தமிழ் டைம்ஸ் logo
‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே
21 நவம்பர், 2025
feedburner
இந்தியா

‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேர்தலுக்கு முன்னதாக, ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என பிரசாந்த கிஷோர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தேர்தலுக்கு முன்பாக முதல்வரின் பெண்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 60,000 பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக 1.5 கோடி பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டது. மேலும், ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் ஜேடியு அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இல்லாவிட்டால், 25 தொகுதிகளுக்கு மேல் அது வெற்றி பெற்றிருக்காது.” என தெரிவித்தார்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.