தமிழ் டைம்ஸ் logo
நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
21 நவம்பர், 2025
feedburner
இந்தியா

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்

பாட்னா: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய திலிப் ஜெய்ஸ்வால், "நாளை காலை 10 மணிக்கு பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். இதில், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சியின் மேலிட பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து என்டிஏ கூட்டம் நடைபெறும்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.