
நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்
புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவமனையில் உமர் நபி மருத்துவராக பணியாற்றி வந்தார். அங்கு சக மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் உமர் நபி தலைமறைவானார். இதன்பிறகு ஹரியானாவின் நூ நகரில் அவர் 10 நாட்கள் பதுங்கி இருந்துள்ளார். அங்கு ஹிதாயத் காலனியில் உள்ள வீட்டில் அவர் தங்கியிருந்து உள்ளார். இந்த வீடு, அல் பலா மருத்துவமனை ஊழியர் சோகிப்பின் உறவினர் வீடு ஆகும். சோகிப் கைது செய்யப்பட்டு உள்ளார். வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.