
மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் - அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!
ஹைதராபாத்: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 42 இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மெதினாவில் இந்தியர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான நிகழ்வை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ரியாத்தில் உள்ள நமது தூதரகமானது, ஜெட்டா தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு முழு ஆதரவை அளிக்கும். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.