தமிழ் டைம்ஸ் logo
Shruti Haasan: "எனக்கு கேமராவுக்கு பின்னால் இருந்து இயங்கத்தான் ஆசை!" - ஸ்ருதி ஹாசன்
6 அக்டோபர், 2026
vikatan
பொழுதுபோக்கு

Shruti Haasan: "எனக்கு கேமராவுக்கு பின்னால் இருந்து இயங்கத்தான் ஆசை!" - ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் தான் திரைத்துறைக்குள் நடிகையாக நுழைந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும், ஆரம்பத்தில் கேமராவுக்குப் பின்னால் நின்று எழுதவே தான் ஆசைப்பட்டதாகவும் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற 'இந்தியா டுடே சவுத் கான்கிளேவ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.ஸ்ருதி ஹாசன்2000-ஆம் ஆண்டு கமல் ஹாசன் இயக்கத்தில் வெளியான 'ஹே ராம்' திரைப்படத்தில் ஆடை வடிவமைப்புத் துறையில் அவரின் அம்மா சரிகாவுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் பணியாற்றியிருக்கிறார். அப்போது படப்பிடிப்பின் போது சர்தார் வல்லபாய் படேலின் மகள் கதாபாத்திரத்தில் நடிக்க உடனடியாக ஒரு நடிகர் தேவைப்பட்டிருக்கிறார். பின்பு அக்கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தார்.இதுகுறித்து கூறிய ஸ்ருதி, "எனக்கு எப்போதும் கேமராவுக்குப் பின்னால் இருந்து இயங்கதான் ஆசை. நான் எப்படி நடிகையானேன்னு எனக்கே தெரியவில்லை. அந்த சமயத்தில் தற்செயலாகத்தான் நடித்தேன். என் பெற்றோர் இருவருமே படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கச்சிதமான வேலையை எதிர்பார்க்கும் டாஸ்க் மாஸ்டர்கள். ஸ்ருதி ஹாசன்அவர்களுடன் வேலை செய்தது ஒரு சிறந்த அனுபவம். என் இசைத் தேவைகளுக்காகவும் சொந்தமாகச் சம்பாதிக்கவுமே பின்னர் 'லக்' திரைப்படத்தில் நடிக்கச் சம்மதித்தேன். அதன் பிறகே நடிப்பு மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது." எனப் பகிர்ந்திருக்கிறார்.தற்போது ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதியுடன் 'ட்ரெயின்', துல்கர் சல்மானோடு 'ஆகாசமிலோ ஒக தாரா' உள்ளிட்ட படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார்.

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை உள்ளடக்கியது.