
‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ - தேஜஸ்வி - ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!
பாட்னா: தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் வென்றது. எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க வேண்டும். பிஹார் சட்டப்பேரவையில் 243 இடங்கள் உள்ள நிலையில், ஆர்ஜேடி சரியாக 25 இடங்களை வென்றதால் எதிர்க்கட்சியாக தேர்வாகியுள்ளது.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.