தமிழ் டைம்ஸ் logo
வள்ளலார் சபை நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் - ஆட்சியர், எஸ்.பி-க்கு நீதிமன்றம் `கெடு’ விதித்த பின்னணி
12 அக்டோபர், 2026
vikatan
இந்தியா

வள்ளலார் சபை நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் - ஆட்சியர், எஸ்.பி-க்கு நீதிமன்றம் `கெடு’ விதித்த பின்னணி

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சத்தியஞான சபையின் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று, வள்ளலாரின் பின்தொடர்பாளர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், `பல கோடி மதிப்பிலான வள்ளலார் சபைக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தைச் சிலர் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பெருவெளி ஆக்கிரமிப்பு செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாக, பெருவெளியைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்' என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.வடலூர் சத்தியஞான சபைஅந்த வழக்கு உயர் நீதிமன்றம் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மனோகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், `பெருவெளியைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்புவது தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டு, அதற்கான மதிப்பீடுகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஆனால் சத்தியஞான சபை நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களின் விவரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தான் இருக்கின்றன. அந்தப் பட்டியலை அவர்களிடம் கேட்டிருக்கிறோம். ஆனால் இன்னும் கிடைக்கவில்லை' என்று கூறப்பட்டது. அதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் பட்டியலை வழங்க அவகாசம் கேட்டனர்.`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்அதையடுத்து, ``ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த 2024-ம் ஆண்டே அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில், அவர்களின் விவரங்களை வழங்க ஏன் இவ்வளவு தாமதம்? ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை நான்கு வாரத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இந்து சமய அறநிலையத்துறைக்கு வழங்க வேண்டும். அந்த விபரங்கள் கிடைத்ததும், சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். அதன்பிறகு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம்அத்துடன் பெருவெளியைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே பெருவெளியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலி சேதப்படுத்தப்பட்டது. அது தொடர்பான விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதனால் இந்த வழக்கில் கடலூர் மாவட்ட காவல்துறை எஸ்.பியை எதிர்மனுதாரராகச் சேர்க்கிறோம். பாதுகாப்பு வேலியைச் சேதப்படுத்தியது யார் என்பது குறித்து அவர் புலன் விசாரணை செய்து நவம்பர் 5-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.வடலூர்: கைவிடப்பட்டதா ரூ.100 கோடி திட்டம்? - வள்ளலார் சர்வதேச மையம் விவகாரத்தில் நடப்பது என்ன?

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.