தமிழ் டைம்ஸ் logo
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
17 ஜூலை, 2026
abplive
வணிகம்

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

தங்கத்தில் முதலீடு தங்கத்தின் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் விலையானது சரசரவென உயர்ந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வதால் நல்ல லாபத்தை கொடுக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தின் முதலீடு செய்து வருகிறார்கள். அதிலும் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தால் மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி வந்தன. இதனால் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியதால் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது போட்டி போட்டு தங்கம் வாங்கும் மக்கள் தங்கத்தின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் எப்போதும் அலைமோதி வருகிறது. அந்த வகையில், இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு என தனி இடம் கொடுக்கப்படுகிறது. எனவே தங்கத்தை மக்கள் அதிகளவு வாங்க வருகிறார்கள். மேலும் தங்கம் எதிர்கால சேமிப்பாக இருப்பதாலும்  தங்கத்தை தங்களால் முடிந்த அளவு மக்கள் வாங்கி வருகிறார்கள்.  ஏறி இறங்கும் தங்கம் விலை ஜூலை 13 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,05,600 ரூபாய்க்கு விற்பனை. ஜூலை 14 ஆம் தேதி  கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 13,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை. ஜூலை 15 ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13ஆயிரத்து 180 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,05,440 ரூபாய்க்கு விற்பனை. ஜூலை 16 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 13,150 ரூபாயக்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை. இன்றைய தங்கம் விலை என்ன.? தங்கத்தின் விலையானது ஒரு நாள் குறைந்தால் அடுத்த நாள் அதிகரித்து நகைப்பிரியர்களை ஷாக் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் வணிகம் செய்திகளை உள்ளடக்கியது.