தமிழ் டைம்ஸ் logo
கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு
21 நவம்பர், 2025
feedburner
இந்தியா

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை: சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்​தம் 90 ஆயிரம் பக்​தர்​கள் தின​மும் அனு​ம​திக்​கப்​படு​வர் என்று தேவசம் போர்டு தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஸ்பாட் புக்​கிங்​கில் கட்​டுப்​பாடின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இதனால் நெரிசல் ஏற்​பட்டு பம்​பை, மரக்​கூடம் உள்​ளிட்ட பல பகு​தி​களி​லும் பக்​தர்​கள் வெகுநேரம் நிறுத்தி வைக்​கப்​பட்டு பின்பு அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். 6 மணி நேரத்​துக்​கும் மேல் காத்​திருக்​கும் நிலை ஏற்​படு​கிறது. அது​வரை குடிநீர், கழிப்​பிட வசதி இல்​லாத​தால் பக்​தர்​கள் பெரும் பரித​விப்​புக்கு உள்​ளாகி வரு​கின்​றனர். இத்​துடன் கடும் நெரிசலும் ஏற்​படு​வ​தால் பலருக்​கும் மூச்​சுத்​திணறல் ஏற்​பட்டு வரு​கிறது.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.