
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?
புதுடெல்லி: பிஹாரின் 243 தொகுதிகளில் எவரும் எதிர்பார்க்காத வகையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி 35 மட்டுமே பெற்றுள்ளது. இக்கூட்டணியின் வாக்குகளைப் பிரித்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணியின் பெரும்பான்மையான வாக்குகளை பிரித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 238 தொகுதியில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. 98 சதவீத வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.