தமிழ் டைம்ஸ் logo
டோரதி: "கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர்.!"- படக்குழுவை பாராட்டிய கன்னட நடிகர் உபேந்திரா
9 அக்டோபர், 2026
vikatan
பொழுதுபோக்கு

டோரதி: "கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர்.!"- படக்குழுவை பாராட்டிய கன்னட நடிகர் உபேந்திரா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.'டோரதி' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். Dorothy | டோரதி அந்தவகையில் கன்னட நடிகர் உபேந்திரா 'டோரதி' படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார். இதுதொடர்பான வீடியோவை கார்த்திக் சுப்புராஜ் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருக்கிறார். இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி முகம்: அதிமுக கோட்டையை வென்ற விஜய்!|Results Live updatesவீடியோவில் பேசியிருக்கும் உபேந்திரா, " இப்போது தான் படத்தைப் பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர் என்று எல்லோரும் சொல்வார்கள். இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு உண்மையான கல்ட் என்றால் என்னவென்று புரிந்துவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர் தான். உங்களுக்கு (கார்த்திக் சுப்புராஜ்) தலைவணங்குகிறேன். டோரதியை பாராட்டிய உபேந்திரா இந்த மாதிரி ஒரு சப்ஜக்ட்டை கமெர்ஷியலாக எடுத்திருக்கிறீர்கள். ரிஷிகாந்த், சனந்த் இருவரும் நன்றாக நடித்திருக்கிறீர்கள். ரிஷிகாந்த் நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள். கமர்ஷியல் ஹீரோ மாதிரி இருக்கிறீர்கள்" என்று பாராட்டி இருக்கிறார்.சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை உள்ளடக்கியது.