
பள்ளிக்கரணை ஏரியில் கழிவுநீர் கலப்பதை வேடிக்கை பார்க்கும் சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை!
நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கரணை அணை ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 49.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 1 ஏக்கரில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் ஏரியின் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.