தமிழ் டைம்ஸ் logo
காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை
17 மார்ச், 2026
vikatan
cricket

காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (மார்ச். 17) பாகிஸ்தான் கொடூரத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 250-க்கும் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், " காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பொதுமக்களின் வீடுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற கட்டமைப்புகளைத் திட்டமிட்டோ, இலக்கு வைத்தோ தாக்குதல் நடத்துவது போர்குற்றமாகும். குறிப்பாக புனித மாதமான ரமலான் மாதத்தில் மக்கள் மீது காட்டப்படும் இந்த அலட்சியம் அருவருப்பானது. இது ஆழந்த கவலைக்குரியது. இது பிரிவினையையும், வெறுப்பையும் மட்டுமே வளர்க்கும். இந்த கொடூரமான செயலை ஐக்கிய நாடுகள் சபையும் பிற மனித உரிமை அமைப்புகளும் முழுமையாக விசாரித்து, இதற்கு காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கானிய மக்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன். நாங்கள் இந்த காயங்களிலிருந்து மீண்டு வருவோம்" என்று வேதனைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் cricket செய்திகளை உள்ளடக்கியது.