தமிழ் டைம்ஸ் logo
Sigma: "படம் பார்த்துட்டு அம்மாவோட ரியாக்ஷன்...!" - ஜேசன் சஞ்சய்
6 அக்டோபர், 2026
vikatan
பொழுதுபோக்கு

Sigma: "படம் பார்த்துட்டு அம்மாவோட ரியாக்ஷன்...!" - ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Sigma Movie Stillsராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இன்று இப்படத்தின் முதல் காட்சியை கமலா திரையரங்கில், தன் தாய் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா ஷாஷாவோடு இணைந்து ஜேசன் சஞ்சய் பார்த்தார்.படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டார் ஜேசன் சஞ்சய். அங்கு, படத்திற்கு தாத்தா சொன்ன பரிந்துரைகள் குறித்தும், படம் குறித்து தன்னுடைய அம்மா என்ன சொன்னார் என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார். அவர், "தாத்தாவோட சஜசனை இந்த படம் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் கேட்கல. ஆனா, அந்த காலத்துல ஒரு வருஷத்துக்கு இரண்டு, மூணு படங்கள் இயக்கி ஜெயிச்சவர் அவர். ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்ற மாதிரி, எந்த இடத்துலயும் தேவையில்லாத செலவுகள் வைக்காம, ரொம்பவும் திறமையா படம் எடுக்கக்கூடிய ஒரு இயக்குநர் தான் எஸ். ஏ. சி சார். Jason Sanjayஅவரு என்கிட்ட நேரடியாக இதைச் சொல்லாவிட்டாலும், நாம எல்லாரும் அவர்கிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயம் இது. அப்புறம் என் குடும்பத்துல அம்மா, தங்கச்சி எல்லாரும் படம் பார்த்தாங்க. அவங்களுக்குப் படம் ரொம்ப பிடிச்சிருந்தது, பயங்கர ஹாப்பியா ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தாங்க!" எனப் பகிர்ந்திருக்கிறார்.

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை உள்ளடக்கியது.