
குமரியில் ‘மியூக்கோனா’ செடிகளால் அழியும் மரங்கள்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 402.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் உள்ளன. இக்காடுகள் தான் பல்வேறு வற்றா நதிகளின் பிறப்பிடமாக திகழ்கின்றன. வனபரப்புகளை ஆக்கிரமித்துள்ள மியூக்கோனா என்னும் வள்ளிச் செடிகளால் மரங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குமரி மாவட்ட வனப்பகுதியில் அரசு ரப்பர் கழகம் சார்பில் ரப்பர் மரங்கள் பயிரிட்டபோது களைச்செடிகள் வளருவதை தடுக்கும் நோக்கத்தில் வள்ளிச்செடிகள் இறக்குமதி செய்யப்பட்டு நடப்பட்டன. வேகமாக பரவி வளரும் இச்செடிகளால் களைச்செடிகள் கட்டுப்படுத்தப்பட்டன ஆனால் வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்தவன் கதையைப் போல இவை மரங்களிலும் பற்றி படர்ந்து அழித்து வருகின்றன. இதனால் குலசேகரம், கோதையாறு, கொடுத்துறை, மூக்கறைக்கல், மல்லமுத்தன்கரை, கிளவியாறு, தச்சமலை, சிற்றாறு, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் காடுகளை கபளீகரம் செய்த வள்ளிச்செடிகளால் இப்பகுதி வனங்கள் அழியும் நிலைக்கு சென்று விட்டன.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.