தமிழ் டைம்ஸ் logo
BCCI: 'பெருமையாக இருக்கிறது; சிறுவனாக 15 வயதில் என்.!' - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டிராவிட்
16 மார்ச், 2026
vikatan
cricket

BCCI: 'பெருமையாக இருக்கிறது; சிறுவனாக 15 வயதில் என்.!' - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டிராவிட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) 2026-ம் ஆண்டிற்கான நமன் விருது விழா நேற்று( மார்ச்.15) நடைபெற்றிருக்கிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருதை வாங்கியப் பிறகு மேடையில் பேசியிருக்கும் ராகுல் டிராவிட் , " இந்த விருதைப் பெறுவது மிகவும் பெருமையாக இருக்கிறது. ராகுல் டிராவிட்நான் இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலம் முதல் இன்று வரையிலானத் தனது நீண்ட பயணத்தை இது பிரதிபலிக்கிறது. ஒரு சிறுவனாக, முதன்முதலில் 15 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினேன். அன்று முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தன்னுடைய சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு நான் செய்திருக்கிறேன். விளையாட்டில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் இருக்கிறது, அதில் நாம் நம் பங்கைச் சிறப்பாக செய்ய வேண்டும். அசாதாரண திறமையாளர்களையும், சிறந்த நிர்வாகிகளையும், பயிற்சியாளர்களையும் கொண்டது தான் இந்திய அணி. ராகுல் டிராவிட் உள்நாட்டு கிரிக்கெட்டும், ஜூனியர் கிரிக்கெட்டும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதால், திறமை வாய்ந்த வீரர்கள் வருகின்றனர். இதனால் தான் இந்திய அணி வெல்கிறது" என்று டிராவிட் பேசியிருக்கிறார்.

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் cricket செய்திகளை உள்ளடக்கியது.