தமிழ் டைம்ஸ் logo
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு
21 நவம்பர், 2025
feedburner
இந்தியா

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு

புதுடெல்லி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “அரசியல் சாசன பிரிவு 243-E, 243-U ஆகியவற்றின் படியும், கேரள பஞ்சாயத்து சட்டம் பிரிவு 94ன் படியும், கேரள நகராட்சி சட்டப்படியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஐந்தாண்டுகளுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த சட்டங்களின்படி, வரும் டிசம்பர் 21, 2025-க்குள் கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.