
`தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை !' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி வருகிறார். அதின் முக்கிய வாக்குறுதிகள் தொகுப்பு... * நாதக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு தனித்தொகுதி* தமிழக தேசிய மரமாக பனைமரம் அறிவிக்கப்படும்* தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள் அறிவிக்கப்படும்சீமான் * அனைவருக்கும் அரசு வேலை* பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை * தலைமை செயலகம், சட்டமன்றம் உள்ளிட்டவை திருச்சியில் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்படும்* அரசு பள்ளிகள், கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை* நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை கடைப்பிடிக்கப்படும். * சமூக நீதி, வாழ்வியல், தொன்மம், ஒழுக்கம் முதலியவை தொடக்கப்பள்ளி முதலே கற்றுத்தரப்படும் * நீர்நிலைகளின் கரைகளில் மண் அரிப்பைத் தடுக்கவும், கரையை வலிமைப்படுத்தவும் ஆல், அரசு, பனை, புங்கை, பூவரசு, மூங்கில், வேம்பு, புளி போன்ற மரங்கள் நடப்படும்.* புதிய கண்மாய்கள், ஏரிகள் உருவாக்கப்படும்.* நாம் தமிழர் கட்சி தண்ணீர் வணிகத்திற்கு தடைவிதிக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் அரசே தூய குடிநீர் கொடுக்கும். * குளிர்பானத் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும். * தூய குடிநீர் கட்டணமின்றி வழங்கப்படும்.சீமான் * தமிழக வேளாண் பல்கலைகழகங்களில் இயற்கைவழி, மரபு வேளாண் ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். * வேளாண் பொருட்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை உயர்த்தப்படும்.* மருத்துவப்படிப்பு தூய தமிழ்மொழியில் நடத்தப்படும். அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும்.* புதிய பல் மருத்துவக் கல்லூரிகள் மாவட்டம் தோறும் தொடங்கப்படும். * கட்டணமில்லா தங்கும் விடுதிகள் வசதி வழங்கப்படும். * ஒவ்வொரு ஊராட்சியிலும் தரம் வாய்ந்த விளையாட்டு பயிற்சி திடல்கள், பயிற்சியாளர்கள் ஊராட்சி அளவிலேயே அமர்த்தப்படுவார்கள். * விளையாட்டு பல்கலைக்கழகம் தொடங்கப்படும். * அனைத்து தொகுதிகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலை வாய்ப்பு வழங்கப்படும்.* மாற்றுதிறனாளிகளுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.* தமிழக மீனவர்களைப் பாதுகாக்க சிறப்பு கடலோர காவல்படை 'நெய்தல் படை' என்ற பெயரில் உருவாக்கப்படும்.* பெண் காவலர்களுக்கு 6 மணி நேர வேலை, ஆண் காவலர்களுக்கு 8 மணி நேர வேலை என்று மாற்றியமைக்கப்படும்.சீமான் * காடுகளை பாதுகாக்க சிறப்பு திட்டகங்களும், புதிய சட்டங்களும் உருவாக்கப்படும்.* சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஒழித்து தமிழ்குடிமக்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை.* படிப்படியாக ஓராண்டிற்குள் மது ஒழிக்கப்படும்.* ஆவணப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரப்படும்" என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.
இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.