தமிழ் டைம்ஸ் logo
IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த சஞ்சு சாம்சன்
17 மார்ச், 2026
vikatan
cricket

IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார். சஞ்சு சாம்சன்இந்நிலையில் PTI- க்கு பேட்டி அளித்திருக்கும் சஞ்சு சாம்சன், "ஐபிஎலில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினேன். தற்போது முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக விளையாடும்போது எனக்கு எந்த ஒரு எமோஷனலும் இருக்காது என நினைக்கிறேன். ஏனென்றால் அந்த ஆட்டம் வெற்றியாளர்களைத் தீர்மானிக்க போகிறது. ஆனால் போட்டிக்கு முன்பும், பின்பும் ராஜஸ்தான் அணியின் வீரர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் எமோஷன்ஸ் இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு நபருக்கும் ஓர் அணியில் குறிப்பிட்ட நேரம் அமையும். எனக்கான நேரம் வந்துவிட்டதால், சிஎஸ்கே அணி நோக்கி வந்துவிட்டேன். அந்த அணியில் என்னுடன் விளையாடிய நிறைய இளம் வீரர்கள் இருக்கின்றனர். சஞ்சு சாம்சன்அவர்கள் மீது எனக்கு அன்பும், மரியாதையும் இருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணியுடன் எனது பயணத்தைத் தொடங்க இருக்கிறேன். சிஎஸ்கே ரசிகர்கள் அவர்களுள் ஒருவனாக என்னை நினைப்பார்கள் என்று நம்புகிறேன். என்னால் முடிந்த வரை சிஎஸ்கேவிற்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுப்பேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் cricket செய்திகளை உள்ளடக்கியது.