தமிழ் டைம்ஸ் logo

அனைத்து செய்திகள்

சமீபத்திய செய்திகள் மற்றும் புதுப்பித்தல்களைப் பார்க்கவும்

மொத்தம் 24 செய்திகள் • பக்கம் 1 / 2

ரூ.3.க்கு நாமக்கல் முட்டை.. குறைந்த விலைக்கு முட்டை வாங்கிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி !
உணவு

ரூ.3.க்கு நாமக்கல் முட்டை.. குறைந்த விலைக்கு முட்டை வாங்கிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி !

சிவகங்கையில் அழுகிய முட்டைகள் விற்பனை: குறைந்த விலைக்கு வாங்கிய பொதுமக்கள் வேதனை.   குறைந்த விலையில் நாமக்கல் முட்டை   நாமக்கல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறி, சிவகங்கை நகராட்சியில், பல்வேறு பகுதிகளில் வண்டிகளில் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. ஒரு முட்டை ரூ.3 முதல் ரூ.4 வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடைகளில் ரூ.6 முதல் ரூ.7 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. குறைந்த விலை காரணமாக பொதுமக்கள் 30 முதல் 50 முட்டைகள் வரை வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால், மறுநாள் பயன்படுத்த முயன்றபோது பல முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், துர்நாற்றம் வீசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், சில முட்டைகள் சிறிய அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.   கெட்டுப்போன முட்டை   சிவகங்கை மேலூர் சாலையைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் விக்னேஷ் (30) என்பவர் 30 முட்டைகள் வாங்கியதாகவும், பின்னர் அவற்றை வேகவைத்தபோது கெட்டுப்போனது தெரியவந்ததாகவும் கூறினார். இந்த முட்டைகள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டியவை ஆக இருக்கலாம் என்றும், தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பதை பயன்படுத்தி வெளியில் விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் பொதுமக்களுக்கு ஏன் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும்   மேலும், கடந்த சில நாட்களாக உணவகங்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும், கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனால், முட்டை விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்களில் தீவிர சோதனைகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

abplive
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
உலகம்

America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?

ஈரான் - அமெரிக்கா போர் ஈரான்- இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது அமெரிக்கா, அந்த வகையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கி வருகிறது.  அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை தளங்கள், ராணுவ கட்டமைப்புகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு இலக்குகள் மீது பல்வேறு வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுவந்தது. இதற்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.  மேலும் கச்சா எண்ணெய் விநியோகம், ஹார்முஸ் நீரிணை வழிக் கடல்சார் போக்குவரத்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை குறிவைத்து தாக்கும் அமெரிக்கா போர் விரிவடையாமல் தடுக்க பல நாடுகள் உடனடி போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தையை வலியுறுத்தி வருகின்றன.  ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா தனது முழு பலத்தை கொண்டு ஈரானை தாக்கி வருகிறது. இதில் பல ஆயிரம் பேர் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த  மாதம் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில்  ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தங்களது அனுமதியின்றி சென்ற கப்பலை ஈரான் தாக்கியது. இதனால் மீண்டும் அமெரிக்கா ஈரானை தாக்கி வரும் நிலையில் பல இடங்களில் ராணுவ கட்டமைப்பு அழிக்கப்பட்டது. இந்த பரபரப்பான நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வெள்ளை மாளிகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ரகசிய சந்திப்பை நடத்தினர். நவீன சக்தி வாய்ந்த 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி அப்போது ஈரானுக்கு எதிராக அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை அலற வைக்கும் வகையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் புரட்சிகர ராணுவப்படை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் அதி நவீன சக்தி வாய்ந்த 3 அதி நவீன எப்35 போர் விமானம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல விமானங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக ஈரான் புரட்சிக்கர ராணுவப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க ராணுவம் நேர்மையாக மோதாமல், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணவ தளத்தில் இருந்து ஈரானை தாக்கியதாகவும், இதில் ஈரானின் உள்ள குயிஷம் தீவில் குடியிருப்புகள் மீது விழுந்தலில் ஒரு குழந்தை உயிரிழந்தாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் உயிரிழப்பு இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்டானில்  உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்த படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமெரிக்காவின் எப்35 போர் விமானங்கள் மற்றும் சில விமானங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று எப்35 போர் போர் விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. ஈரான் ஏவிய ஏவுகனையை நடு வழியில் அழித்து விட்டதாக தெரிவித்துள்ளது. எனவே இதில் எந்த வகையில் உண்மையென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை F-35 போர் விமானம் சிறப்பம்சம்.?  அமெரிக்காவின் 5-ஆம் தலைமுறை விமானமான F-35 போர் விமானம், எதிர்களிடம் இருந்து மறைந்து தாக்கும் திறன் கொண்டதாகும். இது உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிகபட்ச வேகமாக மணிக்கு சுமார் 1,930 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாகும். F-35-இன் மிகப்பெரிய பலம் அதன் வேகம் மட்டும் அல்ல. எதிரியை முதலில் கண்டறிந்து, தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து, எதிரி அறியுமுன் தாக்கும் திறன்தான் இதன் முக்கிய வலிமையாகக் கருதப்படுகிறது. F-35A  போர் விமானம், இந்திய ரூபாயில் சுமார் ₹700–800 கோடியாக என கூறப்படுகிறது.

abplive
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
இந்தியா

வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..

இந்தியாவில் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக அந்த வேலையை முடித்து கொள்வது சிறப்பு. நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான (நிதியாண்டு 2025-26) வருமான வரிக் கணக்கை ITR 1 அல்லது ITR 2 ஆகிய படிவங்களை பயன்படுத்தி இன்றிரவு 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த தேதியை நீட்டிப்பதாக எந்த ஒரு பரிசீலனையும் இல்லை என அறிவித்து விட்டது. மேலும் கடைசி நேரத்தில் எத்தனை பேர் ITR  இணையதளத்தை பயன்படுத்தினாலும் இணையதளம் சிரமம் இன்றி செயல்படும் என்றும் விளக்கம் தெரிவித்துள்ளது. சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் இதுவரை கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என வருமான வரி துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் லட்சக்கணக்கான சம்பளதாரர்கள் ஒரே சமயத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முற்படலாம். எனவே இயன்றவரை காலையிலேயே வேலையை முடிப்பது சிறப்பு. வேலைக்கு செல்லும் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி தான் இன்றுடன் முடிகிறது. வணிகம் அல்லது தொழில் வருமானம் ஈட்டும் நபர்கள் மற்றும் தணிக்கை தேவையில்லாத நபர்கள் ITR 3 மற்றும் ITR 4 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கு ஆகஸ்ட் 31 கடைசி நாள். அதே போல கணக்கு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள வணிகம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு அக்டோபர் 31 கடைசி நாள். ஒரு வேளை இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறுபவர்கள், தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இதற்கு அபராதம் விதிக்கப்படும். உங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வருமான வரியை தாக்கல் செய்யலாம். புதிய வரி கணக்கு நடைமுறையில் பல்வேறு வரி சலுகைகள் கிடைக்காது என்றாலும் இதில் வருமான வரி உச்சவரம்பு அதிகம், ஆனால் பழைய வரி முறையில் பல்வேறு முதலீடுகளை குறிப்பிட்டு வரி சேமிப்பு செய்யலாம். உங்களுக்கு எது பொருத்தமானதோ அதனை பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் செய்யும் பெரிய தவறு இறுதியில் e- verification செய்யாமல் விடுவது தான். இதனை செய்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவே அர்த்தம். எனவே e- verification-ஐ மறக்காமல் செய்து விடுவது நல்லது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்து அந்த ஆவணத்தை சேமிக்க வேண்டும். ஏனெனில் வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கும் இதனை ஒரு ஆவணமாக கேட்கப்படும்

abplive
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இந்தியா

PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?

PM Modi: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பு உறுதி செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் 2027 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்றும், அமைப்பின் நிலையான நடைமுறைகளுக்கு இணங்கி அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர், இந்தியா உட்பட அனைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அரசாங்கத் தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்தார். அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பிதழ்களை அனுப்புவது மாநாட்டை நடத்தும் நாட்டின் கடமை என்றும், அது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நிறுவப்பட்ட நெறிமுறையின்படி மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பாகிஸ்தான் செல்கிறாரா பிரதமர் மோடி? உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்குவது என்பது, தலைமையேற்கும் நாட்டின் ஒரு கடமையாகும். இது நிறுவப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நெறிமுறையின்படி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) சுழற்சிமுறைத் தலைமை மற்றும் நடத்தும் ஏற்பாடுகளின் கீழ், 2027-ஆம் ஆண்டுக்கான உச்சிமாநாட்டை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. இந்த உச்சிமாநாடு, பிராந்தியப் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிற மூலோபாயப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும், அந்த அமைப்பின் மிக முக்கியமான வருடாந்திரக் கூட்டங்களில் ஒன்றாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முழு உறுப்பினராக இருப்பதால், அந்நிறுவனம் பின்பற்றும் வழக்கமான ராஜதந்திர செயல்முறையின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையேற்று பிரதமர் மோடி பங்கேற்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் உடனான இந்தியாவின் உறவு என்பது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெய்சங்கருடன் ஆலோசனை? இதனிடையே, மணிலாவில் நடைபெறும் ஆசியான் கூட்டங்களின் இடையே, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கும் இடையே சந்திப்பு நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அத்தகைய சந்திப்புக்காக இந்தியா தரப்பில் எந்தக் கோரிக்கையும் வந்ததாக இஸ்லாமாபாத்துக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் பதிலளித்துள்ளார். பிராந்தியக் கூட்டத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதையும் படியுங்கள்: Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகள் உள்ளன. பிராந்தியம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்த அமைப்பு 2001 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி பீஜிங்கில் நிறுவப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மேலும் இதனை நடத்தும் நாடு, அந்த அமைப்பால் ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்புக்கு ஏற்ப உறுப்பு நாடுகளிடையே சுழற்சி முறையில் அமைகிறது.  

abplive
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
கல்வி

புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவப் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிப்பது தொடர்பாக, தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுடன் நடத்தப்பட்ட இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டைக் காட்டிலும் 43 எம்.பி.பி.எஸ். (MBBS) இடங்கள் கூடுதலாகப் பெறப்பட்டு, இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களின் மொத்த எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாள் கோரிக்கையும் பின்னணியும் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தவிர்த்து, பிம்ஸ் (PIMS), ஸ்ரீ மணக்குள விநாயகர் மற்றும் வெங்கடேஸ்வரா ஆகிய 3 முன்னணித் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் அதிகப்படியான இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெற வேண்டும் என்பது அம்மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனிடையே, கடந்த ஜூலை 24-ஆம் தேதி தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முதலமைச்சர் என். ரங்கசாமி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெறுவதற்குத் தேவையான சட்ட வரைவை (Bill) உடனடியாகத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடு சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க முன்வந்ததை அடுத்து பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது. கூடுதல் இடங்கள் மற்றும் கல்லூரி வாரியான விவரம் தனியார் கல்லூரிகள் அளித்துள்ள இடங்கள்:கடந்த கல்வியாண்டில் (2025-26) தனியார் மருத்துவக் கல்லூரிகள் 255 இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கியிருந்தன. ஆனால், நடப்பு கல்வியாண்டில் 3 தனியார் கல்லூரிகளும் சேர்த்து 298 இடங்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம் தனியார் கல்லூரிகளிடம் இருந்து மட்டும் 43 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. கல்லூரி வாரியான பிரிப்பு: பிம்ஸ் (PIMS): இக்கல்லூரி நடப்பு ஆண்டில் தனது மொத்த இடங்களின் எண்ணிக்கையை 150-லிருந்து 250 ஆக உயர்த்தியுள்ளது. இதனால், நீதிமன்ற உத்தரவு தொடர்பான 13 அபராத இடங்கள் உட்பட மொத்தம் 108 இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. மணக்குள விநாயகர் கல்லூரி: கடந்த ஆண்டு வழங்கிய 93 இடங்களில் இருந்து உயர்த்தி, இந்த ஆண்டு 95 இடங்களை வழங்குகிறது. வெங்கடேஸ்வரா கல்லூரி: கடந்த ஆண்டு 92 இடங்கள் வழங்கிய நிலையில், இந்த ஆண்டு 95 இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கியுள்ளது. மொத்த இடங்கள் 429 ஆக உயர்வு தனியார் கல்லூரிகள் அளித்துள்ள 298 இடங்களுடன், புதுச்சேரி அரசின் சொந்த நிறுவனமான 'இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்' 131 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம், நடப்பு ஆண்டில் 'சென்டாக்' (CENTAC) கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 386-லிருந்து 429 ஆக கணிசமாக உயர்ந்துள்ளது. தனியார் கல்லூரிகளுடனான ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்துள்ளதால், சென்டாக் சார்பில் மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்ப அறிவிப்பு மற்றும் கலந்தாய்வு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக முடுக்கவிட்டுள்ளன.

abplive
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
கல்வி

மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை த.வெ.க. அரசு கோட்டை விட்டுவிட்டதாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனக் குரலை எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் நிரப்பப்படாத 151 உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ இடங்களை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இந்த விவகாரத்தில், தவெக அரசு மீது அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன இதுகுறித்து இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்ச நீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்! தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை? மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்? நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன? அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா? தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?  29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?  இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர் சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினை இது. த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!’’ என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

abplive
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
கல்வி

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!

புகழ்பெற்ற ஐஐடி கான்பூர் கல்வி நிறுவனத்தில் தமக்குச் சேர்க்கை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்திலும் விரக்தியிலும், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையே மாணவர் ஒருவர் ஹேக் செய்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்த மாணவரின் தொழில்நுட்பத் திறமையைக் கண்டு வியந்த ஐஐடி கான்பூர் நிர்வாகம், அவர் மீது கடுமையான காவல் துறை நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, அவருக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது. இந்தச் சம்பவம் கல்வியாளர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. கிடைக்காத சேர்க்கை வாய்ப்பு பொறியியல் படிப்பில் சேர விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுக் கல்வி நிறுவனமாக ஐஐடி கான்பூர் திகழ்கிறது. அந்த வகையில், நுழைவுத்தேர்வில் பங்கேற்ற மாணவர் ஒருவருக்கு அங்கு படிப்பதற்கான சேர்க்கை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளான அந்த மாணவர், தனது கணினித் திறனைப் பயன்படுத்தி ஐஐடி கான்பூர் இணையதளத்தின் அதிநவீனப் பாதுகாப்பு வளையங்களை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த ஐஐடி கான்பூர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள், உடனடியாகச் செயல்பட்டு இணையதளத்தை மீட்டனர். பின்னர், சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் ஹேக் செய்த நபரின் ஐபி முகவரியைக் கண்டறிந்து, அவர் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் இருந்த ஒரு மாணவர் என்பதை உறுதி செய்தனர். மனிதாபிமான அணுகுமுறை பொதுவாக இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், ஐஐடி கான்பூர் நிர்வாகம் இந்த விவகாரத்தில் சற்று வித்தியாசமான, மனிதாபிமான அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. அந்த மாணவர் செய்த செயல் சட்டப்படி குற்றமாக இருந்தாலும், அவர் பயன்படுத்திய ஹேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் அவரது அபாரமான கணினி அறிவைக் கண்டு நிர்வாகத்தினர் ஆச்சரியமடைந்தனர். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனத்தின் இணையதளத்தையே ஹேக் செய்யும் அளவுக்குத் திறமை வாய்ந்த ஒரு மாணவரின் எதிர்காலத்தை, ஒரு வழக்கின் மூலம் இருட்டுக்குள் தள்ள நிர்வாகம் விரும்பவில்லை. எத்திக்கல் ஹேக்கர் எனவே, அவரை நேரில் அழைத்து அறிவுரை வழங்கவும், அவரது அசாத்தியமான சைபர் பாதுகாப்புத் திறனை நல்வழியில் பயன்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் ஐஐடி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. தவறான வழியில் சென்ற அந்த மாணவரின் திறமையை அங்கீகரித்து, அவரை ஒரு சிறந்த எத்திக்கல் ஹேக்கராக மாற்றுவதற்கான பயிற்சிகளையோ அல்லது வேறு வகையிலான வாய்ப்புகளையோ வழங்கி, அவருக்கு இரண்டாவது வாய்ப்பளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தண்டனைக்கு பதிலாகத் திருந்துவதற்கான வாய்ப்பை வழங்கும் ஐஐடி கான்பூர் நிர்வாகத்தின் இந்த முற்போக்கான முடிவு, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மாணவரின் எதிர்கால நலன் கருதி அவரது அடையாளம் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது.

abplive
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
கல்வி

Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!

2026-2027 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தைக் கடந்து 4,23,955 ஆக உள்ளது என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 4,23,955 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2026-2027 ஆம் கல்வியாண்டில், குறிப்பாக தொடக்க கல்வித் துறையில்  1 ஆம் வகுப்பு - 2,94,209 2 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை - 88,515 ஆக மொத்தம்- 4,23,955 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கோடை விடுமுறைக்கு முன்பாகவே மார்ச் மாதத்தில் தொடங்கிய மாணவர் சேர்க்கை முகாம், பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று நடத்திய விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. எந்தெந்த வகுப்பில் எவ்வளவு? பள்ளிக் கல்வித்துறை தரவுகளின் அடிப்படையில், தொடக்கக் கல்வியான ஒன்றாம் வகுப்பில்தான் பெற்றோர்கள் அதிக அளவில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு: அதிகபட்சமாக சுமார் 2 லட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 2 முதல் 8ஆம் வகுப்பு வரை: தொடக்கக் கல்வி முதல் நடுநிலைக் கல்வியான 8ஆம் வகுப்பு வரை 88,000-க்கும் அதிகமான மாணவர்கள் இணைந்துள்ளனர். பிற வகுப்புகள்: மீதமுள்ள சேர்க்கையானது எல்.கே.ஜி, யு.கே.ஜி (அங்கன்வாடி இணைந்த பள்ளிகளில்), வகுப்புகளைப் பொறுத்தவரை 41,231 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  காரணம் என்ன? கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்குத் தமிழக அரசின் திட்டங்களே முக்கியக் காரணம் எனலாம். குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், உயர் கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள், தொழில்முறை மற்றும் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்றவை ஏழை, நடுத்தரப் பெற்றோர்களை அரசுப் பள்ளிகள் பக்கம் ஈர்த்துள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

abplive
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
கட்டுவிரியன் பாம்பால் தவெக நிர்வாகி இறந்தாரே! பாம்பை கண்டால் படையே நடுங்குவது ஏன்? டாக்டர் விளக்கம்
சுகாதாரம்
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடக்கப்போகும் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!
வானிலை

சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடக்கப்போகும் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

Chennai Weather Update: Despite the onset of the Southwest Monsoon, the intensity of the heat in Tamil Nadu has not yet subsided. Against this backdrop, the Meteorological Department has announced a possibility of rain in Chennai tomorrow during the evening and night hours.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
ஆடி மாதம்.. அம்மிக்கல்லை பறக்கவிடும் காற்று.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்! உஷார் மக்களே!
வானிலை

ஆடி மாதம்.. அம்மிக்கல்லை பறக்கவிடும் காற்று.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்! உஷார் மக்களே!

Tamil Nadu Weather Alert: Unlike last year, the monsoon in Tamil Nadu has not been intense this year; nevertheless, rainfall has been heavy in a few areas. Against this backdrop, the Chennai Regional Meteorological Centre has issued a warning of rain accompanied by strong winds, thunder, and lightning today.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
இன்று நள்ளிரவு 1 மணி வரை.. 6 மாவட்டங்களில் மழை பிரிச்சு எடுக்கப்போகுது.. வானிலை மையம் அலர்ட்!
வானிலை

இன்று நள்ளிரவு 1 மணி வரை.. 6 மாவட்டங்களில் மழை பிரிச்சு எடுக்கப்போகுது.. வானிலை மையம் அலர்ட்!

Chennai Meteorological Department has stated that rain is likely in six districts of Tamil Nadu until 1 AM tonight. Accordingly, rainfall is expected in the districts of Chennai, Thiruvallur, Chengalpattu, Kancheepuram, Coimbatore, and Nilgiris.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
உலகம்

US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை

அமெரிக்கா தொடர்ந்து மூன்று இரவுகளாக ஈரான் மீது எந்த புதிய தாக்குதல்களையும் நடத்தவில்லை. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முழுமையாகத் தணியவில்லை. ராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு திறந்தே உள்ளது என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கா மீண்டும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் வெள்ளை மாளிகை கூறியதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, நேரடி ராணுவத் தாக்குதல்களுக்கு மாற்றாக வாஷிங்டன் தற்போது மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறது. இவற்றுள், ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், அதிகரித்த பொருளாதார அழுத்தம் மற்றும் கடல்வழி முற்றுகை ஆகியவை அடங்கும். ஊடக அறிக்கைகளின்படி, இந்த கடல்வழி முற்றுகையால், ஈரானுக்கு ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, அதன் பொருளாதாரம் மீது கூடுதல் அழுத்தமும் உண்டாகிறது. ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை இஸ்ரேலும் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது. இஸ்ரேல் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இந்த அறிக்கை, அப்பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, உக்ரைன் தொடர்பாக ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. காஸ்பியன் கடலில் ஈரானிய ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல்களைத் தாக்கியதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்தக் கூற்று பிராந்திய பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மத்திய கிழக்கில் நிலைமை பதற்றமாக உள்ளது அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்கு இடையேயான நிலைமை மிகவும் பதற்றமானதாகவே உள்ளது. தற்போது பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை எதுவும் இல்லை என்றாலும், எந்தவொரு புதிய சம்பவமும் நிலைமையை விரைவாக மாற்றிவிடக்கூடும். இதன் விளைவாக, அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் மற்றும் உக்ரைன் சம்பந்தப்பட்ட அடுத்தகட்ட நிகழ்வுகள் மீது உலகின் கவனம் குவிந்துள்ளது. முன்னதாக, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் ஒரு முக்கிய காரணம், அமெரிக்காவிடம் ஏவுகணை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுதான் என கூறப்பட்டது. அத்தகைய சூழலில் தான் அமெரிக்கா தாக்குதலை நிறுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தாக்குதல் நடத்த அமெரிக்கா முழுமையாக தயாராக உள்ளதாகவும், ஆனால், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதே மிகவும் விவேகமான பாதையாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். மேலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், காலம் செல்லச் செல்ல ஈரான் பேச்சுவார்த்தைகளில் அதிக தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் நம்புவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.    

abplive
ஜூலை 30
3 நிமிடம் படிக்க
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
இந்தியா

ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!

ரயிலின் பொதுப்பெட்டிகள் எப்போதும் இன்ஜினுக்குப் பின்னாலோ அல்லது ரயிலின் பின்புறத்திலோ, காவலர் அறைக்கு அருகில் வைக்கப்படுகின்றன. ஆனால், அவை ஏன் ரயிலின் நடுவில் வைக்கப்படுவதில்லை என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? இதற்கான காரணத்தை இப்போது தெரிந்துகொள்ளலாம். இன்றும், நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பயணத்திற்காக ரயில்களையே சார்ந்துள்ளனர். சிலர் தினமும் வேலைக்குச் செல்ல ரயிலைப் பயன்படுத்தும் அதே வேளையில், மேலும் சிலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலையே தேர்ந்தெடுக்கின்றனர். ரயில் பயணத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், இந்திய ரயில்வே கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. நீங்கள் பலமுறை ரயிலில் பயணம் செய்திருந்தால், ரயில்களைப் பற்றி பல விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது நீங்கள் கவனித்திராத ஒரு சுவாரஸ்யமான தகவலை இப்போது தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு இரயிலிலும் பொதுப் பெட்டிகள் உள்ளன, அவை மற்ற பெட்டிகளை விட அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. விரைவு ரயில்களில் பொதுவாக 4 முதல் 6 பொதுப் பெட்டிகள் இருக்கும். இந்தப் பெட்டிகள் எப்போதும் இன்ஜினுக்குப் பின்னாலோ அல்லது ரயிலின் பின்புறத்திலோ, காவலர் அறைக்கு அருகில் வைக்கப்படுகின்றன. ஆனால், அவை ஏன் ரயிலின் நடுவில் வைக்கப்படுவதில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? இதற்கான காரணத்தை இப்போது தெரிந்துகொள்ளலாம்.ரயிலின் நடுவில் பொதுப் பெட்டிகளை அமைக்காமல், முன்புறத்திலும் பின்புறத்திலும் மட்டும் அமைப்பதற்கான முக்கிய காரணம், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதே ஆகும். பொதுப் பெட்டிகள் கணிசமான எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அவற்றை ரயிலின் நடுவில் அமைத்தால், மக்கள் நடைமேடையின் நடுவில் கூடிவிடுவார்கள். பொதுப் பெட்டிகள் ரயிலின் நடுவில் வைக்கப்பட்டால், பயணிகள் ஏறுவதும் இறங்குவதும் சிரமமாகும், மேலும் அது மற்ற பயணிகளின் நடமாட்டத்தையும் பாதிக்கும். பிரதான நுழைவாயில் நடைமேடையின் நடுவில் உள்ள நிலையங்களில் இந்த நிலைமை குறிப்பாகச் சிரமமாக இருக்கும். தற்காலத்தில், பெரும்பாலான பெட்டிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன, ஆனால் பொதுப் பெட்டிகள் பெரும்பாலும் இந்த அமைப்பிலிருந்து தனியாக உள்ளன. இவற்றை நடுவில் வைத்தால், மீதமுள்ள பெட்டிகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.அனைத்துப் பெட்டிகளையும் அவர்களால் எளிதில் அணுக முடியாததால், இது உணவுப் பெட்டி மற்றும் ஊழியர்களின் நடமாட்டத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இந்தக் காரணத்திற்காக, பயணிகளின் வசதியையும் ஒழுங்கையும் பேணுவதற்காக, பொதுப் பெட்டிகள் ரயிலின் முன்புறமும் பின்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.

abplive
ஜூலை 30
3 நிமிடம் படிக்க
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
இந்தியா

Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!

நீட் முறைகேடு தொடர்பாக டெல்லியில்  கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடந்த போராட்டத்தை நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.  இந்தியாவை அலற வைத்த போராட்டம் டெல்லியில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து நாடு முழுவதும் பரவியது. இளம் தலைமுறையினர் தொடங்கி பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் போன்றவை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியது. போராட்டத்தின் தொடர் அழுத்தம் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.  அதுமட்டுமல்லாமல் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசு கடுமையான சட்டம் இயற்றும் என பிரதமர் மோடி உறுதியளிக்கும் வரை சென்றது. மாணவர்கள் போராட்டத்தில் மத்திய அரசு பணிந்தது மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே மோதல் நிகழ்ந்தது. கடந்த வாரம் முழுக்க டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியே கலவரப்பூமியாக  மாறியிருந்தது.  காட்டமாக விமர்சித்த கங்கனா ரணாவத் இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “போராட்டக்காரர்களின் வீடியோக்களைப் பார்க்கும்போது அவை யாவும் வாந்தி வரவழைப்பவையாக உள்ளது. இந்த போராட்டக்காரர்கள் அழுக்கு, குப்பை மற்றும் அசிங்கத்தைப் பரப்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமல்லாமல் இந்த போராட்ட வீடியோக்களைப் பார்த்து தான் மிகவும் சோர்வடைந்து விட்டேன் எனவும், தனக்கு ஒரு ஓய்வு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர், “என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தை நான் கண்டதில்லை. ஜென் Z தலைமுறையின் போராட்டக் காட்சிகள் குமட்டலை வரவழைக்கிறது. அவர்கள் பேசும் விதமும், பயன்படுத்தும் மொழியும் என் வாழ்நாளில் மக்கள் இவ்வளவு உறுத்தலாகவும், இவ்வளவு அநாகரிகமாகவும் இருப்பதை கண்டதில்லை என காட்டமாக பேசியுள்ளார்.  Also Read: விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்! இவர்களையெல்லாம் எல்லாம் பெற்றெடுத்து வளர்ப்பது யார்?.. இந்திய நாடு என்பது பண்பாட்டு நுட்பத்தில் வேரூன்றிய, பலதரப்பட்ட அழகான மக்கள் வாழும் ஓர் இடம். ஆனால் நீங்கள் உங்களை கரப்பான் பூச்சிகள் என அழைத்துக் கொள்வதோடு அவற்றைப் போலவே நடந்துக் கொள்கிறீர்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் பங்கேற்ற இந்து பெண்களை சாடிய கங்கனா,  நான் அவர்களை சாக்கடைத் தலைமுறை என்று அழைக்கிறேன். இவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதில்லை. மிகவும் அசிங்கமானவர்களாகவும் ஊழல் நிறைந்தவர்களாகவும் இருப்பதால், இத்தகைய பெண்களால் ஒரு சிறந்த இல்லத்தரசிகளாகக் கூட இருக்க முடியாது” என மோசமான கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். 

abplive
ஜூலை 30
3 நிமிடம் படிக்க
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
இந்தியா

Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்

 Indian Billionaires: இந்தியர்களில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் 570 இந்தியர்கள்: இந்தியாவின் மிகவும் பெரிய பணக்காரர்களின் பட்டியல் என்பது மேலும் நீளமடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் தாக்கல் செய்த தரவுகளின்படி,  2025-26 மதிப்பீட்டு ஆண்டில் ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டும் தனி நபர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது 2024-25 காலகட்டத்தில் வெறும் 415 பேர் ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறதா? என நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மேற்குறிப்பிடப்பட்ட விவரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.    5 ஆண்டுகளில் 300% உயர்வு 5 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2021-22 காலகட்டத்தில் ஆண்டிற்கு குறைந்தபட்சம ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் தனி நபர்களின் எண்ணிக்கை 142 மட்டுமே ஆகும். அந்த எண்ணிக்கையானது தற்போது 300 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து இந்த பட்டியலில் புதியதாக 576 பேர் இணைந்துள்ளனர்.  ஒரு குறுகிய காலகட்டத்தில் பதிவான சரிவைத் தவிர மற்றபடி இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2021-22 காலகட்டத்தில் 142 ஆக இருந்த எண்ணிக்கை, 2022-23ல் 301 ஆக அதிகரித்தது. 2023-24 மதிப்பீட்டு ஆண்டில் மட்டும் 284 ஆக சரிந்தது. இருப்பினும் 2024-25 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 415 ஆக ஏறுமுகத்திற்கு திரும்ப,  2025-26 மதிப்பீட்டு ஆண்டில் 576 ஆக புதியௌச்சத்தை எட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் 'பில்லியனர்கள்' என குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், பில்லியனர் என்பதற்குத் தங்களிடம் அதிகாரப்பூர்வமான வரையறை இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதற்கு பதிலாக, ஆண்டு வருமானம் ரூ. 100 கோடி அல்லது அதற்கு மேல் இருப்பதாகத் தெரிவிக்கும் வரி செலுத்துவோரின் வருமான வரி அறிக்கை (ITR) தரவுகளை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  தரவுகள் இல்லை - அரசு பதில் 2025-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் அல்லது முந்தைய 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் அடிப்படையில் 'பில்லியனர்' என்ற சொல்லுக்கு சட்டப்பூர்வமான வரையறை எதுவும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு குறித்தும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அது எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்தும் அரசாங்கம் தரவுகளைப் பராமரிக்கிறதா என்ற கேள்விக்கு, அத்தகைய அதிகாரப்பூர்வ தரவுகள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. அதாவது"1957-ஆம் ஆண்டின் செல்வ வரிச் சட்டம் 01 ஏப்ரல் 2016 முதல் ரத்து செய்யப்பட்டது, மேலும் வரி செலுத்துவோரின் மொத்த செல்வம் குறித்த தரவுகளை அரசாங்கம் பராமரிப்பதில்லை," என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள்: Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்: மேற்குறிப்பிடப்பட்டுள்ள பெரும் பணக்காரர்கள் தொடர்பான புள்ளி விவரங்களானது, சமூகத்தில் அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மையை காட்டுவதாக கவலைகள் எழுகின்றன. ஆனால், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான நுகர்வு ஏற்றத்தாழ்வு இடைவெளி குறைந்து வருவதாக அரசு விளக்கமளிக்கிறது. வரி நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களின் கலவையின் மூலம் வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வைச் சரிசெய்து வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதம மந்திரி-கிசான், ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் போன்ற முதன்மைத் திட்டங்களுடன், வேலைவாய்ப்பு, புத்தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை அடங்கும். மேலும் இந்தியாவின் வருமான வரி அமைப்பின்படி, மிக அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் சாதாரண வருமான வரிக்கு மேலாகக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

abplive
ஜூலை 30
3 நிமிடம் படிக்க
ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பெட்டிக்கு மறு அவதாரம்: அசத்தும் உணவகம் திறப்பு!
பயணம்

ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பெட்டிக்கு மறு அவதாரம்: அசத்தும் உணவகம் திறப்பு!

பெரும்பாலும் பழைய ரயில் பெட்டிகளை ஏலம் எடுப்பவர்கள் சுக்கு நூறாக நொறுக்கி விற்பனை செய்து விடுவார்கள். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம் திறப்பு    ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நேற்று ரயில் பெட்டி உணவகம் திறந்து வைக்கப்பட்டது. மதுரை கோட்டத்தில் முதன்முறையாக வித்தியாசமாக ரயில் பெட்டியில் உருவாக்கப்பட்ட உணவகத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா துவக்கி வைத்தார். இதற்காக பழுதடைந்த பழைய ரயில் பெட்டி ஒதுக்கப்பட்டது. அதன் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உணவாகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பழைய ரயில் பெட்டிகளை ஏலம் எடுப்பவர்கள் சுக்கு நூறாக நொறுக்கி விற்பனை செய்து விடுவார்கள்.   பயணிகளை மட்டுமே சுமந்து சென்ற இந்த ரயில் பெட்டி, உணவகம் என்ற மறு அவதாரம் எடுத்துள்ளது.   ஆனால் ராமேஸ்வரத்தில் பயணிகளை மட்டுமே சுமந்து சென்ற இந்த ரயில் பெட்டி, உணவகம் என்ற மறு அவதாரம் எடுத்துள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த உணவகத்தில் வெளியில் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்ட சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஒன்றுக்குமே  உபயோகப்படாது என கருதப்பட்ட பழைய ரயில் பெட்டி ரயில்வே நிர்வாகத்திற்கு கணிசமான வருமானத்தை அளிக்கும். இந்த வித்தியாசமான முயற்சி ரயில் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவக துவக்க விழாவில் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், தெற்கு ரயில்வே துணை முதன்மை வர்த்தக மேலாளர் பி. வெங்கடசுப்பிரமணியன், கோட்ட வர்த்தக மேலாளர் டி. மோகனப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

abplive
ஜூலை 30
3 நிமிடம் படிக்க
அக்னி ஸ்தலத்தில் இப்படி ஒரு இடமா? திருவண்ணாமலையில் ஒளிந்திருக்கும் 'ஜில்' ரகசியம் - மிஸ் பண்ணிடாதீங்க!
பயணம்

அக்னி ஸ்தலத்தில் இப்படி ஒரு இடமா? திருவண்ணாமலையில் ஒளிந்திருக்கும் 'ஜில்' ரகசியம் - மிஸ் பண்ணிடாதீங்க!

Waterfalls near Tiruvannamalai: திருவண்ணாமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது விண்ணை முட்டும் கோபுரங்களும், அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலும் தான். கோடை காலங்களில் வெப்பம் சற்றே அதிகமாகக் காணப்படும் இந்த ஆன்மிக நகரத்திற்கு அருகிலேயே, மனதைக் குளிரவைக்கும் பல இயற்கை நீர்வீழ்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன என்பது பலரும் அறியாத உண்மை. குறிப்பாக ஜவ்வாது மலைத்தொடரின் மடியில் அமைந்துள்ள இந்த அருவிகள், கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க நினைக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிறந்த புகலிடமாக விளங்குகின்றன. ஜவ்வாது மலையின் ரத்தினம் - பீமன் அருவி திருவண்ணாமலை மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள மிக முக்கியமான சுற்றுலாத்தலம் பீமன் அருவி ஆகும். திருவண்ணாமலை நகரிலிருந்து சுமார் 84 கி.மீ. தொலைவில் இது அமைந்திருந்தாலும், அங்கு செல்லும் மலைப்பாதை பயணம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. அடர்ந்த காடுகளுக்கு இடையே பாறைகளில் மோதி விழும் நீரின் ஓசை, நகரத்தின் இரைச்சலில் இருந்து விடுபட்டு அமைதியைத் தேடுபவர்களுக்குப் பெரிய மருந்தாக அமைகிறது. சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இந்த அருவியை அடையலாம் என்றாலும், வழியெங்கும் காணப்படும் பசுமையான தாவரங்களும் மூலிகை வாசனையும் பயணக் களைப்பைத் தெரியாமல் பார்த்துக்கொள்கின்றன. குடும்பத்துடன் ஒரு நாள் பொழுதைக் கழிக்கவும், இயற்கை எழிலை ரசிக்கவும் இது ஒரு மிகச்சிறந்த இடமாகும். அமைதி தேடுபவர்களுக்கு ஏற்ற வெட்டவலம் அருவி பெரிய ஆரவாரம் இல்லாமல், அமைதியான சூழலில் ஒரு மாலைப் பொழுதைக் கழிக்க விரும்புபவர்களுக்கு வெட்டவலம் அருவி ஒரு வரப்பிரசாதம். திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் செல்லும் பாதையில் சுமார் 23 கி.மீ. தொலைவிலேயே இது அமைந்துள்ளது. இது மற்ற பெரிய நீர்வீழ்ச்சிகளைப் போல பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும், ஒரு சிறிய குன்றின் மீது இருந்து பாறைகளின் வழியாக மென்மையாக வழிந்தோடும் நீர் ஒருவித இதமான குளிர்ச்சியைத் தருகிறது. சாலை வசதிகள் நன்றாக இருப்பதால் கார் அல்லது பேருந்து மூலம் எளிதாகச் சென்றடையலாம். அருவிக்குச் செல்லும் குறுகிய மலைப்பாதை நடைப்பயணத்திற்கு இனிமையாக இருக்கும் என்பதால், உள்ளூர் மக்கள் வார இறுதிகளில் இங்கு அதிக அளவில் திரள்கின்றனர். வனமும் அருவியும் இணைந்த அமிர்தி நீர்வீழ்ச்சி வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ள ஜவ்வாது மலைப்பகுதியில், அமிர்தி வனவிலங்கு பூங்காவிற்குள் இந்த அருவி அமைந்துள்ளது. இயற்கை ஆர்வலர்களுக்கும், குழந்தைகளுக்கும் இது ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம். அருவிக்குச் செல்லும் வழியில் மான், நரி, காட்டுப்பன்றி மற்றும் பல அரிய வகை பறவைகளைக் காணும் வாய்ப்பு இருப்பதால், இது ஒரு சாகசப் பயணமாக அமைகிறது. இங்குள்ள சிறிய மிருகக்காட்சி சாலை குழந்தைகளுக்குப் புதிய அனுபவத்தைத் தரும். ஜூன் முதல் நவம்பர் வரை இங்குச் செல்ல உகந்த காலம் என்றாலும், கோடை காலத்திலும் இப்பகுதி குளிர்ச்சியாகவே காணப்படுகிறது. வனப்பகுதிக்குள் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், வனத்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாகப் பயணிப்பது அவசியமாகும். கோடை சுற்றுலாவுக்கான கூடுதல் தகவல்கள் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள இந்த அருவிகள் ஆன்மிகப் பயணத்தோடு இயற்கையையும் இணைக்கின்றன. ஜவ்வாது மலையில் பீமன் அருவி தவிர கிளியூர் அருவி போன்ற சிறிய நீர்வீழ்ச்சிகளும் ஆங்காங்கே உள்ளன. இந்த இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது, ஏனெனில் வனப்பகுதிகளில் கடைகள் குறைவாகவே இருக்கும். மேலும், அக்னி ஸ்தலத்தின் வெப்பத்தைத் தணிக்கச் செல்லும் போது இயற்கையை மாசுபடுத்தாமல், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து இந்த நீர்நிலைகளைப் பாதுகாப்பதும் நமது கடமையாகும். ஆன்மிகத் தேடலில் வருபவர்கள் ஒரு நாள் ஒதுக்கி இந்த அருவிகளுக்குச் சென்றால், மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைப்பது நிச்சயம்.

abplive
ஜூலை 30
3 நிமிடம் படிக்க
முந்தைய12அடுத்து

காட்சி 1 - 20 / 24 செய்திகள்