தமிழ் டைம்ஸ் logo
விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!
31 ஜூலை, 2026
abplive
உணவு

விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!

தமிழக வெற்றி கழகத்தின் விலை இல்லா விருந்தகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையும் முதலமைச்சர் விஜயின் 52 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் பத்தாயிரம் நபர்களுக்கு பிரியாணி வழங்கிய தவெக தொண்டர் - நெடு வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சென்ற பொதுமக்கள்.   நலத்திட்ட உதவிகள்   தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு சேவைகளை செய்து வந்தார். தற்போது முதல்வர் தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில் அவரது மக்கள் இயக்கத் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மக்கள் இயக்கம் மூலமாக துவங்கப்பட்ட அவரது ரசிகர்களின் சமூக சேவையா பல்வேறு பரிமாணங்களில் மக்களுக்கு சென்றடைந்து கொண்டே இருக்கிறது இந்நிலையில் விலை இல்லா உணவகத்தை நடத்த வேண்டும் என அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்திய நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் அவரது ரசிகர்கள் தினமும் ஏழை எளியவருக்கு உணவு வழங்கி வருகின்றனர்    பத்தாயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி   மதுரை பெரியார் பகுதியை சேர்ந்த தவெக தொண்டர் சந்துரு என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் 300 நபர்களுக்கு மத்திய உணவு இலவசமாக வழங்கி வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் விலை இல்லா விருந்தகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையும் ஜூன் 22 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தனது 52 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ளதை முன்னிட்டு மதுரை பெரியார் பகுதியில் உள்ள நேதாஜி சாலையில் பத்தாயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.   நெடு வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கி உண்டனர்.   விலையில்லா உணவகத்தின் மூலம் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி வாங்குவதற்கு மக்கள் நெடு வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கி உண்டனர். மாநகரின் பிரதான சாலையில் பத்தாயிரம் நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர் ஒருபுறம் வாகனங்கள் செல்ல மறுபுறம் மக்கள் பிரியாணி வாங்கி உண்டு பயனடைந்தனர். விஜயின் சொல்லுக்கு இணங்க தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இலவச உணவு வழங்கி வந்த தவெக தொண்டர் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பத்தாயிரம் நபர்களுக்கு இன்று பிரியாணி வழங்கியது அப்பகுதி பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது.    

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் உணவு செய்திகளை உள்ளடக்கியது.