
2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு
புதுடெல்லி: கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடந்த அக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறும் பணியை உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது தாத்ரியின் படுகொலை சம்பவம். மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்ததாகக் கூறி முகமது அக்லாக், கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.