
சென்னை ஆவணக் காப்பகத்தில் தமிழக வரலாறு ஆய்வுக்கு மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன்
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வு செய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலா்ம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமைமிகுந்த தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. “மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ்” என்ற பெயரில் அழைக்கப்பட்ட இக்காப்பகம் 1909 முதல் தற்போதுள்ள ஆவணக் காப்பகக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.