
பிஹாரில் நவ.20 புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு - முதல்வர் யார்?
பாட்னா: பிஹாரில் புதிய அரசு நவம்பர் 20 ஆம் தேதி பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்க உள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வராக பதவியேற்பாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய அரசு அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய பிரதமர் மோடி, “புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் பதவியேற்புக்கு மீண்டும் வருவேன்.” என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.