தமிழ் டைம்ஸ் logo
மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?
21 நவம்பர், 2025
feedburner
இந்தியா

மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?

ஹைதராபாத்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தார், புனித ஹஜ் யாத்திரை செல்ல தீர்மானித்தனர். அதன்படி 4 சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் மொத்தம் 54 பேர், ஹைதராபாத்தில் இருந்து கடந்த 9-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.