத்துக்கு ஏற்பட்ட நம்பிக்கையே அவருக்கு இந்தப் பதவியைப் பெற்றுத்தந்தது. வேறு எந்தத் தகுதியும் கருத்தில்கொள்ளப்படவில்லை. போயஸ்தோட்டத்தில் தினமும் ஆஜர் அன்றைய காலகட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் யாருக்கும் கோப்புகளில் கையெழுத்திடுவது முதல் டெண்டர்களை முடிவு செய்வதுவரை தன்னிச்சையாக தீர்மானிக்கும் அதிகாரம் எதுவும் கிடையாது. அதற்கான அறிவாற்றலும் ஒரு சில மூத்த அமைச்சர்கள் தவிர வேறு யாருக்கும் கிடையாது. போயஸ்தோட்டத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்கள் என்னவோ, அதன்படிதான் செயல்பட வேண்டும். அந்தந்த துறை அதிகாரிகள் அதற்கு உதவுவார்கள். நீட்டிய இடத்தில் கையெழுத்திட வேண்டும். 'கப்பமும் கட்டிங்கும்' கரெக்ட்டாக சென்றுவிட வேண்டும். எஞ்சியதுதான் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும்.இத்தகைய சூழ்நிலையில்தான் 2001 செப்டம்பர் 21 அன்று, எம்.எல்.ஏ-வாக பதவியேற்ற சில மாதங்களிலேயே தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சராகப் பதவியேற்றார் பன்னீர்செல்வம். மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுவித்ததும், ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதலமைச்சராகும் வரை, பன்னீர்செல்வம் 2002 மார்ச் 1 வரை முதலமைச்சர் பதவியில் நீடித்தார். முதலமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வருவாய், பொதுப்பணித்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறைகளை ஓ.பி.எஸ் கையில் வைத்திருந்தார் . அவருக்கான ஆலோசனைகளை அப்போது மூத்த அமைச்சராக இருந்த பொன்னையன்தான் வழங்கியதாகவும், கோப்புகள் போயஸ்தோட்டம் சென்றுவந்ததாகவும் சொல்லப்பட்டதுண்டு. அதே சமயம், ஓபி.எஸ் அன்றாடம் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆஜர் போட்டதும் தவறாமல் நடந்தேறின.ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் இரண்டு முறை முதலமைச்சர் 2006-ல் பெரியகுளம் தொகுதியிலிருந்து மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.எஸ், திமுக ஆட்சிக்கு வந்ததால் எதிர்க்கட்சியில் அமர்ந்தார். 2011-ல் போடிநாயக்கனூர் தொகுதிக்கு மாறி வென்ற அவர், ஜெயலலிதா அமைச்சரவையில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு முக்கியப் பொறுப்பை ஏற்றார். 2014-ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதும், மீண்டும் இடைக்கால முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்ததைத் தொடர்ந்து, அவரிடம் மீண்டும் முதலமைச்சர் பதவியை ஒப்படைத்தார். 2016-ல் போடிநாயக்கனூரிலிருந்து மறுபடியும் வென்ற அவர், டிசம்பரில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக முதலமைச்சரானார். அதிமுகவிலிருந்தே நீக்கம்சில மாதங்களில் சசிகலா குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி ஜெயலலிதா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தது, அதனைத் தொடர்ந்து அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுபட்டது, 2017-ல் அதிமுக அணிகள் இணைந்ததும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவியேற்றதெல்லாம் பன்னீர்செல்வத்தின் அரசியல் அத்தியாயத்தின் பரபரப்பான நிகழ்வுகள். பின்னர், 2021-ல் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஆட்சி அதிகாரம் கையைவிட்டுப் போனது. தோல்விக்கு யார் காரணம் என்பதில் தொடங்கி, கட்சியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலில், 'துரோகி' முத்திரை குத்தப்பட்டு, அதிமுகவிலிருந்தே வெளியேற்றப்பட்டு, இன்று திமுக-வில் ஐக்கியமாகி, எம்.எல்.ஏ சீட்டும் பெற்றிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்! இப்போது, இந்தக் கட்டுரையின் முதல் வரியை மீண்டும் வாசித்துக்கொள்ளுங்கள்! (தொடரும்)

vikatan
30 மார்.
3 min read
"திமுக ஆட்சியில் தரமற்ற லேப்டாப் வழங்கப்பட்டது பற்றி விசாரணை கமிஷன் அமைப்போம்" - இபிஎஸ்
இந்தியா

"திமுக ஆட்சியில் தரமற்ற லேப்டாப் வழங்கப்பட்டது பற்றி விசாரணை கமிஷன் அமைப்போம்" - இபிஎஸ்

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தளவாய் சுந்தரம், கிள்ளியூர் த.மா.க வேட்பாளர் நிவின் சைமன் மற்றும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆரல்வாய்மொழி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வேளாண்மை, அடுத்தது மீன்பிடித் தொழில், பிறகு ரப்பர் தோட்டம் - இந்த மூன்றும்தான் மையமாக வைத்து இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நானும் ஒரு விவசாயியாக இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றேன். ​விவசாயம் என்பது கடினமான பணி. மீன்பிடித் தொழில் சாதாரண தொழில் அல்ல. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து வீடு திரும்பினால்தான் அவர் நிச்சயம். அப்படிப்பட்ட ஆபத்தான மீன்பிடித் தொழில் ஈடுபட்டிருக்கின்ற மீனவர் நண்பர்கள், அவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை அ.தி.மு க ஆட்சியில் நிறைவேற்றிருக்கிறோம். இந்தப் பகுதியிலே ரப்பர் தோட்டம் அதிகமாக இருக்கின்றது. அதன் மூலமாக விவசாயப் பெருங்குடி மக்கள் அதைப் பயிரிட்டு இன்றைக்கு அதிலே வாழ்வாதாரம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்தத் தொழிலும் சிறக்க அ.தி.மு.க ஆட்சி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2017-ஆம் ஆண்டு இந்த மாவட்டத்திலே ஒகி புயல் தாக்கியது. உடனடியாக அந்தப் பாதிப்புள்ளான பகுதிகளை நாங்கள் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அந்தப் பாதிப்புக்குள்ளானவர்கள், மீனவ சமுதாயத்தில் இறந்த குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணமா கொடுத்தோம். சில பேர் காணாமல் போனார்கள், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு 18 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டு அதற்கான நடவடிக்கை எடுத்தோம். 31,000 மீனவர்கள் வாழ்வாதார நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2,500 ரூபாய் வழங்கினோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலக்கட்டத்தில்தான் கச்சத்தீவைத் தாரைவார்த்தது தி.மு.க அரசு. எடபாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சிதமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருந்தாலும் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து அதிகமாக உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. அ.தி.மு.க ஆட்சியில் இரண்டு இடங்களிலே அரசு கலை கல்லூரியைக் கொடுத்தோம். 2011 முதல் 2021 வரை 10 ஆண்டில் தமிழ்நாட்டில் 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் கொடுத்தோம். 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகளைக் கொடுத்தோம். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில்கூட நான்கு ஆண்டுகளில் ஆறு சட்டக் கல்லூரிகளைக் கொடுத்து நம்முடைய ஏழைக் குடும்பத்திலே மாணவ மாணவியர்கள் சட்டம் பயிலக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்தது அ.தி.மு.க அரசு. ​பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவுபூர்வமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயலலிதா இருக்கின்ற பொழுது அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தோம். ஆனால் தி.மு.க அரசு வந்ததும் நிறுத்தப்பட்டது. ​இன்றைக்கு மக்களின் செல்வாக்கு இழந்த காரணத்தினால் அவசர அவசரமாகக் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த லேப்டாப் தரமற்ற லேப்டாப் ஆக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அ.தி.மு.க ஆட்சிக்கு வருகின்ற பொழுது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இதில் ஊழல் நடைபெற்றிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.பி.டி.ஆருடன் மோதும் சுந்தர்.சி! - மதுரை மத்தி தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளரானது எப்படி?கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்காக அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தோம். அதை இந்த ஆட்சியில் முடக்கிவிட்டார்கள். எங்கள் ஆட்சி வந்ததும் மீண்டும் அதே பகுதிகளில் அம்மா மினி கிளினிக் துவங்கப்படும்.​ இந்த ஆட்சியில் ஊழல் மட்டும் நிறைந்து இருக்கிறது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் மூன்றும் தெளிவாகச் செய்கிறார்கள். இந்த ஐந்து ஆண்டு காலம் செய்த சாதனை இதுதான். ஸ்டாலின் எப்படியாவது உதயநிதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்பதற்குத்தான் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார். ​இது என்ன அரச பரம்பரையா? கருணாநிதி, ஸ்டாலின் பிறகு உதயநிதி. அரச பரம்பரையில்தான் அதற்குப்பிறகு இளவரசர் வந்துகொண்டு இருப்பார்கள். அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இனி தமிழகத்தை ஆளக்கூடியவர் இங்கிருக்கின்ற சாதாரண மக்களில் ஒருவராகத்தான் இந்த நாட்டை ஆள வேண்டும். அப்பொழுதுதான் நாட்டு மக்களுடைய எண்ணங்கள் நிறைவேறும்.ஆரல்வாய்மொழியில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமிமீன்பிடித் தடைக்காலத்தில் 8,000 ரூபாய் கொடுப்பதை, 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஏதாவது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காப்பீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்தப் பிரீமியத்தை அரசாங்கமே செலுத்தும். கடலில் பாதிப்புக்குள்ளாகின்ற மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் மீட்பதற்கு மீனவர் மீட்புக்குழு மற்றும் இழுவை படகு வசதி ஏற்படுத்தப்படும். கடற்கரை மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகங்கள் அதோடு அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்படும் மீன்பிடி துறைமுகங்கள் அனைத்து வசதிகளும் உள்ளடக்கி அமைக்கப்படும். ஆங்காங்கே தூண்டில் வளைவுகள் ஏற்படுத்தப்படும். கடல் அரிப்பைத் தடுப்பதற்குத் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு மாதம் மாதம் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 500 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். மீனவ மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்படும். மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கின்ற பொழுது அவர்களுக்குச் சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு மையம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். தி.மு.க ஆட்சியில் மக்கள் படுகின்ற துன்பத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக, விலைவாசியை உயர்த்தி வதைக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் மக்கள் படுகின்ற துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் அ.தி.மு.க ஆட்சி வந்தவுடனே வழங்கப்படும்" என்றார்.அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள்: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு சென்னை தொகுதி; இபிஎஸ் அறிவிப்பு

vikatan
30 மார்.
3 min read
கொளத்தூர்: "அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!"- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை
இந்தியா

கொளத்தூர்: "அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!"- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பேசிய அவர், " தமிழகம் இந்த நிலைமைக்கு செல்ல திமுக தான் காரணம். திமுக ஆட்சி விரைவில் விடைபெறப்போகிறது. பெண்கள் பாதுகாப்பு இல்லாத, போதைப்பொருள் அதிகமாக உள்ள இந்த அவலத்துக்கு திமுகவே காரணம். தவெக விஜய்சோறு, தண்ணீர் கூட இல்லாமல் இருந்து விடலாம். அடிப்படை வசதி இல்லாமல் எப்படி இருக்க முடியும்? அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன், தீய சக்தி திமுக அரசில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்களா? ஏப்ரல் 23 ஆம் தேதி காலையில் எழுந்து கிளம்பி உங்கள் ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு பூத்திற்குச் சென்று தயவு செய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். நம்பிக்கையாக இருங்கள்" என்று பேசியிருக்கிறார்.TVK : பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்; பிரசாரத்தைத் தொடங்கிய விஜய்! | Spot Clicks

vikatan
30 மார்.
3 min read
`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவா?' - தவெக கேள்வி
இந்தியா

`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவா?' - தவெக கேள்வி

கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார்."தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா?முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா?திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா?அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா?பிரசாரத்தில் விஜய்"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை.தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது.திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்?ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் கொளத்தூர் தொகுதி பிரசாரத்திற்கு, கடுமையாகப் போராடி, அதிகாரிகளிடம் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகே மைக், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி பெறுவதுதான் முறையா?ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".புகார் கடிதம்தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா?முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா?திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன்…— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) March 30, 2026

vikatan
30 மார்.
3 min read
'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்
இந்தியா

'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்

தவெக தலைவர் விஜய் பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பெரம்பூர் தொகுதியில் விஜய் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.விஜய்தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது. அரசு விடுமுறைகளையெல்லாம் தவிர்த்து 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.இதனால் வேட்புமனு தாக்கலுக்கான முதல் நாளான இன்றே பலரும் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் இன்று கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும் அவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.விஜய்பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், நேராக தனது தொகுதியிலிருந்தே பிரசாரத்தை தொடங்குகிறார்.பெரம்பூர் விவேகானந்தர் சாலை, கொளத்தூர், வில்லிவாக்கம் என மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா, நாதக சார்பில் வெற்றி தமிழன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

vikatan
30 மார்.
3 min read
`தூக்கு தண்டனையா... ஆயுள் தண்டனையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்
இந்தியா

`தூக்கு தண்டனையா... ஆயுள் தண்டனையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு, நீதிபதி முத்துகுமரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 23 ஆம் தேதி 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தெரிவித்ததோடு, அவர்களின் மனநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, தீர்ப்பு விவரங்கள் மார்ச் 30-ம் தேதி வெளியாகும் எனக் கூறியிருந்தார்.இந்நிலையில் இன்று மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி, "மத்திய, மாநில அரசின் அறிக்கை என்ன ஆனது. சாத்தன்குளம் வழக்கு மிக முக்கியமானது. எந்தக் கருத்தாக இருந்தாலும் பதில் மனுவாகப் பதிவுசெய்யுங்கள். சாத்தன்குளம் வழக்கு மிக முக்கியமானது" என்றார்.சாத்தன்குளம் வழக்குஅதற்கு, '2 நாள்கள் அவகாசம் கொடுங்கள்' - சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.இதைக் கேட்ட நீதிபதி காட்டமான தொனியில், ``கடந்த 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யக் கூறியும், ஏன் அறிக்கை தாக்கல் செய்யபடவில்லை. 9 பேருக்கு தூக்குத் தண்டனையா ஆயுள் தண்டனையா என நான் முடிவெடுக்க வேண்டும்... அதற்காகவே அறிக்கை கேட்கிறேன். என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அறிக்கை கேட்கிறேன்" எனச் சொன்னதோடு, வழக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து சாத்தன்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒன்பது குற்றவாளிகளும் நீதிபதி முன் ஆஜரானார்கள். மாலை 4.30 மணிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

vikatan
30 மார்.
3 min read