தமிழ் டைம்ஸ் logo
Singeetam Srinivasa Rao: இயக்குநர் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்
6 அக்டோபர், 2026
vikatan
பொழுதுபோக்கு

Singeetam Srinivasa Rao: இயக்குநர் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவருக்கு வயது 95.வயது மூப்பு காரணமாக இன்று இவர் இயற்கை எய்தியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. சிங்கீதம் சீனிவாசராவ்இந்தியாவின் முதல் டைம் டிராவல் படமான 'ஆதித்யா 369' படத்தை இயக்கியவர் இவர்தான். இதுமட்டுமல்லாமல், கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவை தென்னிந்திய சினிமாவுக்குப் பெரியளவில் பரிச்சயமில்லாத சமயத்திலேயே, அப்படியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.கமல்ஹாசனின் 100-வது படமான 'ராஜ பார்வை', 'பேசும் படம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்' ஆகிய கல்ட் கிளாசிக் படங்களை இயக்கியதும் இவர்தான். கமல், சிங்கீதம் சீனிவாசராவ்இந்தாண்டு இவர் இயக்கத்தில் 'சிங் கீதம்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 94 வயதில் இப்படத்தை இயக்கி, ஹாலிவுட்டில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் செய்த சாதனையை முறியடித்தவர் இவர். இவருடைய மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை உள்ளடக்கியது.