தமிழ் டைம்ஸ் logo
The Super Mario Galaxy Review: `ஆடினே இருப்பேன்' - அசத்தல் விஷுவல் ட்ரீட்; அனிமேஷனில் மேரியோ எப்படி?
18 செப்டம்பர், 2026
vikatan
பொழுதுபோக்கு

The Super Mario Galaxy Review: `ஆடினே இருப்பேன்' - அசத்தல் விஷுவல் ட்ரீட்; அனிமேஷனில் மேரியோ எப்படி?

கேலக்சியில் பல லூமாக்களை (நட்சத்திரங்கள் போல உருவம் கொண்டவை) தத்தெடுத்து வளர்க்கும் இளவரசி ரோசலினாவை ஜூனியர் பவுசர் கடத்துகிறார். ரோசலினாவின் சக்தி அனைத்தையும் உறிஞ்சி எடுத்து கேலக்சியை தன்வசப்படுத்த வேண்டுமென அவர் நினைக்கிறார். மஷ்ரூம் கிங்டமில் இருக்கும் மேரியோவும், லூயிஜியும் இளவரசி பீச்சுடன் இருக்கிறார்கள். The Super Mario Galaxy Movie Reviewதன்னுடைய பெற்றோர் யார் என்கிற கேள்விக்கு பீச்சுக்கு விடை தெரியாமல் இருக்கிறது. அப்படியான சமயத்தில், அவரின் சகோதரி ரோசலினாவை பவுசர் கடத்தி வைத்திருப்பதாக கேலக்சியிலிருந்து வந்த ஒரு லூமா தகவல் சொல்கிறது. சகோதரியைக் காப்பாற்ற கேலக்சிக்குப் புறப்படுகிறார் பீச்.அங்கு அவர் ரோசலினாவை காப்பாற்றினாரா, இதற்கு மேரியோ எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் இந்த 3டி அனிமேஷன் படத்தின் கதை.பிரபல ஹாலிவுட் நடிகர்களான கிறிஸ் பிராட், சார்லி டே, அன்யா டைலர் ஜாய், ஜாக் பிளாக் உள்ளிட்ட பலர்தான் இந்த 'தி சூப்பர் மேரியோ கேலக்சி' படத்தின் அனிமேஷன் கேரக்டர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள்.குழந்தைகளைக் கவரக்கூடிய கார்ட்டூன் தொனிக்கேற்ப அனைவரும் இந்த அனிமேஷன் உலகத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள். சூப்பர் மேரியோ வீடியோ கேம் கதாபாத்திரம் இதற்கு முந்தைய திரைப்பட பாகத்திலேயே நம்மைக் கவர்ந்திருந்தது.The Super Mario Galaxy Movie Reviewஆட்டம், கொண்டாட்டம், சூப்பர் ஹீரோத்தனம் என இந்த பாகத்தையும் சூப்பர் மேரியோ கதாபாத்திரம் முன் நின்று நகர்த்திச் செல்கிறது. லூயிஜி கதாபாத்திரமும், டைனோசர் கதாபாத்திரமும் மேரியோ செய்யும் சம்பவங்களுக்குப் பக்கபலமாக உடனிருக்கின்றன.சூப்பர் மேரியோ, ஸ்டார் ஃபாக்ஸ் உள்ளிட்ட நம்முடைய ஃபேவரைட் வீடியோ கேம் கதாபாத்திரங்கள் இந்த 'சூப்பர் மேரியோ கேலக்சி' படத்தில் ரகளைகள் செய்வது நாஸ்டால்ஜியா நினைவுகளையும் நம் கண் முன் நிறுத்துகிறது. தூரிகை மூலம் சூப்பர் பவர் கொண்ட பவுசர் கதாபாத்திரமும் சுவாரஸ்யமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!கண்கவர் விஷூவல்களை படைத்திட, 3டி அனுபவத்திற்காகவே பிரத்யேகமாக ஷாட்களை கம்போஸ் செய்திருக்கிறார்கள். அந்த திட்டத்திற்கு இலுமினேஷன் ஸ்டுடியோவும் கைகொடுத்து, இந்த முழு அனிமேஷன் உலகத்தையும் உயிர் பெறச் செய்திருக்கிறது.ரோசலினாவை காப்பாற்றச் செல்லும் படலத்தை படத்தொகுப்பாளர் எரிஸ் ஆஸ்மாண்ட் விறுவிறுவென கோத்திருக்கிறார். ஆனால், க்ளைமாக்ஸ் மட்டுமே தனி திரைப்படம்போல நீள்வது பார்வையாளர்களைக் கொட்டாவி விட வைக்கிறது.காட்சிகளுக்கு இடையில் கேம் வடிவத்தையும் ஆங்காங்கே இணைத்தது பரபர உணர்வைக் கூட்டும் நல்லதொரு யுக்தி. பின்னணி இசையில் இசையமைப்பாளர் ப்ரையன் டைலர் தட்டியிருக்கும் 'கீ'களும் க்ளிக் ஆகியிருக்கின்றன. சூப்பர் மேரியோவின் தீம் இசைக்கு புதிய வடிவம் கொடுத்த ஐடியாவுக்கும் 'ஃபிங்கர் ஹார்ட்ஸ்'!The Super Mario Galaxy Movie Reviewகடந்த 2023-ம் ஆண்டு வெளிவந்த 'தி சூப்பர் மேரியோ ப்ரோஸ்' படத்தின் சீக்குவலே இந்த `தி சூப்பர் மேரியோ கேலக்சி' திரைப்படம்.தன்னுடைய பின்னணி பற்றி அறியாமல் இருக்கும் இளவரசி, உதவி செய்ய அவர் களத்தில் குதிப்பது, அவருக்கு மேரியோ பக்கபலமாக இருப்பது என திரைக்கதையாசிரியர் மேத்யூ ஃபாகெல் எழுதிய சாதாரண கதையைக் கொண்டு இயக்குநர்கள் ஆரன் ஹார்வத் & மைக்கேல் ஜெலெனிக் இந்த உலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பெரியளவில் மஷ்ரூம் கிங்டமில் கதையை அமைத்திடாமல் முதல் அரை மணி நேரத்திலேயே கேலக்சிக்குப் பறக்கிறது திரைக்கதை.காளிதாஸ் 2 விமர்சனம்: காணாமல் போகும் குழந்தை; த்ரில் சேர்க்கிறதா இந்த பரபர போலீஸ் விசாரணை?கேலக்சிக்கு தூக்கிச் செல்லப்படும் அரண்மனையைக் காப்பாற்ற மரியோ & கோ படும் பாடுகள், அரண்மனையை இரண்டாக்கி அலப்பறை செய்யும் ஜூனியர் பவுசரின் காட்சிகள் போன்றவை சுவாரஸ்யம் குறையாமல் நகர்கின்றன.கேலக்சியில் இளவரசி பீச்சுக்கு வரும் சோதனைகள், 'ஆடினே இருப்பேன்' என அதனை அவர் அடித்துப் பறக்கவிடும் காட்சிகளும் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி நகர்கின்றன.ஆனால், ஸ்டார் ஃபாக்ஸ் வருகைக்குப் பிறகான காட்சிகள் 'ப்ரேக்டவுன்' ஆகிக் கதையை வேறு பக்கம் திருப்புகின்றன. இளவரசியைக் காப்பாற்றும் மிஷனிலிருந்து மாறி லூட்டி அடிக்கும் இந்தக் காட்சிகள் நம் பொறுமையைச் சோதிக்கின்றன.The Super Mario Galaxy Movie Reviewநாம் கணிக்கும் விஷயங்களே க்ளைமாக்ஸில் அடுத்தடுத்து திரையில் தோன்றுகின்றன. அந்த க்ளைமேக்ஸ் காட்சியும் நம்மைச் சுற்றலில்தான் விடுகிறது. வில்லனை அழிக்கச் சென்ற மேரியோ, பிறகு அவரையே காப்பாற்றும் க்ளைமாக்ஸ் எல்லாம் தொன்று தொட்டு வரும் பல அனிமேஷன் படங்களின் முடிவுகள் பாஸ்!சூப்பர் மேரியோ கேமை உருவாக்கிய நிண்டெண்டோ (Nintendo) நிறுவனத்தின் மற்ற கேம் கதாபாத்திரங்களும் இதில் ஆங்காங்கே கேமியோவாக வருகின்றன. ஆனால், அவை பெரியளவில் தாக்கத்தைக் கொடுக்கவில்லை.கதையாக நம்மை ஏமாற்றினாலும், அசரவைக்கும் விஷூவல்கள் மூலம் முழுமையான 3டி அனுபவத்தைத் தந்து சூப்பர் ரேங்க் வாங்குகிறார் மேரியோ!

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை உள்ளடக்கியது.