
உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்
புதுடெல்லி: கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தருணங்களில் புகழ்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில், ஆக்கபூர்வமான பொறுமையின்மை என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். மேலும், காலனித்துவத்துக்குப் பிந்தைய மனநிலையை அவர் வலுவாக குறிப்பிட்டார். இந்தியா இனி வெறும் வளர்ந்து வரும் சந்தை அல்ல, மாறாக உலகிற்கு வளர்ந்து வரும் மாதிரி என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.