தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

india

49 கட்டுரைகள் india இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழப்பு
இந்தியா

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் என்​க​வுன்ட்​டரில் 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர். சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் நடமாட்​டம் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில், வனப்​பகு​தி​யில் பாது​காப்​புப் படை​யினர் நேற்று தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர்.

feedburner
21 நவ.
3 min read
கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு
இந்தியா

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை: சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்​தம் 90 ஆயிரம் பக்​தர்​கள் தின​மும் அனு​ம​திக்​கப்​படு​வர் என்று தேவசம் போர்டு தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஸ்பாட் புக்​கிங்​கில் கட்​டுப்​பாடின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இதனால் நெரிசல் ஏற்​பட்டு பம்​பை, மரக்​கூடம் உள்​ளிட்ட பல பகு​தி​களி​லும் பக்​தர்​கள் வெகுநேரம் நிறுத்தி வைக்​கப்​பட்டு பின்பு அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். 6 மணி நேரத்​துக்​கும் மேல் காத்​திருக்​கும் நிலை ஏற்​படு​கிறது. அது​வரை குடிநீர், கழிப்​பிட வசதி இல்​லாத​தால் பக்​தர்​கள் பெரும் பரித​விப்​புக்கு உள்​ளாகி வரு​கின்​றனர். இத்​துடன் கடும் நெரிசலும் ஏற்​படு​வ​தால் பலருக்​கும் மூச்​சுத்​திணறல் ஏற்​பட்டு வரு​கிறது.

feedburner
21 நவ.
3 min read
அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்
இந்தியா

அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரி​யா​னாவைச் சேர்ந்த அல் பலா பல்​கலைக்கழகம் மீது மோசடி மற்​றும் போலி ஆவணங்​கள் தயாரித்​தல் தொடர்​பாக குற்​றப்​பிரிவு போலீ​ஸார் ஏற்​கெனவே இரண்டு எப்​ஐஆர்​களை பதிவு செய்​துள்​ளனர். இந்த நிலை​யில், தீவிர​வாத தாக்​குதலில் ஈடு​பட முயன்ற மருத்​து​வர்​களுக்​கும், அப்​பல்​கலைக்​கழகத்​துக்​கும் இடையே​யான தொடர்பு குறித்து விசா​ரிக்​கப்பட வேண்​டி​யுள்​ளது. இதன் காரண​மாக டெல்லி போலீ​ஸார் வேந்தர் ஜவாத் அகமதுக்கு சம்​மன் அனுப்​பி​யுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

feedburner
21 நவ.
3 min read
வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்தியா

வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக கடந்த அக்​டோபர் 6-ம் தேதி தலைமை தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​தது. ஆனால், தேர்​தல் முடிந்த பிறகு மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை 7.45 கோடி என்று ஆணை​யம் கூறியது.

feedburner
21 நவ.
3 min read
பிஹாரில் குடும்பம், ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு மகள் வெளியேறியதற்கு காரணமான ரமேஸ், சஞ்சய்
இந்தியா

பிஹாரில் குடும்பம், ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு மகள் வெளியேறியதற்கு காரணமான ரமேஸ், சஞ்சய்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) நிறு​வனர் லாலு​ மகள் ரோஹிணி ஆச்​சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார். இதற்கு சகோ​தரன் தேஜஸ்​வி​யின் நெருங்​கிய நண்​பர்​கள் ரமீஸ் நிமத் மற்​றும் சஞ்​சய் யாதவ்​தான் காரணம் என்​றும் குற்​றம்சாட்டி உள்​ளார். ஆர்​ஜேடி.​யில் அந்​தளவுக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ரமீஸ், சஞ்​சய் ஆகியோர் யார்? கடந்த 2 ஆண்​டு​களாக தேஜஸ்​வி​யின் அரசி​யல் குழு​வில் ரமீஸ் நிமத், சஞ்​சய் யாதவ் ஆகியோர் முக்​கிய​மானவர்​களாக உள்​ளனர். உ.பி. பல்​ராம்​பூரைச் சேர்ந்​தவர் ரமீஸ். இவரது தந்தை நியாமத்​துல்லா கான். பல்​ராம்​பூர் தொகுதி சமாஜ்​வாதி முன்​னாள் எம்​.பி. ரிஸ்​வான் ஜாகீரின் மரு​மகன் ரமீஸ். ரிஸ்​வான் மூலம் அரசி​யல் அனுபவம் பெற்ற ரமீஸுக்கு தேஜஸ்வி நட்பு கிடைத்​தது. தேஜஸ்வி விளை​யாடி வந்த கிரிக்​கெட் கிளப்​பில் ரமீஸும் இருந்​தார். அதனால் இரு​வருக்​குள் நட்பு உரு​வானது. அதன்​பின் அரசி​யல் களத்தை ஏற்​படுத்தி கொண்​டார் ரமீஸ்.

feedburner
21 நவ.
3 min read
‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே
இந்தியா

‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேர்தலுக்கு முன்னதாக, ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என பிரசாந்த கிஷோர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தேர்தலுக்கு முன்பாக முதல்வரின் பெண்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 60,000 பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக 1.5 கோடி பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டது. மேலும், ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் ஜேடியு அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இல்லாவிட்டால், 25 தொகுதிகளுக்கு மேல் அது வெற்றி பெற்றிருக்காது.” என தெரிவித்தார்.

feedburner
21 நவ.
3 min read
டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி
இந்தியா

டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும் இந்த சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை நிகழ்த்தினார். இந்த வெடி விபத்து குறித்து முதலில் டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்ஐஏ, 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

feedburner
21 நவ.
3 min read
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு ஏன்? - வருவாய்த் துறை சங்கங்கள் விவரிப்பு
இந்தியா

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு ஏன்? - வருவாய்த் துறை சங்கங்கள் விவரிப்பு

சென்னை: தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அளவுக்கு அதிகமான பணி நெருக்கடி காரணமாக இதுதொடர்பான அனைத்து பணிகளையும் நாளை (நவ.18) முதல் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது.

feedburner
21 நவ.
3 min read
‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ - கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு
இந்தியா

‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ - கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு

பெங்களூரு: மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்றார். மேலும், இது மாநிலத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்றும் கூறினார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவகுமார், “மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. இதற்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இதே விஷயம் தொடர்பாக நாளையும் ஒரு கூட்டம் உள்ளது. எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

feedburner
21 நவ.
3 min read