தமிழ் டைம்ஸ் logo
திண்டுக்கல்: கிளம்பி சென்ற அதிகாரியை தடுத்து நிறுத்தி கல்குவாரியை மூட தீர்மானம்!
6 அக்டோபர், 2026
vikatan
இந்தியா

திண்டுக்கல்: கிளம்பி சென்ற அதிகாரியை தடுத்து நிறுத்தி கல்குவாரியை மூட தீர்மானம்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுசத்திரம் சமுதாயக் கூடத்தில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிளார்க் செந்தில் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் விவசாயம் , குடிநீர் ஆதாரங்கள் அப்பகுதியில் இயங்கிவரும் கல்குவாரியால் பாதிப்படைந்து விட்டதாகவும், அதனால் அந்த கல்குவாரியை மூட தீர்மானம் நிறைவேற்ற சுமார் அறநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட மனுவினை கொடுத்திருந்தனர்.இந்நிலையில் கண்டிப்பாக கல்குவாரி வேண்டும் என்று சிலரும் கையெழுத்திட்டு மனு கொடுத்திருந்தனர்.கூட்டத்தை நடத்திய அலுவலர் தீர்மானமாக நிறைவேற்றுவதற்கு பதிலாக மன்றம் பரிந்துரைக்கிறது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினர். இது தொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல் முருகன் கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார்.திண்டுக்கல் குவாரி மூட தீர்மானம்வட்டார வளர்ச்சி அலுவலரும் முதலில் தீர்மானம் என்ற வார்த்தைக்கு பதிலாக மன்றம் பரிந்துரைக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பொதுமக்களின் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்ற வார்த்தை சேர்க்குமாறு கூறியதனை தொடர்ந்து கல்குவாரி வேண்டும் என கூறிய நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் நேரடி வாக்குவாதமாக மாறியது. உடனே வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கிருந்து கிளம்ப முயன்றார்.பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி தீர்மானம் நிறைவேறியதும் கிளம்புங்கள் என கூறியதனை தொடர்ந்து ஒருவழியாக கல்குவாரியை மூடும் தீர்மானத்தை நிறைவேறியதாக அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.!

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.