
21 நவம்பர், 2025
feedburner
இந்தியாமத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது
போபால்: ம.பி.யில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்ளிக்கு அருகே ஒருவர் போலி 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்லானி காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விவேக் யாதவ் (21) என்பவரை கைது செய்தனர்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.