தமிழ் டைம்ஸ் logo
உத்தரப்பிரதேசம் தேர்தல்: காங்கிரஸ் VS சமாஜ்வாதி... தொகுதிப் பங்கீட்டில் மோதல் - பின்னணி என்ன?
8 அக்டோபர், 2026
vikatan
இந்தியா

உத்தரப்பிரதேசம் தேர்தல்: காங்கிரஸ் VS சமாஜ்வாதி... தொகுதிப் பங்கீட்டில் மோதல் - பின்னணி என்ன?

உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சியினரிடையே வார்த்தை மோதல் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட (403 தொகுதிகள்) உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்திலேயே தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் சமாஜ்வாதியும் காங்கிரஸும் கூட்டணி வைக்க விரும்புகின்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது. ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் VS சமாஜ்வாதி கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள சூழலில் தொகுதிப் பங்கீட்டால் காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சியினிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 150 முதல் 200 தொகுதிகள் வரை கோருகிறது. ஆனால், சமாஜ்வாதி கட்சியோ காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 50 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. இதற்குக் காரணமாகக் கடந்த கால தேர்தல் புள்ளிவிவரங்களையும் கள நிலவரத்தையும் சமாஜ்வாதி சுட்டிக்காட்டுகிறது. 'ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!'- சீமான் தொகுதி பங்கீடு மோதல்2022 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் அபார வெற்றி பெற்ற வேளையில், காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. மேலும், 2023 மாநிலத் தேர்தல்களின்போது சமாஜ்வாதிக்கு காங்கிரஸ் உரிய இடங்களை ஒதுக்க மறுத்த கசப்பான அனுபவங்களும், 2024 மக்களவைத் தேர்தலின்போது ஏற்பட்ட நீண்ட இழுபறிகளும் தற்போதைய தொகுதிப் பங்கீட்டு மோதலுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.SIR: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்திக்க அனுமதி மறுப்பா? நடைமுறையை மீறியதா 'இந்தியா' கூட்டணி?ராகுல் காந்திஆனால், தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தையும், ராகுல் காந்தியின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் சுட்டிக்காட்டி காங்கிரஸ் தொடர்ந்து கூடுதல் தொகுதிகளை வலியுறுத்தி வருகிறது.சமாஜ்வாதி எம்பி சிவ்பால் சிங் படேல் போன்ற தலைவர்கள், "கடந்த தேர்தலில் சமாஜ்வாதியின் முழுமையான ஆதரவால்தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். எனவே அவர்கள் 50 இடங்களுக்கு மேல் கேட்பது நியாயமற்றது" எனத் பகிரங்கமாகத் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். முற்றுப்புள்ளி வைக்க முயலும் அகிலேஷ் இந்தக் காரசாரமான வார்த்தை மோதல்களுக்கு நடுவே, சூழ்நிலையைச் சீரமைக்கும் விதமாகப் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "கூட்டணியில் எத்தனை இடங்கள் பெறுகிறோம் அல்லது எந்தத் தொகுதி யாருக்குச் செல்கிறது என்பது முதன்மையானது அல்ல. ஆளும் பாஜகவை வீழ்த்தி கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றியை உறுதி செய்வதே நமது தலையாய கடமை. இது தொகுதிகளைப் பற்றியது அல்ல, வெற்றியைப் பற்றியது" என்று கூறி சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றிருக்கிறார்.அகிலேஷ் யாதவ்அதேசமயம் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குள் நிலவும் இந்தச் சலசலப்புகளையும் கருத்து வேறுபாடுகளையும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இரு கட்சிகளும் தங்களின் பிடிவாதத்தைத் தளர்த்தி, விட்டுக்கொடுத்து உடன்பாட்டுக்கு வருமா? அல்லது இந்தத் தொகுதிப் பங்கீட்டு இழுபறி கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.`எங்களை சந்திக்க தேர்தல் ஆணையம் அஞ்சுவது ஏன்? ஞானேஷ் குமார் தப்ப முடியாது..!'- ராகுல் காந்தி காட்டம்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.