
நேற்று இரவு சென்னையில் இடி மின்னலுடன் மழை; இன்றும் தொடருமா? - சென்னை வானிலை மையம் சொல்வதென்ன?
பனி, குளிர் எல்லாம் முடிந்து, பிப்ரவரி மாதத்தின் பாதியில் இருந்து தான் தமிழ்நாட்டில் வெயில் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வந்த இந்த நேரத்தில், நேற்று இரவு சர்ப்பரைஸ் என்ட்ரியாக சென்னை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை எட்டிப்பார்த்துள்ளது. சென்னையில் இன்றும் மழை பெய்யுமா?நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "இன்று (மார்ச் 19), ஓரளவு மேகமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். நாளை (மார்ச் 20) ஓரளவு மேகமூட்டம் இருக்கும். சென்னை மழைதங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா?மார்ச் 21-ம் தேதி ஓரளவு மேகமூட்டம் மற்றும் லேசான மழை பெய்யலாம். மார்ச் 22, 23 மற்றும் 24 தேதிகளில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும்.". மேலும், வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail
இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.