தமிழ் டைம்ஸ் logo
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
30 ஜூலை, 2026
abplive
உலகம்

Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்

Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த சம்பவம் தொடர்பாக, மழலையர் பள்ளி ஆசிரியயை மீது வாரணாசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 5 வயது சிறுவனுக்கு சூடு வைத்த ஆசிரியை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இயங்கி வரும் தனியார் மழலையர் பள்ளியில் கழிவறைக்க செல்ல அனுமதிக்கபடாத நிலையில், 5 வயது சிறுவன் ஆடையிலேயே சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, கூர்மையான கத்தியை சூடுபடுத்தி சிறுவனின் பிறப்புறுப்பில் சூடுவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  பள்ளியில் நடந்தது என்ன? கடந்த 24ம் தேதியன்று நடந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் சிறுவனின் தந்தை புகாரளித்துள்ளார். அதன்படி, “வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது கழிவறைக்கு செல்ல வேண்டும் என சிறுவன் கேட்டுள்ளான். ஆனால், ஆசிரியை அனுமதி மறுத்து அமரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் இயற்கை உபாதையை கட்டுப்படுத்த முடியாமல் தனது பேண்டிலேயே சிறுவன் சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவரை சரமாரியாக தாக்கியதோடு, தனி அறைக்கு அழைத்துச் சென்று பிறப்புறுப்பில் சூடு வைத்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காயத்துடன் அழுதபடியே வீடு வந்த மகனை, கண்டு விவரங்களை கேட்டறிந்ததும் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆசிரியை மீது வழக்குப்பதிவு குழந்தையின் தந்தை லால்பூர்-பாண்டேபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, ஜூலை 25 அன்று ஆசிரியர், பள்ளியின் முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது பாரதிய நியாய சம்ஹிதாவின் (BNS) 115(2) (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்), 118(1) (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்) மற்றும் 351(2) (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது.  வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, ஆய்வுக்காக பள்ளியின் சிசிடிவி காட்சிகள் மற்றும் டிவிஆர் (DVR) ஆகியவை கைப்பற்றப்பட்டன.  மேலும் பள்ளியின் சமையலறையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாம். இதையும் படியுங்கள்: Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன? பெற்றோர் அதிர்ச்சி..! மழலையர் பள்ளிகள் போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் குடும்ப பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, நகரங்களில் பெரும்பலான வீடுகளில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்கின்றனர். அந்த நேரத்தில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வீட்டில் ஆட்கள் இல்லாததால், பணம் கொடுத்து டே-கேர் போன்ற நிலையங்களில் விட்டுச் செல்கின்றனர். ஆனால், அந்த அந்த இடங்களில் பணியாற்றுபவர்கள் குழந்தைகளை மிகவும் மோசமாக கையாளவது என்பது  பெற்றொரின் புதிய கவலையாக உருவெடுத்துள்ளது. மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் அண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் உலகம் செய்திகளை உள்ளடக்கியது.

அதிகம் படிக்கப்பட்டது