தமிழ் டைம்ஸ் logo
நீலகிரி: பள்ளத்தில் சரிந்த யானை; இரண்டு தந்தங்களை மட்டும் மீட்ட வனத்துறை; என்ன நடந்தது?
18 மார்ச், 2026
vikatan
சுற்றுச்சூழல்

நீலகிரி: பள்ளத்தில் சரிந்த யானை; இரண்டு தந்தங்களை மட்டும் மீட்ட வனத்துறை; என்ன நடந்தது?

ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் முறையின்றி மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன.உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு இடம்பெயர முடியாமல் தவித்து வருகின்றன.மீட்கப்பட்ட தந்தங்கள் நில அமைப்பில் நாம் ஏற்படுத்தியிருக்கும் பெரிய அளவிலான மாற்றங்களால் யானைகள் தடம் மாறுவதுடன் அடிசிறுக்கி பள்ளங்களில் விழுந்து பரிதாபமாக உயிரிழக்கும் துயரங்கள் அண்மைக் காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.குறிப்பாக குன்னூர், கூடலூர் பகுதிகளில் இதுபோன்ற இறப்புகள் தொடர்கதையாகி வருகின்றன.இந்த நிலையில் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காட்டி மட்டம் பகுதியில் வனத்துறையினர் நேற்றுமுன்தினம் ரோந்து மேற்கொள்கையில் பள்ளத்தாக்கு பகுதியில் யானையின் எலும்புக்கூடு கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இரண்டு யானை தந்தங்களை மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட தந்தங்கள் இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "காட்டி மட்டம் வனப்பகுதியில் யானையின் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தோம். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடல் பாகங்களைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.நிலைத்தடுமாறி விழுந்த ஆண் யானை மேலே எழ முடியாமல் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இரண்டு தந்தங்களை மட்டும் முழுமையாக மீட்க முடிந்தது. இறப்புக்கான முழுமையான காரணம் உடற்கூராய்வு முடிவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்படும்" என்றனர்.`மசினகுடியின் அடையாளம்‌ மட்டுமல்ல எங்களின் செல்லக் குழந்தை' - ரிவால்டோ யானை மறைவால் கண்ணீரில் மக்கள்

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.