தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

india

49 கட்டுரைகள் india இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது
இந்தியா

மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது

போபால்: ம.பி.​யில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்​டு​களை அச்​சடித்​தவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மத்​திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்​ளிக்கு அருகே ஒரு​வர் போலி 500 ரூபாய் நோட்​டு​களை புழக்​கத்​தில் விட முயற்​சிப்​ப​தாக கடந்த வெள்​ளிக்​கிழமை போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, பிப்​லானி காவல் நிலை​யத்​தின் குற்​றப் பிரிவு போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்று விவேக் யாதவ் (21) என்​பவரை கைது செய்​தனர்.

feedburner
21 நவ.
3 min read
பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம்
இந்தியா

பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம்

பிஹார் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் உள்ள பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1,800-ஆக உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி வெளியான பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில், 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து பிஹாரில் மீண்டும் தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கைய உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மாள்வியா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

feedburner
21 நவ.
3 min read
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?
இந்தியா

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் எவரும் எதிர்​பார்க்​காத வகை​யில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்​டணி 35 மட்​டுமே பெற்​றுள்​ளது. இக்​கூட்​ட​ணி​யின் வாக்​கு​களைப் பிரித்​தது யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் மற்​றும் மாயா​வ​தி​யின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்​பி) ஆகிய மூன்று கட்​சிகளும் இணைந்து மெகா கூட்​ட​ணியின் பெரும்​பான்​மை​யான வாக்​கு​களை பிரித்​துள்​ளது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 238 தொகுதியில் போட்​டி​யிட்​டது. ஒரு தொகு​தி​யில் கூட வெல்ல முடிய​வில்​லை. 98 சதவீத வேட்​பாளர்​கள் வைப்​புத் தொகையை இழந்​துள்​ளனர்.

feedburner
21 நவ.
3 min read
உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்
இந்தியா

உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்

புதுடெல்லி: கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தருணங்களில் புகழ்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில், ஆக்கபூர்வமான பொறுமையின்மை என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். மேலும், காலனித்துவத்துக்குப் பிந்தைய மனநிலையை அவர் வலுவாக குறிப்பிட்டார். இந்தியா இனி வெறும் வளர்ந்து வரும் சந்தை அல்ல, மாறாக உலகிற்கு வளர்ந்து வரும் மாதிரி என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

feedburner
21 நவ.
3 min read
என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு
இந்தியா

என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு

பிஹார்: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது புதிய கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட்டது. மஹுவா சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டார். அவர் உட்பட ஜன சக்தி ஜனதா தளத்தின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். இதுதொடர்பாக பாட்னாவில் உள்ள தேஜ் பிரதாப் யாதவின் வீட்டில் கட்சி தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரேம் யாதவ் கூறும்போது, “தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். பிஹாரில் பதவியேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசுக்கு எங்கள் கட்சி தார்மிக அடிப்படையில் ஆதரவு அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.

feedburner
21 நவ.
3 min read
பிஹாரில் நவ.20 புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு - முதல்வர் யார்?
இந்தியா

பிஹாரில் நவ.20 புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு - முதல்வர் யார்?

பாட்னா: பிஹாரில் புதிய அரசு நவம்பர் 20 ஆம் தேதி பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்க உள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வராக பதவியேற்பாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய அரசு அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய பிரதமர் மோடி, “புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் பதவியேற்புக்கு மீண்டும் வருவேன்.” என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

feedburner
21 நவ.
3 min read
சென்னை ஆவணக் காப்பகத்தில் தமிழக வரலாறு ஆய்வுக்கு மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன்
இந்தியா

சென்னை ஆவணக் காப்பகத்தில் தமிழக வரலாறு ஆய்வுக்கு மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வு செய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலா்ம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமைமிகுந்த தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. “மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ்” என்ற பெயரில் அழைக்கப்பட்ட இக்காப்பகம் 1909 முதல் தற்போதுள்ள ஆவணக் காப்பகக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

feedburner
21 நவ.
3 min read
சவுதி பேருந்து விபத்தில் மதினாவுக்கு பயணித்த 45 இந்தியர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
இந்தியா

சவுதி பேருந்து விபத்தில் மதினாவுக்கு பயணித்த 45 இந்தியர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது இவர்கள் பயணம் செய்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை வெளிட்டுள்ளார்.

feedburner
21 நவ.
3 min read
ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்​லி​யில் கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதல் நடந்த நிலை​யில், ஆபரேஷன் சிந்​தூர் வெறும் முன்​னோட்​டம்​தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்​தானுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தானைச் சேர்ந்த ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்பு இருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

feedburner
21 நவ.
3 min read